பிரசாந்தின் அடுத்த படம் இதுதானுங்க..!

next film of top star actor prasanth

ஆசையில் ஓர் கடிதம், வின்னர், தமிழ், ஜீன்ஸ் என பல வெற்றிப் படங்களில் நடித்திருந்த நடிகர் பிரஷாந்த் 90களில் மிகப்பெரிய காதல் மன்னனாக இருந்தார். ஆனால் சமீப காலமாகவே அவருக்கு எந்த படமும் சிறப்பாக அமையாததால் இவரின் சினிமா வாழ்க்கை பெரிதாக பாதிப்படைந்து இருக்கிறது. கடைசியாக தமிழில் 2018 இல் ஜானி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் மிகப்பெரிய தோல்வியை தந்தது. அதைத்தொடர்ந்து கடந்த வருடம் தெலுங்கில் விணைய வித்ய ராமா என்ற படத்தில் துணை நடிகராக நடித்தார். அதன்பிறகு எந்த பட வாய்ப்பும் அவருக்கு அமையவில்லை.

அவருக்கு அக்காலத்தில் பல நடிகர்கள் போட்டியாக இருந்தார்கள், ஆனால் இன்று மற்றவர்கள் நல்ல நிலையில் இருக்கும்போது நடிகர் பிரசாந்க்கு மட்டும் பட வாய்ப்புகள் எதும் கிடைக்காமல் வருத்தத்தில் உள்ளார். இதனால் அவரின் தந்தை தியாகராஜன் அவர்கள் இவரை வைத்து அடுத்த படம் இயக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார்.

மேலும் படிக்க – சூரரைப் போற்று சூர்யாவின் வாழ்க்கை முறைகள்.!

கடந்த வருடம் மூன்று தேசிய விருதுகளை வாங்கிய அந்ததுன் என்ற இந்தி படத்தை தமிழில் மொழிபெயர்க்க திட்டமிட்டுள்ளார் அவரின் தந்தை தியாகராஜன். அந்ததுன் திரைப்படம் இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருந்தார் நடிகர் ஐஸ்மான் குரானா கண் தெரியாதவர் வேடத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். ராதிகா ஆப்தே, தபு போன்ற முன்னணி நடிகைகள் நடித்திருக்கும் இந்தப் படத்தில் ஏகப்பட்ட ட்விஸ்ட்கள் கொண்டுள்ளது. உண்மையில் இந்தப் படம் தமிழ் ரசிகர்களை பெரிதும் பாதிப்படைய செய்யும் என்றே எதிர்பார்க்கலாம்.

அந்ததுன் திரைப்படத்தில் திரைக்கதை நம் எதிர்பார்ப்பிற்கு மேலாகவே இருக்கும். இதை இந்தியில் பார்த்தவர்களுக்கு இந்தப் படத்தைப் பற்றி தெரிந்திருக்கும். ஆனால் பார்க்காதவர்கள் பொறுத்திருந்து தமிழில் பார்ப்பது நல்லது. ஆனால், இந்த படத்தை எந்த அளவிற்கு இவர்கள் எடுக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. இந்தப் படத்திற்கான உரிமையை இயக்குனர் தியாகராஜன் பெற்றுள்ளார். இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதால் நடிகர் பிரசாந்த் மீண்டும் பிசியாகி உள்ளார்.

மேலும் படிக்க – சிவாஜி கணேசனின் பேரனும் விக்ரம் பிரபுவின் வாழ்க்கைமுறை.!

அந்ததுன் படத்தை தொடர்ந்து நடிகர் பிரசாந்த் வெங்கடேசன் இயக்கத்தில் அடுத்த படம் நடிக்க இருக்கிறார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. பகவதி, மலைமலை, துரை போன்ற படங்களை இயக்கி பல படங்களில் நடித்திருக்கும் இயக்குனர் வெங்கடேஷ் அவர்களின் அடுத்த படத்தில் நடிகர் பிரசாந்த் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த வருடமாவது நடிகர் பிரசாந்தின் வாழ்க்கை திருப்புமுனையாக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன