மருத்துவர்கள் மற்றும் காவலர்களுக்கு தேவையான அடிப்படை உபகரணங்கள்..!

  • by
necessary equipements for doctors and police officers

கொரோனா பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாக்க மக்கள் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும். இதைத் தவிர்த்து அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்காக வெளியே சென்று வீட்டிற்குள் வந்தால் கைகளை நன்கு அலம்பி கொள்ள வேண்டும். ஒரு சாதாரண மக்கள் இதை மட்டும் செய்தாலே போதும், ஆனால் நம் பாதுகாப்பதற்காக தினமும் அயராது உழைத்து வரும் மருத்துவர்கள், தூய்மைப் பணி தொழிலாளர்கள் மற்றும் காவலர்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்க வேண்டும், இதனால் இவர்கள் தங்கள் உடலை சுற்றி பாதுகாப்பு கவசங்களை போட்டுக்கொள்ள வேண்டும். அதிலும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரிபவர்கள் இதற்கு ஒரு படி மேலே சென்று தங்கள் முகம், கைகள், உடல் என எல்லா பகுதிகளையும் முழுமையாக மறைத்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் தான்  இவர்கள் நோயாளிகளை பார்த்துக் கொள்ள வேண்டும்.

உலக நாடுகள்

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத ஏராளமான நாடுகள் தங்கள் பணிகளை இடை இடையே நிறுத்தி வந்தார்கள். அதிலும் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே இதுபோன்ற பாதுகாப்பு உபகரணங்கள் இருப்பதினால் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள். இச்சமயத்தில்தான் சீனாவிலிருந்து முகமூடி மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் அனைத்தும் அவரவர் நாடுகளுக்கு வணிக்கம் செய்துள்ளார்கள். ஆனால் சீன அரசு அனுப்பப்பட்ட ஏராளமான உபகரணங்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டவை, எனவே அதை திருப்பி அனுப்பினார்கள். எனவே இந்த சூலை சீன அரசு சரியாக பயன்படுத்தி தங்கள் பொருளாதாரத்தை உயர்த்துகிறது.

மேலும் படிக்க – கபசுரக்குடிநீர் கொரோனாவுக்கு பலன் தருமா..!

பாதுகாப்பு அவசியம்

மிக எளிதில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்றிக்கொள்ளும் இந்த கொரோனா வைரஸை நாம் தடுப்பதற்கு முழு பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அதிலும் கொரோனா நோயாளிகளிடம் அதிக நெருக்கமாக இருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இதுபோன்ற கவசங்களை முழுமையாக அணிந்திருக்க வேண்டும். இந்தக் கிருமி மிக எளிதில் காற்றில் மற்றவர்களுக்கு பரவக்கூடியது. எனவே இதை தடுப்பதற்காக பணியாளர்கள், நாள் முழுவதும் இந்த பாதுகாப்பு உடைக்குள் இருக்கவேண்டும். ஆத்திர அவசரத்திற்கு கூட அவர்கள் இந்த ஆடையை கழட்டக் முடியாது.

காவலர்கள்

ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பிறகும் ஏராளமான மக்கள் தெருக்களில் சுற்றித் திரிகிறார்கள். இவர்களை கட்டுப்படுத்துவதற்காக காவலர்கள் வீதிகளில் சுற்றித் திரிபவர்களை வீட்டுக்கு செல்லும்படி கேட்டுக் கொள்கிறார்கள். அதை மீறுபவர்களை அவர்கள் பாணியில் சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள். இப்படி தினமும் ஏராளமான மக்களை சந்திக்கும் இவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று வராமல் இருப்பதற்கு கையுறைகள் மற்றும் முகமூடிகளை அனிந்து கொள்கிறார்கள். தினமும் இவர்களுக்கு ஏராளமான முகமூடி மற்றும் கையுறைகள் தேவைப்படுகிறது. இந்தியா முழுவதும் இன்று பாதுகாப்பாக இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் நம் நாட்டின் காவல் துறையில் பணிபுரிபவர்கள் தான். இவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இவர்க்கான உதவிகளை அரசாங்கம் செய்து வருகிறது.

தூய்மைப் பணியாளர்கள்

நாடே முடக்கத்தில் இருக்கும்போது, இன்றும் தினமும் பணி புரியும் ஒரு துறைதான் தூய்மைப் பணியாளர்கள். இவர்கள் அதிகாலையில் எழுந்து நமது சாலைகளை சுத்தப்படுத்துவதைத் தவிர்த்து தெருக்களில் இருக்கும் குப்பைகளை அள்ளி, நம்முடைய சமுதாயத்தில் சுத்தமாக வைத்துக்கொள்ளும் பணிகளை செய்வார்கள். இத்தகைய சிறப்புமிக்க இவர்களை கொரோனா வைரஸ் பாதிக்காமல் இருப்பதற்கு கையுறைகள், முகமூடிகள் மற்றும் தலை உறைகள் போன்ற அனைத்தையும் அணிந்து வேலை செய்கிறார்கள். சுற்றுச்சூழலில் ஏராளமான கொரோனா கிருமிகள் உலாவரும், இது அனைத்தையும் எதிர்த்து போராடும் இவர்களுக்கு ஏராளமான பாதுகாப்பு கவசங்கள் தேவை.

பாதுகாப்பு உபகரணங்கள்

இதுபோல் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருப்பவர்களிடம் பணிபுரியும் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவலர்கள் அனைவருக்கும் ஏராளமான பாதுகாப்பு கவசங்கள் தேவை. இந்தியா, பாதுகாப்பு உபகரணங்களை போதுமான கையிருப்பு வைத்துள்ளது. அதைத் தவிர்த்து இந்தியாவில் ஏராளமான இடங்களில் இதை தினமும் ஓயாமல் உற்பத்தி செய்து வருகிறார்கள். பெரிய நிறுவனங்கள் தயாரித்து வரும் முகமுடி மற்றும் கையுறைகளை தவிர்த்து கிராமங்களில் இருக்கும் சிறிய வீடுகளில் கூட இதை செய்து மக்களுக்கு இலவசமாக அளித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க – தூய்மையான சூழல் நோயற்ற வாழ்வு..!

தொழில்நுட்ப உதவிகள்

காவல் அதிகாரிகள் தங்கள் எல்லைப்பகுதிகளை கடக்கும் மனிதர்களுக்கு பரிசோதிக்கும் வகையில் வெப்பநிலையை கண்டறியும் கருவிகளை வைதிருக்க வேண்டும். இதைத் தவிர்த்து மருத்துவமனைகளில் ஏராளமான உபகரணங்கள் தேவைப்படுகிறது. உடல் வெப்பநிலையை கண்டறியும் கருவி மற்றும் நோய்த் தொற்று உள்ளவர்களின் சுவாசத்தை சீரமைக்கும் வெண்டிலேஷன் போன்றவைகள் தேவைப்படுகிறது. இது போதுமான அளவு நம்மிடம் கையிருப்பு இருந்தாலும் இந்த நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. எனவே அரசாங்கம் இதன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் மற்ற நாடுகளிலிருந்து இதை வாங்க வேண்டும்.

மனிதனை காப்பாற்றும் மற்ற சக மனிதர்களை மதிக்கும் வகையில் நாம் அவர்களுக்கு மரியாதை அளித்து வாழ வேண்டும். அதைத் தவிர்த்து நாட்டு நலனை பொருட்படுத்தாமல் சுற்றி திரிபவர்களுக்கு கொரோனா வைரஸ் தவிர்த்து ஏராளமான பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க நேரிடும். எனவே உங்களை பாதுகாப்பதற்காக உங்களைச் சுற்றி ஏராளமானோர் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்து வருகிறார்கள். அதை ஒரு நிமிடம் யோசித்து பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன