கட் ஷாட் ஆடும் சச்சினின் அடுத்த கட்..!

  • by
new hair style of sachin tendulkar

நம்பிக்கை நட்சத்திரம் என்று அழைக்கப்படும் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் ஊரடங்கும் சமயத்தில் தன்னுடைய சிகை அலங்காரத்தை வீட்டில் இருந்தபடி எப்படி செய்கிறார் என்பதற்கான பல பதிவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கிரிக்கெட்டில் ஜாம்பவனாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது 46 ஆவது வயதில் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்று ஒருசில வேலைகளை செய்து வருகிறார்.

மாஸ்டர் பிளாஸ்டர்

மிக மோசமான பந்து வீச்சாளர்கள் என்று கருதப்படும் வாசிம் அக்ரமை, அக்தர் மெக்ராத், ஷேன் வார்னே போன்று அனைவரையும் திணறடித்த ஆட்டக்காரர் தான் சச்சின் டெண்டுல்கர். தனது பதினாறாவது வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட்டில் கால் பதித்தவர் சச்சின் டெண்டுல்கர் இன்று வரை 200-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளிலும் மற்றும் 450க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளிலும் பங்கு பெற்றிருக்கிறார். உலக அளவில் அதிக சதங்கள் மற்றும் அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற பெருமையை சச்சின் டெண்டுல்கர் தக்க வைத்துள்ளார். ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர் இந்த ஊரடங்கு சமயத்தில் தனது வீட்டில் என்ன செய்கிறார் என்பதை தனது ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

மேலும் படிக்க – ஜூம் செயலியால் ஏற்படும் ஆபத்துக்கள்..!

புகைப்படங்கள்

யாருடைய உதவியும் இல்லாமல் தன் குடும்பத்தை நம்பாமல் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் தனக்குத்தானே முடிவெட்டும் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி, அனைவரும் பகிர்ந்து வருகிறார்கள். ஒரு புகைப்படத்தில் தனது முடியை அவர்களே கட் செய்வது போலவும் மற்றொரு புகைப்படத்தில் வேறு ஒரு ஆடையில் அவர் முடியின் முழுமையான தோற்றத்தையும் காண்பித்துள்ளார். கிரிக்கெட்டைத் தவிர இவருக்கு ஏராளமான திறமைகள் உள்ளது என்று ரசிகர்களும் இவரை கிண்டல் செய்து வருகிறார்கள்.

பிரபலங்கள்

சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து மகேந்திரசிங் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா போன்றவர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் ஏராளமான பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் ஏராளமான பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். எனவே கிரிக்கெட் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் இதுபோன்ற பதிவுகள் உதவுகிறது.

மேலும் படிக்க – ஊரடங்கு காலத்தில் வீட்டில் வளர்க்க வேண்டியது

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி காலவரையின்றி தள்ளி வைப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் வேதனை இருக்கிறார்கள். இருந்தும் இதுபோன்ற கிரிக்கெட் போட்டியாளர்களின் செயல்களை பார்த்து ரசிகர்கள் ஓரளவு திருப்தியில் இருக்கிறார்கள். சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து, விளையாட்டு வீரர்கள் அனைவரும் தாங்கள் செய்யும் செயல்களை இணைய தளத்தில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன