இயற்கையான முறையில் உடல் துர்நாற்றம் அகற்றுவது இவ்வளவு எளிமையா..?

Natural ways to get rid of body odour

நமது உடல் துர்நாற்றத்தை பொருத்து தான் நம்முடைய தன்னம்பிக்கையும் இருக்கிறது. நமது உடல் மற்றும் அக்குளில் வீசும் நாற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஏனென்றால் நமது உடலில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி நமது  ஆரோக்கியத்தை வளர்க்க உதவுவது தான் வியர்வை. ஆனால் ஒரு சிலருக்கு இந்த வியர்வை நாற்றத்துடன் வெளியேறும். இதனால் இவர்கள் மிகப்பெரிய சங்கடத்திற்கு உள்ளாவார்கள், இதை தடுப்பதற்கான இயற்கை வழியை பார்ப்போம்.

அக்குள் வியர்வை உருவாவதற்கான காரணம்

பொதுவாக உடற்பயிற்சி மற்றும் விளையாடுபவர்களுக்கு வியர்வை அதிகமாக வெளியேறும். அவர்களின் உடலில் இருக்கும் கலோரிகள் குறைந்த வியர்வை மூலமாக வெளியேறும். ஒரு சிலர் எடுத்துக் கொள்ளும் தவறான உணர்வுகளின் மூலமாக அவர்களின் வியர்வையில் துர்நாற்றம் வீசும்.

மேலும் படிக்க – வழுக்கை தலைக்கு காரணமும் தீர்வும்

ஆரோக்கியமற்ற உணவு, மதுப்பழக்கம், புகைப்பழக்கம் போன்றவைகளினால் வியர்வை நாற்றத்துடன் வெளியேறும். அதே சமயத்தில் அதிகமாக மாமிசத்தை உட்கொள்பவர்களின் வியர்வையும் துர்நாற்றத்துடன் வெளியேறுகிறது. இதைத் தவிர்த்து வெங்காயம் உண்டால் கூட வியர்வை நாற்றத்துடன் வெளியேறும். இது போன்ற உணவுகளை தவிர்ப்பதன் மூலமாக உங்கள் வியர்வை நாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

பாக்டீரியாக்களை அழிக்கும் எலுமிச்சைச் சாறு

உங்கள் உடலில் வியர்வை துர்நாற்றத்துடன் வெளியேறுவதற்கான காரணம் கெட்ட பாக்டீரியாக்கள் தான் இதை அழிப்பதற்கான வழி உள்ளது.

எலுமிச்சைச் சாறை வேர்வை வரும் பகுதிகளில் நன்கு தேய்த்துக் கொள்ள வேண்டும். 20 நிமிடங்கள் ஊற வைத்து பிறகு குளிக்க வேண்டும், இதை குளிக்கும் போதெல்லாம் செய்து வந்தால் உங்கள் உடலில் இருந்து வெளியேறும் வேர்வையும் கட்டுக்குள் வரும் அதனால் ஏற்படும் துர்நாற்றம் அகலும்.

ரோஸ் வாட்டர், அதாவது பன்னீர் தீர்த்தத்துடன் எலுமிச்சை சாறை ஒன்றாக சேர்த்து வேர்வை வெளியேறும் பகுதிகளில் வைப்பதினாளும் துர்நாற்றம் கட்டுக்குள் வரும்.

மேலும் படிக்க – காலை உணவாக கிச்சடி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

படிகாரத்தின் பயன்

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் படிகாரத்தை வாங்கி அதை நீங்கள் குளிக்கும் நீரில் போட்டு விட வேண்டும். இது கரைந்து நீருடன் கலந்து விடும். இதனால் இதைக் கொண்டு நாம் குளிக்கும்போது நம் உடல்முழுவதும் படிகாரம் கலந்த நீர் படுவதினால் நமது உடல் முழுவதும் சுத்தமாகும் அதுமட்டுமல்லாமல் பாக்டீரியா உண்டாவதை தடுக்கிறது. இதனால் உங்கள் உடலில் ஏற்படும் வியர்வை நாற்றம் இல்லாமல் இருக்கிறது.

நாற்றத்தைக் கட்டுப்படுத்த நாம் கடைபிடிக்க வேண்டிய வழிகள்

இயற்கையாகவே மரபணு மாற்றத்தினால் ஒரு சிலரின் உடல் துர்நாற்றம் வீசும். இதை தடுப்பதற்கு நாம் காட்டன் துணிகளை அணியவேண்டும். அதேசமயத்தில் இறுக்கமான துணிகளை அணியாமல் சற்று அதிக அளவு உள்ள ஆடையை அணிவது சிறந்தது.

மேலும் படிக்க – உங்கள் உடலில் இருக்கும் கலோரிகளை எரிப்பதற்கு சிறந்த 5 வழிகள்

ஒருமுறைக்கு இருமுறை குளிப்பது நல்லது அது உங்கள் உடலில் ஏற்படும் நாற்றங்களை அகற்றும். ஒரு சிலர் அவர்கள் மேல் வீசும் நாற்றம் மற்றவர்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக நறுமணம் கொண்ட திரவியத்தை அவர்கள் மேல் அதிகமாக தூவி கொள்கிறார்கள். இது உங்கள் உடலில் இயற்கையாக சுரக்கும் எண்ணெயை குறைத்து ஆரோக்கிய குறைபாடு ஏற்படுத்திவிடும். எனவே இது போன்றவைகளை தவிர்த்து இயற்கையான முறையில் வேர்வையை ஒழிக்க முயற்சி செய்யுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன