காதலில் ஆண் பெண்களின் பரிமாற்றங்கள் இப்படியிருந்தால் நல்லது!

  • by

காதல் உணர்வுமிக்க அன்பின் வெளிப்பாடு. காதல் என்பது வாழ்வின் ஒரு ஆதாரம். காதலை வெறும் இளம் வயதில் தோன்றும் ஒரு உணர்வு வெளிப்பாடு என்று ஒதுக்கி விட முடியாது. எல்லா உறவுகளுக்கிடையிலும் காதல் அன்பு என்ற வார்த்தையில் மூலம் மையம் கொண்டிருக்கும். இதய பரிமாற்றம், கண்களில் தொடங்குவது விட்டு கொடுப்பது என்பது காதலின் நியதிகளில் ஒன்று.

காதல் தாய் பிள்ளையிடம் கொள்ளவது போல் தூய்மையானது  நீங்கள் ஒருவரை நேசிக்க துவங்கும் போது, அவர்களிடத்தில் உள்ள நிறை குறைகளை கண்டுகொள்வதில்ல்லை. அவர்கள் தவறே செய்தாலும், அது சரி என்றே தோன்றும். அவர்களின் ஒவ்வொரு அசைவையும் ரசிக்கும் நம் மனது, அவர்கள் காதலை ஒப்பு கொண்டவுடன் சிறிது தடுமாறி தான் போகிறது. சில நாட்கள் சந்தோசமாக நகரும் உங்களது நாட்கள், இன்று பெரும்பாலான காதல்கள் புரிதல்கள் இல்லாமல் சிறு சிறு சச்சரவுகளால் தருமாறுகின்றது.

காதல் எதிர்பார்பற்றது:

 நீங்கள் ஆரம்பத்தில் எவ்வாறு எதையும் எதிர்பாக்காமல் எப்படி ஒருவரை காதலிக்க துவங்குகிறீர்களோ அப்படியே இறுதிவரை அவர்களுடன் பயணித்திடுங்கள். ஒருவரின் மீது ஒருவர் அசைக்க முடியாத நம்பிக்கையை விதைத்திடுங்கள். உங்களுக்குள் சிறு சங்கடம் ஏற்பட்டால் கூட உடனே பேசி தீர்த்து கொள்ளுங்கள். பேசாமல் இருந்து சாதிக்கும் ஆயுதத்தை கையில் எடுக்காதீர்கள்.

மேலும் படிக்க – வயதான முதியவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள்..!

நீங்கள் ஒருநாள் பேசாமல் இருக்க பழகிவிட்டீர்கள் என்றால் அது ஒருவாரமாகும், பின்னர் அது ஒரு மாதமாகும், இந்த இந்த இடைவெளி ஒருவர் இல்லாமல் ஒருவர் வாழமுடியும் என்பதை உங்களுக்கு உணர்த்திவிடும் தருவாயில் உங்கள் காதல் பிரிவை எட்டி கொண்டிருக்கும். அதனால் தான் சிறு பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து கொள்ள வேண்டும். உங்கள் மீது தப்பே இல்லை என்றாலும் நீங்கள் முதலில் பேசிவிடுங்கள். யார் முதலில் பேசுவதென்ற மிகப்பெரும் ஈகோ எனும் ராட்சசனை உங்கள் வாழ்க்கையில் பயணிக்க அனுமதிக்காதீர்கள். சிறிது நேரம் எடுத்து இருவரும் உரையாடுங்கள். யார் மீது தவறு என்று பேசி புரிந்துகொள்ளுங்கள்.

பரிமாற்றம்:

அடிக்கடி பரிசு பொருட்கலை பகிர்ந்து கொள்ளுங்கள். காதலில் பணத்திற்கு மதிப்பு இல்லை. அதனால் பெரிய அளவில் ஏதும் செய்ய வேண்டியதில்லை. சிறு சிறு சப்ரைஸ்ஸ் உங்களுது அன்பை இன்னும் வலுவாக்கும். இதயத்தையும் நான் உன்னை காதலிக்கின்றேன் என்ற சொல் பரிமாற்றமாவது இருக்க வேண்டும்.

 நான் உன்ன அதிகமா நேசிக்கிறேன், ஆனா எனக்கு அத வெளிப்படுத்த தெரியாது அப்பிடுன்னு டயலாக் பேசாம, உங்களுக்குள்ள இருக்கற அன்பை வெளிப்படுத்துங்க. இந்த நிலை இல்லாத வாழ்க்கையில் அன்பு மட்டுமே நிலையானது.

புரிந்து செயல்படுங்கள்:

 ஒருவருக்கு பிடிக்காததை மற்றோருவர் செய்யாதீர்கள். அதே போல் தேவை இல்லாமல் தடை விதிக்காதீர்கள். உங்களுக்காக நீங்கள் நேசிக்கும் ஒருவரை எதையும் விட்டு கொடுக்க சொல்லாதீர்கள். உங்களுக்காக அவர்களுது இயல்பில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய சொல்லாதீர்கள். நீங்கள் நேசிக்கும் ஒருவர்க்கென உங்கள் பிஸியான வாழ்க்கையிலும் சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

ஒருவேளை உங்களுக்கு மற்றவரின் அபிப்ராயம் பிடிக்க வில்லை என்றால் கூச்சல் போடாமல் பொறுமையாக சொல்லுங்கள். ஒருவரின் குடும்ப நபர்களை உங்களது குடும்ப நபர்களாக ஏற்றுக்கொள்ளுங்கள்.  உங்களது வாழ்க்கையில் நிகழும் பிரச்சனைகளை மூன்றாவது மனிதரிடத்திற்கு கொண்டு போய் விடை தேடாதீர்கள். உங்கள் பிரச்சனைகளை பற்றி யாரிடமும் கூறாதீர்கள், முக்கியமாக உங்களது நெருங்கிய நண்பரிடம் சொல்வதை தவிர்க்கவும்.

தேவை இல்லாமல் சந்தேகங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். உங்களுக்கு மனஸ்தாபம் இருந்தால் கூட பொது இடங்களில் அதை வெளிக்காட்டி கொள்ளாதீர்கள். உங்களது சண்டைகளை நாலு சுவற்றுக்குள்ளும் உங்களது காதலை மட்டும் வெளி இடங்களில் வெளிக்காட்டுங்கள்.

உணமை காதலின் தன்மை:

நாம் எப்போது ஒருவரை உண்மையாக நேசிக்க தொடங்குகிறோமோ அதன் பிறகு அவர்களிடம் நம்மால் வெறுப்பை கொணர முடியாது. எந்த ஒரு உறவிலும் உண்மை என்பது இருந்தால் அவர்களிடத்தில் பிரிவு என்பதே இல்லை.

மேலும் படிக்க – ஈர்ப்பு விதியை தன் வசப்படுத்த நாம் செய்ய வேண்டிய செயல்கள்..!

உங்களுது அன்பின் பரிமாற்றங்கள் தான், உங்களது மிச்ச வாழ்க்கையை கொண்டு போவதற்கான அச்சாணி. அதை தவற விட்டு விடாதீர்கள். உங்கள் எண்ணங்களின் வெளிப்பாடு தான் காதல். காதல் என்ற மாயாவார்த்தை எல்லோர் இடத்திலும் சென்று சேரட்டும். காதலின் வெளிப்பாடு எல்லா உறவிலும் இருந்தால், இப்போது நடக்கும் அர்த்தமற்ற அநியாயங்கள் நடக்கவே நடக்காது.

பாகுபாடற்ற காதல் பரிமாற்றம் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தரும். எல்லை இல்லாதது காதல் மட்டும் தான். தூய்மையான அன்பின் வெளிப்பாடு தான் காதல். காதல் செய்வீர் 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன