எதிர்காலத்தை ஆக்கிரமிக்கும் இயற்கை உணவுகள்..!

  • by
natural food items which are going to rule the world

உலகம் எப்போது வணிகத்தில் உலகமயமானதோ அப்போது முதல் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் மேலை நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பழங்கள் மற்றும் காய்கறிகளை பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் எதிர்காலத்தில் வாழும் மனிதர்கள் இயற்கையாக செய்யப்படும், அதிலும் தாங்களே செய்யப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை பயன்படுத்துவார்கள் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள். எனவே தோட்டத்தில் அல்லது மாடியில் எளிமையான முறையில் இது போன்ற இயற்கை உணவுகளை எப்படி தயாரிப்பது என்பதை காணலாம்.

ஆர்கானிக் தோட்டம்

விவசாயம் என்பது விவசாயிகளுக்குத் தெரிந்த ஒரே தொழில், இதை நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் சரியாக செய்து வருகிறார்கள். ஆனால் மேலை நாட்டில் உள்ளவர்கள் இதை ஒரு தொழிலாக மாற்றி விரைவில் விவசாயம் செய்வதற்காக ஏராளமான ரசாயனங்களை கலக்கிறார்கள். இதன் மூலமாக உருவாக்கப்படும் உணவுப் பொருட்கள் ஒரு சில வருடங்களில் நமக்கு ஏராளமான பிரச்சனைகளை உண்டாக்கும். இதை தடுப்பதற்காக இயற்கை மூலமாக செய்யப்படும் விவசாயங்களை வரவேற்கும் வகையில் ஏராளமானோர் நாட்டு விவசாயத்தை செய்து வருகிறார்கள். இயற்கையில் முதன்முதலில் எப்படி விதை, மரம், செடி, கொடி வளர்ந்ததோ அதேபோல் இயற்கையின் வாயிலாகவே விதை உற்பத்தி செய்து விவசாயத்தை வளர்க்கிறார்கள்.

மேலும் படிக்க – அழகு மற்றும் ஆரோக்கியத்திற்கு வேப்ப இலை..!

சிறிய தோட்டங்கள்

வீட்டில் உள்ள தாய்மார்கள் தங்கள் உணவுகளுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை வீட்டைச் சுற்றியுள்ள தோட்டங்களிலேயே வளர்த்து வருகிறார்கள். நாம் பயன்படுத்திய காய்கறிகளில் இருக்கும் விதைகளை சரியான பதப்படுத்தி அதை மண்ணில் புதைத்து செடிகளாக வளர்ந்து இது போன்ற காய்கறிகளை அறுவடை செய்கிறார்கள். இதற்கு தினமும் அவர்கள் ஊற்றும் நீர் மற்றும் செடிகளுக்கு தேவையான ஆகாரங்கள் போன்ற அனைத்தையும் அவ்வப்போது செலுத்தினால் இந்த செடிகளின் ஆரோக்கியம் அதிகரித்து காய்கறிகளில் ஊட்டச் சத்துக்களும் அதிகமாக இருக்கும்.

இயற்கை விதைகள்

ஆர்கானிக் உணவுகள் தேவை என்றால் ஆர்கானிக்கால் தயாரிக்கப்பட்ட விதைகளை விதைக்க வேண்டும். எனவே மக்கள் ஆர்கனிக் விதைகளை எப்படி தயாரிக்கலாம் என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வழிகளை சரியாக செய்தாலே அது உங்களுக்கு கிடைத்துவிடும், இதைக் கொண்டு ஆரோக்கியமான உணவுகளை நாம் தயாரிக்க முடியும். காய்கறிகள், பழங்கள் மற்றும் தானிய உணவுகள் போன்ற அனைத்திற்கும் இந்த வழியை சரியாக கடை பிடித்து விவசாயம் செய்யலாம்.

ஆர்கானிக் உரம்

நெற்கதிர்கள், சோளம் மற்றும் பயிர் வகைகளை உருவாக்குவதற்கு நமக்கு உரம் தேவைப்படுகிறது. அதை உற்பத்தி செய்து உரமாக தூவுவதன் மூலம் நமக்கு ஆரோக்கியமான உணவு பொருட்கள் கிடைக்கும். இன்றும் ஏராளமான கிராம பகுதிகளில் தங்கள் விளைவிக்கும் அதிகமான உணவு பொருட்களை தங்கள் பயன்பட்டிருக்கும் மற்றும் தங்கள் சொந்தங்களின் பயன்பாட்டிற்கும் கொடுக்கிறார்கள். எனவே இவர்கள் தங்களது உற்பத்தியை அதிகரித்து இது மக்களுக்கும் சென்றடைய அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க – நிரந்தரமான ஆரோக்கியத்திற்கு உதவும் பானம்..!

ஆரோக்கியமான வாழ்க்கை

சில வருடங்களுக்கு முன்பாக இருதய நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் போன்றவைகள் லட்சத்தில் ஒருவருக்கே வரும் வியாதியாக இருந்தது. ஆனால் இப்போது இருக்கும் காலகட்டத்தில் நூற்றில் ஒருவருக்கு இதுபோன்ற பிரச்சினை இருக்கிறது. இது அனைத்திற்கும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகள்தான் காரணம். எனவே பதப்படுத்தப்பட்ட மற்றும் ரசாயனங்கள் கலக்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்து இயற்கை முறையில் உற்பத்தி செய்யும் உணவுகளை உண்டு நமது எதிர்காலத்தை அழகாக்குங்கள்.

இயற்கை விவசாயம் என்பது எளிமையான வழி, ஆனால் இந்த விவசாயம் செய்து முடிப்பதற்கு கூடுதலாக சில நாட்கள் எடுத்துக்கொள்ளும், அதைத் தவிர்த்து விலையும் கொஞ்சம் அதிகம். இதற்கு பால்மாறிக்கொண்டு உடல் ஆரோக்கியத்தை கெடுப்பதை விட இயற்கை விவசாயம் செய்து ஆரோக்கியமாக வாழலாம். இது சம்பந்தமான ஏராளமான காணொளிகள் மற்றும் பதிவுகள் இணையதளத்தில் குவிந்து கிடக்கின்றது. அதை பின்தொடர்ந்து உங்கள் வீட்டில் நீங்கள் இது போன்ற இயற்கையினால் செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளை தயாரிக்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன