பசியால் தத்தளிக்கும் இந்திய கிராமங்கள்

  • by

இந்தியாவில் இன்று கொரானா கொடுக்கும் தொல்லைகளால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு விவசாயம் தவிர  மற்ற எல்லா துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனைப் போக்க நாம் அதிகளவில் மெனக்கெட வேண்டும். கொரானாவில் தினசரி வேலை செய்து சம்பாதிப்பவர்கள் பாடு பெரும் திண்டாட்டமாக இருக்கும்.  

வேலை இல்லை: 

பெரும்பாலோனோர் தங்கள் வேலைகள், சுய தொழில் ஆர்டர்கள் என அனைத்தும் இழந்து தவிக்கின்றனர். கொரானாவால் வெளி நடமாட்டம்  செய்ய அனுமதி இல்லை. பல இந்திய கிராமங்களில் உணவு இல்லை. கோவித்- 19 தொற்றால் வட இந்திய மாநிலங்களில் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.  கிராமங்களில் ரேசன் பொருட்கள் முறையாக கிடைக்கப்படுவது இல்லை. தங்களுடைய வாழ்வியலை பசியுடன் கிராம மக்கள் கழிக்கின்றனர் என்பது வேதனைக்குரிய  செய்தி ஆகும். 

கோவித்தால் வாழ்வு பாதிப்பு:

கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பரவுவதை சரிபார்க்க அரசாங்கம் அறிவித்த நாடு தழுவிய பூட்டுதலுக்கு மத்தியில், வழக்கமான சமூக நலத் திட்டங்களிலிருந்து விலகியிருக்கும் குடும்பங்கள் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகுகின்றன.   ரேசன் கார்டுகள் இல்லாத குடும்பங்கள் இந்தியாவில் ஏராளம் அவைகளின் அன்றாட வாழ்க்கையானது கொடூரமாக இருக்கின்றது. 

மேலும் படிக்க: கொரோனா வைரஸினால் வேலை இழப்பு அதிகரிக்குமா..!

அரசு உதவ வேண்டும்:

மத்திய உணவு பாதுகாப்புத் திட்டம் தற்போது சுமார் 800 மில்லியன் மக்களை கொண்டது. அல்லது இந்திய மக்கள்தொகையில் 62% மக்களை உள்ளடக்கியது, ஆனால் அதன் ஏழ்மையானவர்களில் பலரை வெளியேற்றுகிறது.  ஏன் இந்த வெளியேற்றம் என்றால் அதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி ரேசன் கார்டுகளில் பெயர் சேர்க்க, புதிப்பிக்க முடியாமல் விடுப்பட்டுள்ளனர்கள். இத்தனை நாள் ஓடியோடி வாழ்ந்த மக்கள் இன்று முடங்கியிருக்கின்றனர். தொற்று நோயானா கொரானாவால் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை போராட்டத்தில் நடத்துக்கின்றனர். லாக்டவுன் காலத்தில் இந்தியாவில் பலகிராமங்கள் உணவுக்கு தத்தளிக்கின்றனர். 

தத்தளிக்கும் இந்திய கிராமங்கள்:

இந்தியாவில் தத்தளிக்கும் கிராமங்களை  நாம் காக்க வேண்டும். கொரானாவில் குழைந்து போயிருக்கும் பல குடும்பங்களுக்கு தேவையானவற்றை கொண்டு சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.  வேலை இழந்து அன்றாட வருமானத்தை பெற முடியவில்லை. இன்றைய நிலையில் பிச்சை எடுத்துக்கூட சாப்பிட முடியாத அவலநிலையில் மக்கள் வாடுகின்றனர். ஜார்க்காண்ட், பீகார்,  உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் தடுமாறுகின்றன. தமிழ்நாட்டிலும் இந்த அவலங்கள் அரங்கேறுக்கின்றது. அடையாளம் காணப்பட வேண்டிய நமது நாட்டின் அன்றாடம் பிழைப்பு காண்போர்களை நாம் காக்க வேண்டும். அவர்களுக்கான மாற்று ஏற்பாட்டை அரசு கணக்கில் எடுக்கப்பட வேண்டும். 

மேலும் படிக்க: தீவிர கோவித் தொல்லையை தீர்க்க இன்னும் சில நாட்கள் ..

நாம் கண்டுபிடித்த புதிய தொழில் நுட்பங்கள், புதிய முயற்சி ஆகிய அனைத்துக்கும் அடிப்படை பசி அறியாமல்  நாம் செய்தோம். ஆனால் இன்று அந்த கொடுமை 2020 இல் இந்தியாவில் இருக்கின்றது. 

அதுவும் இக்கடான கொரானாவில் இலட்சக்கணக்கானோர் பசியில் வாடுகின்றனர் எனில் நமது  வளர்ச்சி, கண்டுபிடிக்குகள், தொலை நோக்குப் பார்வையை ஒரு முறை நாம் திரனாய்வு செய்ய வேண்டும். வளங்கள் பங்கீடு அதில் உள்ள வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை அரசு உறுதி செய்ய வேண்டும். ராமனோ, ராவணனோ யாரோ ஆண்டுக்கொள்ளுங்கள் அடுத்த வேலை சாப்பாடு வேண்டும் என கேட்கும் அலரல்கள் கேட்டால் என்ன  வாழ்வியல்டா இது என கேட்கத் தோன்றுகின்றது. இந்த பசி அவலம் மற்ற நாட்களில் வந்தால் பார்க்கலாம் ஆனால் இது இக்கட்டான ஊரடங்கில் வெளியில் தெரிய வரும் பொழுது கொடுமையிலும் கொடுமை நோய் காலத்தில் பசிக் கொடுமை என்ற வரிகள் இதயத்தை ஆட்டுகின்றன.

மேலும் படிக்க: வீட்டிலுள்ள எளிய மூலிகையில் எல்லாம் இருக்கு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன