சளித்தொல்லையை தீர்க்கும் மூலிகை கசாயம்..!

  • by
natural kashayam to cure cold and cough

குளிர்காலம், மழைக்காலம், கோடை காலம் என அடுத்தடுத்து வரும் காலங்களில் நம் உடல் நிலையை பாதிக்கச் செய்து, நம்மை பின்தொடர்ந்து வரும் பிரச்சினைதான் சளி தொல்லை. இதிலிருந்து நாம் முழுமையாக விடை பெறுவதற்காக ஒரு சிறப்பு கசாயம் இருக்கிறது. இதை தினமும் குடித்து வந்தால் உங்கள் உடலில் இருக்கும் அனைத்துக் கழிவுகளும் வெளியேறிய தொற்றுகள் மற்றும் சளித் தொல்லைக்கு நிரந்தர தீர்வை தருகிறது.

பிரச்சினைகளுக்குத் தீர்வு

மழைக்காலங்களில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும், இதனால் காய்ச்சல், ஜலதோஷம், தொண்டை பிரச்சனை, சளித்தொல்லை போன்ற அனைத்தும் ஏற்படும். இதுபோன்று தொற்றினால் உண்டாகும் அனைத்து பிரச்சனைகளையும் தடுப்பதற்கு இந்த கசாயம் தீர்வாக இருக்கிறது. அக்காலத்தில் வாழ்ந்த முன்னோர்கள் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது போன்ற கசாயத்தை அருந்தி வந்தார்கள், அத்தகைய சிறப்பு வாய்ந்த கசாயத்தை நம் வீட்டில் எப்படி செய்வது என்பதை காணலாம்.

மேலும் படிக்க – தமிழ்நாட்டில் சமூக தொற்றாக பரவும் கொரோனா..!

கசாயம் செய்முறை

இந்த மூலிகை கசாயத்தை செய்வதற்கு நமக்கு 2 கப் தண்ணீர், இஞ்சி சாறு, மிளகுத்தூள், துளசி இலை மற்றும் பட்டை தூள் தேவைப்படுகிறது. இதை அனைத்தையும் எடுத்துக் கொண்டு, பாத்திரத்தில் தண்ணீரை ஊற்ற வேண்டும். தண்ணீர் கொதித்தவுடன் அதில் இஞ்சி சாறு இரண்டு தேக்கரண்டி கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதில் மூன்று துளசி இலையைப் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். மூன்று நிமிடங்கள் கழித்து அதில் ஒரு தேக்கரண்டி மிளகுத் தூள் சேர்க்க வேண்டும். பிறகு அதில் இரண்டு கிராம்பையும் சேர்த்து மீண்டும் கொதிக்க விட வேண்டும்.

அதை நன்கு சூடு ஏறி தண்ணீர் வற்ற தொடங்கியவுடன் அதனை வடிகட்டி குடிக்கலாம். தினமும் தூங்குவதற்கு முன்பாக இந்த கசாயத்தை குடிக்க வேண்டும். அதிலும் 30 நிமிடங்களுக்கு முன்பு இதைக்குடித்து பின்பு உறங்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து குடித்து வருவதன் மூலமாக உங்களுக்கு உண்டாகும் சளித்தொல்லைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

மேலும் படிக்க – வெந்நீரில் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

மேலும் சில குறிப்பு

உங்கள் தொண்டையில் உள்ள கரகரப்பு தீர்ப்பதற்காக இந்த கசாயத்தில் சிறிது பட்டை தூளை சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல் இதில் துளசி, மிளகு சேர்ப்பதன் மூலமாக உங்கள் தொண்டைக்கு இதமாக இருக்கும். இரவில் மூச்சு விட சிரமப் படுபவர்கள் இதை குடித்து வந்தால் சுவாசம் சீராகும். எனவே இக்காலத்தில் சளித்தொல்லை சாதாரண தொல்லையாக உருவெடுத்துள்ளது. எனவே இதை முழுமையாக அழித்து ஆரோக்கியமாக வாழுங்கள்.

வீட்டிலுள்ள சமையலறையில் கிடைக்கக்கூடிய இந்த பொருட்களை வைத்து நீங்கள் மிக எளிமையான முறையில் இந்த கசாயத்தை செய்யலாம். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என வயது வரம்பு இல்லாமல் எல்லோருக்கும் கொடுத்து அவர்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்திடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன