காதலர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய காதல் திரைப்படங்கள்!

1. காதல் 

2004 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை இயக்கியவர் பாலாஜி சக்திவேல் இளம் பருவத்தில் நமக்கு ஏற்படும் காதலைப் பற்றி அழகாக இந்த படத்தில் காட்சி அமைத்திருப்பார் காதலில் ஏற்படும் வலி, எதிர்ப்பு போன்ற எல்லாவற்றையும் இந்த படத்தில் கண் திறப்பார் காதலென்றால் இறுதியில் காதலனும் காதலியும் ஒன்று சேர்வது தான் என்று பல படங்களை நாம் பார்த்திருப்போம் ஆனால் இந்தப்படம் எதிர்பாராதவிதமான ஒரு இறுதிக் காட்சியை கொண்டது அடிப்படையில் இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.

2. அலைபாயுதே 

2000 ஆண்டு வெளிவந்த இந்த படத்தை இயக்கியவர் மணிரத்னம் காதல் திரைப்படங்களை இயக்குவதில் இவரைப் போன்ற அனுபவசாலி யாரும் இருக்கமாட்டார்கள் இந்த திரைப்படத்தில் காதல் தாக்கம் மற்றும் அதனால் குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்டவர்களில் வாழ்க்கை பற்றிய படம் ஆரம்பத்தில் எல்லார்க்கும் காதல் இருக்கிறது ஆனால் திருமணமான பின்பு அந்த காதல் கசக்க ஆரம்பிக்கிறது இந்த கட்டத்தை எவர் தாண்டு கிறார்களோ அவரே தன் வாழ்க்கையில் வெற்றி காண்பார்கள் எது நடந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இறுதிவரை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பதுதான் காதல் என்பதை இந்த திரைப்படம் நமக்கு உணர வைத்திருக்கும்.

மேலும் படிக்க – தமிழில் அழகான வரிகளை கொண்ட சிறந்த 10 காதல் பாடல்கள்

3. 96 

2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் பிரேம்குமார் இந்த படத்தில் த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் பெயரில் வாழ்ந்திருந்தார்கள் பள்ளி பருவத்தில் ஏற்பட்ட அன்பு படிப்படியாக காதலாக மாறி இறுதியில் ஒருவருக்கொருவர் நண்பராக கூட இல்லாமல் வாழ்பவரின் கதைதான் இந்தப் படம் எல்லோருக்கும் காதல் தோல்வி என்று ஒன்று இருக்கும் ஆனால் ஒரு சிலரோ அந்தத் தோல்வியை கடந்து வர முடியாமல் அங்கேயே நின்று தன் வாழ்க்கையை பின்னோக்கி வாழ்கிறார்கள் அப்படிப்பட்ட ஒரு மனிதனின் வாழ்க்கையை பற்றியதுதான் இந்த படம் பல பேருடைய நிஜ வாழ்க்கையை கொண்டு சேர்க்கும் வகையில் இந்தத் திரைப்படம் இருக்கும்.

4. பருத்திவீரன் 

2007ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை இயக்கியவர் அமீர் கிராமப்புறங்களில் ரவுடியாக வலம்வரும் கதாநாயகனுக்கு உறவான ஒருமுறை பெண் இவர்களுக்குள் ஏற்படும் முரட்டுத்தனமான காதலும் இறுதியில் இவர்கள் வாழ்க்கையில் நடக்கக் கூடாத சம்பவங்களைப் பற்றியதுதான் இந்த திரைப்படம் இதில் காதலுக்கு முன்பு மற்றும் காதலுக்கு பின்பு என்ற இருவகையான மாற்றத்தை நம்மால் காண முடியும் ஆனால் நாம் செய்த தவறுகளால் நமது எதிர்காலம் பாதிப்படையும் என்பதை இந்தத் திரைப்படம் அனைவருக்கும் எடுத்துரைத்தது.

மேலும் படிக்க – 21ம் நூற்றாண்டின் சிறந்த பத்து பாடல்கள்!

5. மைனா 

2010ல் வெளியான இந்த திரைப்படத்தை இயக்கியவர் பிரபுசாலமன் சிறுவயது முதல் தன் மணக்கப் போகும் சந்தோஷத்தில் வாழ்ந்துவந்த கதாநாயகனுக்கு அதிர்ச்சியளித்த கதாநாயகியின் அம்மா என்று தொடங்கப்பட்ட கதை எதிர்பார்க்காத விதத்தில் நம்மை கொண்டு சென்று சந்தோஷப்படுத்தி வருத்தப்பட வைத்து நம்மை அழ வைக்கும் ஒரு காதல் திரைப்படம் தான் மைனா விதி கொண்டு செல்லும் வழியில் பயணித்து இருக்கும் இவர்களின் வாழ்க்கை அடுத்தவரின் தவறால் எப்படி மாறுகிறது என்பதை இந்த படத்தில் நமக்கு உணர்த்தி இருப்பார்கள் காதலுக்கு கொஞ்சம் கூட குறை இல்லாமல் அழகாக ஒவ்வொரு காட்சியிலும் நம்மை உணர வைத்து இருப்பார்கள்.

6. குணா 

1991-ல் வெளியான இந்தத் திரைப்படத்தின் திரைக்கதை எழுதியவர் சாப் ஜான் இந்த படத்தை இயக்கியவர் சந்தானபாரதி ஒரு மனநோயாளியாக வலம்வரும் கதாநாயகனுக்கு ஆறுதலாக இருப்பது தன் கற்பனை காதலியான அபிராமி உடல் வலிமையான இவர் காதலுக்காக எந்த எல்லை வரும் செல்லக்கூடிய ஒரு இளகிய மனம் கொண்டவர் குணா. காதலுக்காக உயிரையே கொடுப்பேன் என்று சொல்லும் எவரும் அதை செய்வதில்லை ஆனால் நம் கண்களை கலங்க வைக்கும் வகையில் இந்தப்படம் நமக்கு ஒரு உணர்ச்சிப்பூர்வமான அனுபவம் தரும்.

மேலும் படிக்க – ஒரு ஆண் உங்களை காதலிக்கிறாரா என்பதை அறிவதற்கான வழிகள்..!

7. இதயம் 

1991ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் கதிர் படத்தில் கதாநாயகன் தன்னைவிட மிக அழகாக இருக்கும் பெண்ணை ஒருதலையாக காதலிக்கிறார் ஒவ்வொரு முறையும் அந்த காதலை வெளிப்படுவதற்கான அவர் எடுக்கும் முயற்சிகளும் அதனால் அவர் படும் கஷ்டங்களும் நம்மை நேரடியாக பாதிக்க செய்யும் காதல் என்று வந்தவுடன் கண்மூடித்தனமாக இருக்கும் ஆண்கள் அதை வெளிப்படுத்துவது என்பதை சிந்திக்கும் நிலையில் தான் அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை தோன்றுகிறது இப்படிப்பட்ட சிக்கலில் தன் காதலை வெளிப்படுத்தி அதனால் ஏற்படும் மன கஷ்டங்களை வெளிப்படுத்தாமல் உடல் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவரை பற்றியதுதான் இந்தப் படம்.

8. காதல் கோட்டை 

1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை இயக்கியவர் அகத்தியன் அஜித் குமார் மற்றும் தேவயானி நடித்திருந்த இந்தப் படம் அந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது நாம் எதிரெதிரே பார்த்து காதல் கொண்டு இருக்கும் காலத்தில் ஒருவரை ஒருவர் பார்க்காமல் தான் செய்த உதவியை மறக்காமல் அவரைப் பற்றி யோசித்து உருகும் கதைக்களத்தை கொண்டதுதான் இந்த திரைப்படம் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திப்பதற்காக எடுக்கும் முயற்சிகள் மற்றும் இதனால் இவர்கள் தவிக்கும் தவிப்பு அனைத்தையும் நம்மையே உணர வைக்கும் அளவிற்கு இந்த திரைப்படம் அமைந்திருக்கும் இவர்கள் இருவருக்கும் இடையே ஏகப்பட்ட தடைகள் இருந்தாலும் இவர்கள் காதலில் உள்ள குறிக்கோள் என்றும் மாறாமல் இறுதியில் ஒன்று சேர்வார்கள்.

9. 7ஜி ரெயின்போ காலனி 

2004-ம் ஆண்டில் வெளிவந்த இந்த திரைப்படத்தை இயக்கியவர் செல்வராகவன் எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல் விளையாட்டுத்தனமாக பெண்கள் பின்னால் சுற்றி திரியும் ஒரு சாதாரண இளைஞனின் கதைதான் இந்த திரைப்படம் காதல் ஏற்பட்ட பிறகு இவரின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் ஒழுக்கங்கள் நோக்கங்கள் அனைத்தும் மாறுகிறது ஒரு பெண் தன் வாழ்க்கையில் வருவதற்காக எல்லா முயற்சிகளையும் எடுத்து அதில் வெற்றி கண்டு அவள் அவளுடன் வாழ முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படும் இளைஞனாக மாற்றும் இந்தப் படத்தின் திரைக்கதை இளைஞர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தையும் வருத்தத்தையும் அளித்தது.

10. மதராசபட்டினம் 

2010ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த திரைப்படத்தை இயக்கியவர் ஏ எல் விஜய் 1940களில் மதராசப் பட்டினத்தில் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருக்கும்போது நிகழ்ந்த கற்பனையான கதைதான் இந்த திரைப்படம் அரசாங்க பதவியில் ஆங்கிலேயருக்கு பிறந்த மகளை சாதாரண இந்திய இளைஞன் காதலிக்கும் கதைதான் இந்த திரைப்படம் காதலுக்கு கண்ணில்லை என்பார்கள் ஆனால் இந்தப்படத்தில் மொழியும் தேவையில்லை என்பதை உணர்த்தி இருப்பார்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பை தங்கள் முகபாவனைகளை மூலமாக வெளிப்படுத்தி இருப்பார்கள் இறுதியில் இவர்கள் ஒன்று சேர்வதற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நம்மை  படபடக்க வைத்துவிடும். 

11. மௌன ராகம் 

1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை இயக்கியவர் மணிரத்னம் இருவிதமான காதலை கலந்து கொண்ட இந்த திரைப்படத்தில் நமக்கு ஏகப்பட்ட காதல் பாடங்களை கற்றுத் தந்து விடும் அடிதடி மற்றும் சண்டைக்கு செல்லும் கதாநாயகனை தன் கட்டுக்குள் கொண்டுவரும் காதலி மென்மையாகவும் அரவணைக்கும் கணவன் இருக்கும் மனைவியாக நடித்திருப்பார் இந்த படத்தின் கதாநாயகி காதலுக்கு எவ்வளவு புரிதல் தேவை என்பதை இந்த திரைப்படம் நமக்கு உணர்த்தி இருக்கும் காதல் மலர்வதற்கு நேரம் தேவை அதை நாம் உருவாக்க முடியாது தானாக நடக்க வேண்டும்.

12. மூன்றாம் பிறை 

1982 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை இயக்கியவர் பாலுமகேந்திரா கமலஹாசன் ஸ்ரீதேவி நடித்திருந்தா இந்த திரைப்படம் பல பேர் மனதை புண்படுத்திவிடும் படத்தின் இறுதியில் யாரும் இறக்கவில்லை இருந்தாலும் இதயத்தை கிழிக்கும் அளவுக்கு ஒரு வலி ஏற்படும் இத்தகைய அற்புதமான காதல் காவியத்தை படமாக தந்தவர் படத்தின் இயக்குனர் பாலு மகேந்திரா மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை காதலித்து மணம் பாதிப்புக்குள்ளாகும் காதலனின் கதை..

காதல் என்பது எல்லேருடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே இருக்கும் ஆனால் அதை நாம் சரியாக புரிந்து கொள்ளாமல் காதலி மேல் குற்றத்தை வைத்து நம் காதலை அவமதிக்கிறேம் காதலென்பது என்றும் அழியாத ஒரு அற்புதமான உணர்வு அதை கொச்சை படுத்தாமல் அதைப் பற்றி உணர்ந்து உங்களை விரும்பும் நபரை காதலியுங்கள் உங்களை விரும்பாதவர்களை வெறுக்காமல் காதலிக்க முயற்சி செய்யுங்கள் காதல் என்றுமே ஒரு அற்புதமான உணர்வு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன