ஊரடங்கில் தமிழ்புத்தாண்டை வரவேற்போம்

  • by

தமிழ் புத்தாண்டு நாளை பிறக்கின்றது. தமிழகம்  முழுவதும் தமிழ் புத்தாண்டு ஊரடங்குடன் அவரவர் வீட்டில் கோலகாலமாக கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு  தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் விழாக்கள் நடைபெறாது, சிறப்பு பூஜைகள் செய்ய முடியாது. உலகம் முழுவதுள்ள தமிழர்கள் கொண்டாடும் தமிழ்  புத்தாண்டில் அனைவரும் வீட்டை அலங்கரித்து கோவில் செல்வது வழக்கம் ஆனால் இம்முறை அனைவரும் வீட்டை வழக்கம் போல் கொண்டாடலாம். ஆனால் வீட்டில் இருந்துதான் கொண்டாட முடியும்.  

தமிழ் புத்தாண்டு  தமிழகம் மட்டுமல்லாமல் இலங்கை, மொரிசியா, மலேசியா, சிங்கப்பூர்,  கனடா போன்ற நாடுகளில் எல்லாம் பிரம்மாண்டமாக தமிழர்களால் கொண்டாடப்படுகின்றது. தமிழ் புத்தாண்டில் புதியதாக  பலகாரம் படைத்து அனைவரும் கோவில் சென்று , உறவினர்கள் அயலார்களுடன் உணவு பகிர்ந்து உணபது வழக்கமாக கொண்டுள்ளனர். 

தமிழ் புத்தாண்டு விளக்கம்: 

தமிழ் புத்தாண்டு என்பது வானியல் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தை கொண்டது ஆகும். பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள் 6  மணி, 11 நிமிடம் 48 நொடிகள் ஆகின்றது. தமிழ் வருடப்பிரப்பானது சூரியன் மேஷ இராசியில் பிரவேசிக்கும் காலம் புத்தாண்டு கொண்டாடப்படுவது வழக்கம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டுக்கும் ஒரு  வருட காரிய பெயர் உண்டு அதன்படி இவ்வாண்டு சார்வாரி ஆண்டாக கொண்டாடப்படுகின்றது. 

சித்திரையின் தொடக்கத்தில் தமிழ் மக்கள் தங்கள் ஜாதகப் பலன்கள் குடும்பம், தொழில், திருமணம்,படிப்பு என அனைத்திற்கும் பார்பத்துண்டு.  இவ்வாண்டு அனைத்தும் கொரானாவால் முடங்கி கிடக்கின்றது இருப்பினும் ஜாதகப் பலன்கள் அனைத்தும் இப்பொழுது ஆன்லைனில் கிடைக்கின்றது அதனை மக்கள் எளிதில் வரலாம்.   சித்திரை கொண்டாட்டங்களில் வீட்டில் அவரவர் பொன், வெள்ளி, நடை, ஆபரணங்கள், பணம, நிலைக்கண்ணாடி வெற்றிலை, பாக்கு, பழங்கள், தேங்காய், மலர்கள் போன்ற மங்களப் பொருட்கள் வைத்து பிரார்த்தனை  செய்வது வழக்கம் ஆகும். 

மேலும் படிக்க: ஊரடங்கில் வீட்டில் வேலைப்பார்க்கும் பொழுது கவனம்

ஊரடங்கில் சில சலுகைகள்: 

புத்தாண்டு தொடங்குவதால் நாடு   முழுவதும் இன்றுடன் தங்கள் ஊரடங்கை இறுதி நாளாக கொண்டு 14 ஆம் தேதியுடன் முடித்துக் கொள்ள ஆவலாக இருந்தனர், ஆனால் கொரானா கொள்ளை நோயால் இன்னும் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஆனால்  இந்த ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப்பின் சில முக்கிய ஆலைகள், மீன்பிடித் தொழிகள் எல்லாம் இயங்கலாம் என அறிவிக்கப்படுகின்றது. இதனால் அதிக அளவில் கெடுபிடிகள் எல்லாம் இருக்காது என மக்கள் நம்புகின்றனர். 

அடிப்படை தொழில்கள் எல்லாம் முறையாக நடத்த மக்களுக்கு அனுமதியுண்டு அதே சமயம் கட்டுப்பாடுகள் எல்லாம்  அப்படியே இருக்கும். அவசியமான துறைகள் எல்லாம் இயங்க வேண்டும் என்கின்றது. 

சித்திரை வருடப் பிறப்பு நல்ல மழை  கொடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கு சில சிக்கல்களை கொடுக்கும் ஆனால் கைவிடாது  என்று பஞ்சாகம் கூறுகின்றது. இந்த ஆண்டில் உஷ்ணம் மழையும் ஆக்கிரமிக்கும் என கணிப்புகள் கூறுகின்றன.  இந்த சர்வாரி ஆண்டிலும் புதிய நோய் தாக்கும் என எச்சரிப்புகள் கிடைத்துள்ளது. 

சார்வாரி  ஆண்ட்ல் 18 வகை மக்கள் வீரமிளப்பார்கள், மழை இல்லா பஞ்சம் வரும், நன்பயிற் விளைச்சல் குறையும்.  என்றாலும் வருகின்ற நன் மாற்றத்தை நோக்கி மக்கள் காத்திருக்கின்றனர். 

ஆரோக்கியம் அதிகரிக்க வேண்டும். வேலைகள் கிடைக்க வேண்டும். விவசாயம் பெருக்க வேண்டும் தர்சார்ப்பு பொருளாதாரத்தைப்  பெருக்க வேண்டும் போன்றவற்றை மக்கள் கருத்தில் கொண்டு செயல்படுவார்கள். 

மேலும் படிக்க: கொரானா காலத்தில் விழிப்புணர்வு அவசியம்

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன