ஊரடங்காள் அதிகரிக்கும் நெட்பிளிக்ஸ் வாழ்க்கை..!

  • by
netflix got more viewership because of corona virus lockdown

கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இணையத்தளத்தை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அதிலும் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார், ஜி5 போன்ற செயலிகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளது‌. சினிமா துறை மற்றும் சின்னத்திரை போன்ற அனைத்தும் தங்கள் வேலைகளை நிறுத்தி வைத்ததினால் மக்கள் பொழுதுபோக்கிற்காக இணையத்தளத்தை பயன்படுத்தி வருகிறார்கள். அதில் ஒவ்வொரு வயதினருக்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு விதமான நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் ஒளிபரப்பப்படுகிறது, இதனால் மக்கள் எந்நேரமும் அதில் மூழ்கி வாழ்கிறார்கள்.

நெட்ப்ளிக்ஸ் வாழ்க்கை

சில நாட்களுக்கு முன்பு பொழுதுபோக்கிற்காக மக்கள் இணையதளத்தில் உள்ள யூடியூப் அல்லது டொரண்ட் போன்ற செயலிகளை பயன்படுத்தி, தங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை பார்த்து வந்தார்கள். ஆனால் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற செயலிகளில் மூலமாக ஏராளமான படங்களை தவிர்த்து அதில் விருவிருப்பான தொடர்களும் ஒளிபரப்புகிறார்கள் இதனால் மக்கள் தங்கள் பொழுதுபோக்கிற்கு சரியான தீனியாக இந்த தளங்களை பார்த்து அதில் எந்நேரமும் வாழ்ந்து வருகிறார்கள்.

மேலும் படிக்க – கட் ஷாட் ஆடும் சச்சினின் அடுத்த கட்..!

அதிகரிக்கும் வாடிக்கையாளர்

இதுபோன்ற செயல்களில் திரைப்படம் மற்றும் தொடர்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதைத்தவிர்த்து இதனால் இணையம் வசதி கொடுப்பவர்களின் வருமானமும் அதிகரித்துள்ளது. அதேபோல் அமேசான் போன்ற செயலிகளைப் பயன்படுத்துவதற்காக செலுத்தப்படும் சந்தாகளினால் கிடைக்கப்படும் தொகையும் அதிகரித்துள்ளது. ஒருபுறம் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வரும் சூழ்நிலையில் மற்றொருபுறம் பொழுதுபோக்கிற்காக மக்கள் தங்கள் பணத்தை செலவழித்து வருகிறார்கள்.

குறுக்கு வழி

இணையத்தளத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் தங்கள் திறமைகளை வைத்து இதுபோன்ற செயலிகளை பணம் செலுத்தாமல் பயன்படுத்தி வருகிறார்கள். அதாவது வேறு ஒருவரின் ரகசிய எண்ணை வைத்து தாங்களும் இந்த சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். அதை தவிர்த்து இணையதளத்தில் உள்ள ஏராளமான பக்கங்களில் பணம் செலுத்தி பார்க்கப்படும் ஏராளமான திரைப்படங்கள் மற்றும் தொடர்களை இலவசமாக பார்க்கிறார்கள். ஒருபுறம் மாதந்திர சந்தாக்களை நாம் மிச்சப்படுத்தினாளும், மற்றொருபுறம் நாம் இணைய வசதி பெறுவதற்காக செலுத்தப்படும் தொகைகளை இதைப் பார்ப்பதற்காக நாம் செலவழித்து வருகிறோம்.

மேலும் படிக்க – மனிதவளத் துறையின் கொரானா வழிகாட்டுதல்கள்!

பார்வையாளர்கள்

யூடியூப் பக்கங்களில் அதிகமாக அமேசான் மற்றும் நெட்ப்ளிக்ஸில் இருக்கும் சிறந்த படம் எதுவென்றே மக்கள் தேடுகிறார்கள். அதைத் தவிர்த்து சிறந்த தொடர்கள் மற்றும் வெளிநாட்டு தொடர்கள் என அனைத்தையும் தெரிந்து கொண்டு அதை பார்க்கவும் செய்கிறார்கள். பல வருடங்களாக அதிக பார்வையாளர்களை கொண்ட தொடர்கள் அனைத்தையும் பார்க்காத மக்கள் பார்க்கத் தொடங்கி உள்ளார்கள். இதனால் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து மட்டுமின்றி இதைப் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்கள்.

அனைவரும் இதுபோன்ற கலாச்சாரத்திற்கு இறங்கியதால் எதிர்காலத்தில் தொலைக்காட்சியை பின்தொடரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறையும். அதை தவிர்த்து திரையரங்களுக்கு செல்லும் பழக்கமும் குறைந்து, அனைவரும் இது போன்ற தொடர்களை எடுப்பதில் கவனம் செலுத்துவார்கள் என்று வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன