தலைவி திரைப்படத்தில் அரவிந்த் சாமியின் நியூ லுக்.!

new look of arvind samy in thalaivi movie is trending now

புரட்சித் தலைவர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி திரைப்படத்தில் வெளிவரும் அவரின் காட்சியின் சில வினாடிகளை வெளியிட்டுள்ளார்கள். “நான் உங்கள் வீட்டுப் பிள்ளை” என்ற பாடல் பின்னே ஒலிக்க, எம்ஜிஆரை போல் தத்ரூபமாக நடிகர் அரவிந்த்சாமி அந்த பாடலுக்கு நடித்துள்ளார். இதைப் பார்ப்பதற்கு, உண்மையில் எம்ஜிஆர் தான் இந்த படத்தில் நடித்து இருப்பதை போல் உணர வைத்துள்ளார் அரவிந்த்சாமி. இந்த டீஸார் கடந்த மூன்று நாட்களாகவே ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் ட்விட்டரில் இந்த பாடலையும் பழைய பாடலையும் ஒன்று சேர்த்து பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் “தலைவி” இந்த படம் நடிகை ஜெயலலிதா வாழ்க்கையில் உள்ள சுவாரஸ்யமான சம்பவங்களை கொண்டு எடுக்கப்பட்டது. ஜெயலலிதாவின் வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் எம்ஜி ராமச்சந்திரன் அவர்கள். இவரைப் பின் தொடர்ந்து இவர் பாதையிலேயே தானும் முதலமைச்சரானார் ஜெயலலிதா எனவே இவரின் வாழ்க்கை வரலாற்றில் எம்ஜிஆரின் பங்கு மிகப் பெரியது. இதை பெருமை சேர்க்கும் வகையில் படத்தின் முதல் டீசரில் எம்ஜிஆர் வரும் காட்சியை வெளியிட்டுள்ளார்கள்.

மேலும் படிக்க – வெகு விரைவில் பெரிய திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.!

தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ராவத் நடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் ஜான்சிராணி என்று அழைக்கப்படும் மணிகர்ணிகாவின் வாழ்க்கை வரலாறை சொல்லும் படத்தை தயாரித்து நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு செல்லும் தலைவி படத்தையும் இவர் தயாரித்து நடிக்கிறார்.

அரவிந்த் சாமிக்கு சரியாக பட வாய்ப்புகள் இல்லாத சமயங்களில் தனி ஒருவன் என்ற படத்தின் மூலமாக மிகவும் பிரபலமடைந்தார். அதைத்தொடர்ந்து போகன், செக்கச்சிவந்த வானம் போன்ற படங்களில் நடித்தார். இப்போது தலைவி படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலமாக இவரின் நடிப்பு பயணம் முழுமை அடையும் என்றே சொல்லலாம். எப்போது நாம் மற்றவரை முழுமையாக புரிந்து அவரை போல் நடிக்கிறோமோ அப்போதுதான் நமது நடிப்பு திறமை முழுமையாக வெளிவரும். இதில் கடினமான விஷயம் என்னவென்றால், இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் இப்போது உலகத்தில் இல்லை, இது மேலும் அவருக்கு சவாலானது. இருந்தாலும் துணிச்சலாக இந்த கதாபாத்திரத்தை எடுத்து சரியாக நடித்துள்ளார் அரவிந்த்சாமி. இவருக்கு எல்லா திசைகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

மேலும் படிக்க – நடிகை கீர்த்தி சுரேஷின் வாழ்க்கை முறைகள்..!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு கிட்டத்தட்ட மூன்று படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் வெப்சீரிஸ் என்றழைக்கப்படும் இணையத் தொடரில் குயின் என்ற பெயரில் ஜெயலலிதா வாழ்க்கையை ரம்யாகிருஷ்ணன் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து நித்யா மேனன் நடிப்பில் ஐயன் லடி என்ற படம் தயாரிக்கப்பட்டது. இதன் வரிசையில் விஜய் இயக்கத்தில் தலைவி என்ற படம் தயாரிக்கப்பட்டு வெளியாகும் நிலையில் நீதிமன்றம் இந்த படத்திற்கு தடை உத்தரவை பிறப்பித்தது. இதனால் இந்த படம் எப்போது வெளியாகும் என்பது இன்றுவரை உறுதியாக தெரியவில்லை. இருந்தாலும் மேல்முறையீட்டு வழக்குகள் மூலமான இந்த படம் விரைவில் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் நம்பிக்கை அளித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன