கொரோனா வைரஸை அழிப்பதற்கு மனவலிமை தேவை..!

  • by
need self confident to tackle corona virus

உலகம் முழுவதும் ஏராளமான மக்களை தாக்கியுள்ள கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு மருந்துகள் ஏதும் இன்னும் கண்டு பிடிக்கவில்லை, இருந்தாலும் நம்முடைய மன வலிமையை வைத்து இந்த வைரஸை எதிர்கொள்ள முடியும். கொரோனா வைரஸ் பாதிப்படைந்தவர்களை குணப்படுத்தும் நோக்கில் ஏராளமான மனிதர்கள் மற்றும் மருத்துவர்கள் தன்னம்பிக்கையுடன் வேலைகளை செய்து வருகிறார்கள். இந்த வைரஸ் அவர்களை தாக்கும் என்ற உண்மையை அறிந்திருந்தாலும் தன் உயிரை தியாகம் செய்து இது போன்ற செயலில் ஈடுபடுகிறார்கள். இதற்கு ஊன்றுகோலாக இருப்பது அவர்களின் மனவலிமை மட்டும்தான், இதைக் கொண்டு நம்மையும் இந்த வைரஸ் தொற்று தாக்காமல் எப்படிப் பாதுகாக்க முடியும் என்பதை காணலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி

கொரோனா வைரஸ் ஒவ்வொரு மனிதரின் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து தான் அவர்களின் உடலை பாதிப்படையச் செய்கிறது. உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கொரோனா வைரஸ் மட்டுமல்லாமல் எந்த ஒரு வைரஸ் தொற்றுகளும் உங்களை தாக்காதவாறு பார்த்துக் கொள்ள முடியும். இதற்கு நீங்கள் எப்போதும் தன்னம்பிக்கையுடன் தைரியமாக இருக்கவேண்டும், யாரொருவர் பயத்தில் வாழ்கிறார்களோ அவர்கள் உடலில் சில மாற்றங்கள் உண்டாகி நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. தன்னம்பிக்கை மற்றும் பாதுகாப்பு இரண்டும் இருந்தால் போதும் நீங்கள் இந்த வைரஸ் தொற்றை தடுத்து நிறுத்தலாம்.

மேலும் படிக்க – உடலில் நோய் எதிர்க்கும் சளியை தடுக்கும் மூலிகைகள்

ஒற்றுமையாக எதிர்கொள்ளுங்கள்

கொரோனா வைரஸிற்கு எதிராக இப்போது இருக்கும் மாற்று மருந்து நம்முடைய தன்னம்பிக்கை தான். இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் தினமும் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் அங்கு வாழும் மக்கள் தன்னம்பிக்கையை இழந்து பயத்தினால் தங்கள் அன்றாட வாழ்க்கையை அழத்து வருகிறார்கள். இது போன்ற நிலை நம் நாட்டிற்கு ஏற்படாமல் இருப்பதற்கு எல்லோரும் தன்னம்பிக்கையாக இருக்கவேண்டும். அதை தவிர்த்து உங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் இதனால் ஏற்படும் நன்மைகளையும் தெரிவிக்க வேண்டும். எப்போதும் ஒற்றுமையாக நல்ல செயல்களைப் பற்றி யோசித்தாலே எந்த ஒரு பிரச்சினையும் உங்கள் அருகில் வராது.

பாதுகாப்பாக இருங்கள்

தன்னம்பிக்கையுடன் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசாங்கம் சொல்வதைக் கேட்டு அனைவரும் வீட்டில் இருந்தாலே போதும். ஆனால் வீட்டில் அதிக நாட்கள் இருக்கும் பொழுது உங்கள் மனம் சோர்வடைய வாய்ப்புள்ளது. எனவே வீட்டில் உள்ள அனைவரையும் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும் வழிகளை இந்தப் பக்கத்தில் இருக்கும் வேறு ஒரு பதிவில் நாம் காணலாம். அதைப் பின்தொடர்ந்து உங்கள் அன்றாட வாழ்க்கையை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வெளியே செல்வதாக இருந்தால் போதுமான பாதுகாப்பு உரைகளுடன் செல்லுங்கள். மீண்டும் வீட்டிற்குள் வந்தவுடன் கைகள் மற்றும் கால்களை முழுமையாக கழுவி சுத்தமாக வீட்டிற்குள் நுழையுங்கள்.

மேலும் படிக்க – கொரானாவுக்கு மருந்து குறித்து ஆயுவுகள் !

குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலை மற்றும் நேர்மறை எண்ணங்களை உருவாக்குங்கள். ஒருவரை ஒருவர் சார்ந்து அவர்களை மகிழ்ச்சியாகவும் அவர்கள் மனநிலையை எப்போதும் நிம்மதியாகவும் வைக்க உதவுங்கள். உங்கள் குடும்பத்தை தவிர்த்து உங்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப் பட்டால் பாதுகாப்பாக செய்யுங்கள். நீங்கள் எந்தளவிற்கு தன்னம்பிக்கையாகவும் நேர்மறை எண்ணங்களுடன் இந்த கொரோனா வைரஸ் எதிர் கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் வாழ்க்கை மற்றும் எதிர்காலம் அழகாக இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன