அன்புக்குரியவருக்கு என நேரம் ஒதுக்குங்கள்

  • by

காதல் செய்பவர்கள் கவனத்திற்கு உங்கள் அன்புக்குரியவர்கள் குறித்து  நாள் முழுக்க யோசிக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. தொடர்ந்து அவர்களைப்  பற்றி சிந்திக்க வேண்டும் என யாரும் கேட்கவில்லை. ஆனால் தொடர் வேலைகளுக்கு இடையில் நீங்கள்  எடுக்கும் இடைவேளைகளில் உங்களுக்கு காபி குடிக்க நேரம் கொடுப்பது போல், தொடர்ந்து உங்களுக்கான நேரத்தை கொடுக்கும் அன்புக்குரியவரைப் போல் நீங்கள்  உங்களவருக்கு என நேரம் ஒதுக்க வேண்டும். இது வலுகட்டாயமானது அல்ல, உங்கள் அன்புக்கு நீங்கள் செலுத்தும் முக்கியத்துவம் ஆகும். 

காதலில் நேரம்: 

காதலுக்கு முன் இவர் நம்மை கண்டு கொள்வாரா, ஒரு அறிமுகம் கிடைக்குமா என ஏங்குவோம். ஆனால் காதலிக்கத் தொடங்கியதும் நமக்குள் நமது  அன்புக்குரியவர்தான் என்ற அலட்சியப் பார்வை மேலோங்கும் அது தவறானது ஆகும். 

நீங்கள் செய்யும் வேலையில் அலட்சியம் காட்டினால் என்ன நடக்கும் அதுபோல்தான் காதலிலும், உங்கள் அமைதி, இதயத்தின் நெருங்கியவருக்கென நீங்கள் கொடுக்கும் அந்த சிறிது நேரங்கள் கூட  அவர்களுக்கு நீங்காத ஒன்றாகும். ஒவ்வொரு நாளும் நமக்கு ஒவ்வொரு விருப்பங்கள் எண்ணங்கள் இருக்கும் ஆனால் நம்மால் விருப்பங்களை நிறைவேற்றும் பொழுது அதனை நிறைவேற்ற நமது அன்புக்குரியவர் துணை புரியும் பொழுது அதன் சுகமே என்றும்  நீங்காத ஒரு நினைவாக இருக்கும். நாம் வாழ்வுக்கு துணையாக, நமது எண்ணங்களுக்கு விருப்பங்களை நிறைவேற்றி விழா எடுக்கும் காதலனோ, காதலியோ அவர்கள் உங்களவர்கள் ஆகின்றனர். அவர்களுக்கு நீங்கள் திருப்பி செலுத்த வேண்டியது அவர்களுக்கு கொடுக்கும் விலைமதிப்பற்ற உங்கள் அன்பு, நேரம், பாதுகாப்பு ஆகியவை ஆகும். 

மேலும் படிக்க: காதலில் பரஸ்பர பாராட்டு அவசியமானது

காலம் காதலன்/காதலிக்குரியது: 

காதலனோ, காதலியோ உங்கள் அன்புக்குரியவருக்கு உரிய முக்கியத்துவம் என்பது அவசியம் ஆகும். அவர்களுக்கான  நேரத்தை நீங்களாக செலவிடும் பொழுது இருவருக்குள்ளும் பகிர்வு என்பது பல இருக்கும். உங்களது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் உங்களது விருப்பு, வெருப்புகள் ஆகிய அனைத்தும் ஆலோசனை செய்வதற்கு நல்ல வாய்பாக இருக்கும். இருவருக்குள்ளூம் பிடித்தது, பிடிக்காதது தெரியும் பொழுது ஒருவர் மனது இன்னொருவர் அறிவர் அதனால் தேவையற்ற பேச்சு,  ஈகோ போன்ற சொற்களுக்கு இடமே இருக்காது. 

கலந்துரையாடல்: 

காதலில் நேரம் செலவிடுதல் எவ்வளவு அவசியமோ அதை போல், ஒளிவு மறைவின்றி  பேச வேண்டும். இருவருக்குள் ஆதமாதமான பந்தமானது வளர வேண்டுமெனில் தயக்கங்கள், தடுமாற்றங்கள் இன்றி பேசுவது முக்கியமானது ஆகும். அதனை  காதலிப்பவர்கள் முக்கியத்துவம் கொடுத்து பேச வேண்டும். வேலைப்பளு, உணவில் பிடித்தது, கண்ணும் கண்ணூம் கொள்ளயடித்தல் போன்ற பார்வை பரிமாற்றங்கள் இருக்கும் பொழுது இனிமையான வாழ்வானது அமையும் என்ற நம்பிக்கை கிடைக்கும். இருவரையும்  இல்லறத்தை நோக்கி நகரச் செய்யும். 

காதலில் இருக்ககூடாத கடுமை: 

உங்கள் அன்புக்குரியவரைப் பற்றி நன்கு அறிந்து செயல்படுதல் என்பது அவசியம் ஆகும்.  காதலிப்பவர்களிடம் கோபத்தை காட்டலாம் ஆனால் கடுமைத்தனத்தை காட்டாதீர்கள். ஒரு முறை கடுமையாக நடந்தால் கூட உங்கள் மீதான அபிப்ராயம் மாறலாம். எப்பொழுதும் நாம் இனிமையுடன் நடந்து கொண்டால்   இன்பம் பொங்கும். அமைதி என்பது ஆரம்பமாகும்.  


மேலும் படிக்க: அன்பின் அடுத்த பரிமாற்றம் அழகிய முத்தம்

உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்: 

அன்புக்குரியவர்களின் குடும்பம், வேலைப்பளு,  நண்பர்கள், சூழல்கள் ஆகிய அனைத்தும் முதலில் தெரிந்து கொள்வது முக்கியம் ஆகும். அவர்களின் உணர்வுகள் என்பது உங்களைப் போன்றது, உங்களது உணர்வுகளைப் போன்றது ஆகும்.  இதனை மட்டும் நாம் தெரிந்து கொண்டால் இருவருக்குள்ளும் பரஸ்பரம் அன்பு கிடைக்கும். 

மேலும் படிக்க: எல்லைகளை கடந்த எல்லோருள்ளும் பயணிக்கும் காதல்!

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன