கொரோனா வைரஸ்க்காண மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா..!

  • by
new medicine found for corona virus

கடந்த டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுக்க அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதைத் தடுப்பதற்கு உலகம் முழுக்க இருக்கும் மருத்துவர்கள் தங்களால் முடிந்த வரை இதற்கான மருந்துகளை கண்டு பிடித்து வருகிறார்கள். ஒரு சில இடங்களில் இந்த மருந்து வெற்றி அடைந்துள்ளது என்று கூறினாலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் உறுதியாக இல்லை. எனவே உலக நாடுகள் இந்த கொரோனா வைரஸை தடுப்பதற்கு என்னென்ன மருந்துகளை கண்டுபிடித்து உள்ளார்கள் என்பதை காணலாம்.

டொனால்ட் ட்ரம்ப்

சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா பிரதமர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸை தடுப்பதற்கான மருந்து ஒன்றை எல்லோருக்கும் தெரியப்படுத்தினார். அது வேறொன்றுமல்ல மலேரியாவுக்கு பயன்படுத்தப்படும் மருந்து மற்றும் ஆத்திரட்டிஸ் நோயாளிகளுக்கு  பயன்படுத்தப்படும் மருந்தையும் ஒன்றாக சேர்த்து கொரோனா நோய்தொற்று உள்ளவர்களுக்கு அளிப்பதன் மூலம் அதன் தாக்கம் குறைந்துள்ளது என்று அவர் கூறினார். ஆனால் இதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை.

மேலும் படிக்க – ஊரடங்கில் உங்கள் வீட்டில் புத்தக வாசிப்பு நல்ல சினிமாக்கள் பார்க்கலாம்.

பிரஞ்ச் கவர்மெண்ட்

மார்ச் 22 ஆம் தேதி பாரிஸ் நகரில் உள்ள பிரென்ச் ஆராய்ச்சியாளர் மையத்தில் கொரோனா வைரஸ் தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் இருப்பதற்கு மருந்தை கண்டுபிடித்துள்ளார்கள். இது வேலை செய்ய கிட்டத்தட்ட ஆறு நாட்கள் தேவைப்படும் அதைத் தொடர்ந்து இந்த தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாமல் தடுக்கும் என்று அவர்கள் கூறியுள்ளார்கள். இதன் காணொளி பதிவையும் அவர்கள் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்கள்.

ஆராய்ச்சியின் முடிவு

சாதாரணமாக ஒரு வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்றால் கிட்டத்தட்ட ஆறு மாதம் வரை தேவைப்படும். ஏனென்றால் அந்த மருந்து உண்மையில் ஒரு நோயாளியின் பிரச்சினையை தீர்க்க மற்றும் அதனால் அவர்களுக்கு எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல் இருக்கிறதா என்பதைப் பார்ப்பார்கள். இதைப் பொருத்துதான் ஒரு மருந்தை உலக சுகாதார அமைப்பு அங்கீகரிக்கிறது. எனவே ஒவ்வொருவரும் தங்கள் முயற்சியினால் உருவாக்கப்படும் மருந்துகள் சந்தைக்கு வருவதற்கு குறைந்தது நான்கு மாதங்கள் வரை ஆகும்.

மேலும் படிக்க – மஞ்சள், உப்பு, வேப்பிலை கொண்டு உங்கள் வீட்டைச் சுற்றி உள்ள கிருமிகளை அழிக்கலாம்..!

கொரோனா வைரஸ் மருந்து

எச்ஐவி எய்ட்ஸ் நோய் களுக்கு பயன்படுத்தும் மருந்தையும் மற்றும் மலேரியாவுக்கு பயன்படுத்தும் மருந்தையும் ஒன்றாக சேர்த்து கொரோனா நோயாளிகளுக்கு கொடுப்பதன் மூலமாக அந்த வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது என்று உலக சுகாதார மையம் கூறியிருக்கிறது. ஏனென்றால் சில வருடங்களுக்கு முன்பு இபோலா வைரஸ் தாக்கத்தை இந்த இரண்டு மருந்துகள் தான் குறைத்தது. எனவே இதை பின் தொடர்ந்தால் தொற்றுக்களை நம்மால் தடுக்க முடியும் என்று கூறி உள்ளார்கள்.

இந்த மருந்தை நாம் பயன்படுத்தினாலும் அது ஏதாவது ஒரு பக்க விளைவை நமக்குத் தரும். ஆனால் உயிரிழப்புக்கு பக்கவிளைவுக்கு எவ்வளவோ பரவாயில்லை. எனவே தொற்றுக்களை குறைக்க இதுபோன்ற ஆபத்தான நிலைக்கு செல்லாமல் அரசாங்கம் சொல்வதைக் கேட்டு உங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன