சாயிஷா ஆர்யாவின் சமூக வலைதள கொண்டாட்டம்..!

  • by
new photos of arya sayeesha in social media

கொரோனா வைரஸின் பாதிப்பினால் நாடு முழுவதும் ஊரடங்கில் இருக்கிறது, இதன் மூலமாக சாதாரண மக்கள் முதல் ஏராளமான சினிமா பிரபலங்கள் வரை எல்லோரும் வீட்டில் தனிமையாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இவர்கள் பொழுதுபோக்கிற்காக தங்களால் முடிந்த காணொளிகளை உருவாக்கி அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இப்படி ஏராளமான நடிகர் நடிகைகள் தங்களுக்கு பிடித்த செயல்களை செய்து சமூக வலைத்தளங்களில் இவர்களை பின்தொடரும் ரசிகர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறார்கள்.

சாயிஷா ஆர்யா

ஆர்யா மற்றும் சாயிசா இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்கள் இணைந்து “கஜினிகாந்த்”, “மாற்றான்” மற்றும் “டெடி” என்ற படங்களில் நடித்துள்ளார்கள். இதில் “கஜினிகாந்த்” மற்றும் “மாற்றான்” திரைப்படம் ஓரளவுக்கு வசூலைப் பெற்றது இதற்கு அடுத்தபடியாக இவர்கள் நடித்துள்ள டெடி எனும் ஃபேண்டசி படத்தின் புரோமோஷன் காட்சிகளை யூடியூபில் வெளியிட்டு வருகிறார்கள். இதற்கிடையே இவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இது சம்பந்தமான ட்விட்களை செய்து வருகிறார்கள்.

மேலும் படிக்க – கொரோனா வைரஸிர்க்கான விழிப்புணர்வு பாடல்கள்..!

ஃபேண்டசி திரைப்படம்

“டிக் டிக் டிக்” படத்தை இயக்கிய இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் அவர்கள் இந்த டெடி  திரைப்படத்தையும் இயக்கியுள்ளார் அதைத் தவிர்த்து இவர் விஷுவல் எபெக்ட்ஸ் மூலமாக திரைப்படத்தை உருவாக்குவதில் சிறந்தவர். எனவே இவர் திரைப்படம் அனைத்துமே ஹாலிவுட் திரைப் படத்திற்கு நிகராக இருக்கும் என ரசிகர்கள் கூறுகிறார்கள். அதே போல் இந்த படத்தின் டிரைலரை பார்த்த அனைவரையும் இத்திரைப்படம் கவர்ந்துள்ளது.

3 மில்லியன்

டெடி படத்தின் ட்ரெய்லரை கிட்டத்தட்ட மூன்று மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளார்கள். எனவே இதைக் கொண்டாடும் வகையில் ஊரடங்கிள் இருக்கும் ஆர்யா மற்றும் சாயிசா இருவரும் தங்களது சமூக வலைத்தளங்களில் ஏராளமான பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள். இதைத் தவிர்த்து இதுபோன்ற சூழலில் எப்படி ஆண் பெண் இருவரும் அன்பை பரிமாறிக் கொண்டு ஏதாவது ஒரு செயலை செய்ய வேண்டுமோ அதை மிகச் சரியாக செய்து வருகிறார்கள்.

மேலும் படிக்க – ரித்திக் ரோஷன் குடும்பத்தை ஒன்றிணைத்த கொரோனா..!

எனவே இந்த பிரபலங்களை பின் தொடர்ந்து எல்லா காதலர்களும் ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். அதேபோல் இது போன்ற சூழலில் வீட்டில் இருக்கும் தம்பதியினர்கள் எப்படி செயல் படவேண்டும் என்பதை இது போன்ற பிரபலங்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன