ஆப்பிள் சீடர் வினிகரின் பயன்கள்.!

  • by
multiple benefits of apple cedar vinegar

ஆப்பிள் சீடர் வினிகர் என்பது ஆப்பிள், சர்க்கரை, ஈஸ்ட் போன்றவைகளை ஒன்றாக சேர்த்து செய்யப்படுவது. ஆப்பிளை பிழிந்து அதன் சாற்றில் இருந்து எடுக்கப்படும் இந்த ஆப்பிள் சீடர் வினிகரில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன, அதை என்னவென்று இப்பதிவில் காணலாம்.

வினிகரின் பண்பு

பொதுவாக வினிகர் என்றாலே தொண்டையில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுகளை அகற்ற வல்லது. அதேபோல் ஆப்பிள் சீடர் வினிகருடன் சிறிது தேன் சேர்த்து அருந்தி வந்தால் நமக்கு ஏற்படும் இருமல் மற்றும் அனைத்து தொண்டை பிரச்சினைகளையும் போக்கிவிடும். அதை தவிர நமது வயிற்றில் உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் ஆப்பிள் சீடர் வினிகருடன் தேன் கலந்து அதை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து குடிப்பதினால் நெஞ்செரிச்சல் விலகிவிடும்.

மேலும் படிக்க – கொரனோ வைரஸ் போன்ற நோய் கிருமிகளில் தடுப்பு!

வெயிலில் இருந்து பாதுகாக்க

வெயில் அதிகமாக இருக்கும் சமயங்களில் நாம் வெளியே செல்வதற்கு முன்பாக ஆப்பிள் சீடர் வினிகரை நம் உடல் முழுக்க நன்றாகத் தேய்த்து பின்பு 10 நிமிடங்கள் ஊறவைத்து குளிப்பதன் மூலம் வெயில் அதிகமாக உங்கள் சருமத்தில் ஊடுருவாது.

ஒரு சிலர் கை, கால்களில் பூஞ்சைகள் ஏற்படும் இதை தடுப்பதற்கு நாம் ஆப்பிள் சீடர் வினிகரை நம் கால்கள் மற்றும் கைகளில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்து கழுவினால் நல்ல தீர்வு கிடைக்கும்.

வெயிலினால் ஏற்படும் அரிப்புகளை அகற்றுவதற்கு எரிச்சல் உள்ள பகுதிகளில் ஆப்பிள் சீடர் வினிகரை தேய்த்து பயன் பெறலாம்.

சைனஸ்க்கு தீர்வு

ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து அருந்துவதினால் சைனஸ் பிரச்சனை அடியோடு தீர்ந்துவிடும். இதன் மூலமாக உங்களின் உடல் ஆற்றலும் அதிகரிக்கும். அதேபோல் உடற்பயிற்சிக்குப் பின் ஏற்படும் சோர்வும் நீங்கிவிடும்.

மேலும் படிக்க – கால் வலியை நிரந்தரமாக தீர்க்கும் வழிகள்..!

பற்கள் பாதுகாப்பு

அலர்ஜியை விலகிவிடும், தசைப்பிடிப்பை போக்கிவிடும், சருமத்தை சுத்தம் செய்யும் இதைத்தவிர்த்து இதை பல்களில் தேய்பதன் மூலமாக நமது பற்கள் வெண்மை அடையும், ஆனால் இதை தொடர்ந்து தேய்க்கக்கூடாது பற்களில் உள்ள எனாமல் குறைந்துவிடும்.

உடல் துர்நாற்றம் உள்ளவர்கள் இதை அதிகமாக நாற்றம் வீசும் பகுதிகளில் தேய்த்து குளிப்பதனால் நல்ல தீர்வு கிடைக்கும்.

மற்ற பயன்கள்

இதை குளிப்பதற்கு முன் தலையில் நன்கு தேய்த்து மசாஜ் செய்வதன் மூலமாக உங்கள் தலையில் ஏற்படும் பொடுகுகள் விலகும். இதை வாயில் கொண்டு கொப்பளிப்பதன் மூலமாக வாய்துர்நாற்றம் விலகும். பல நாட்களாக இருக்கும் காய்கறிகளை வினிகர் கலந்த தண்ணீரில் கழுவுவதன் மூலம் அதில் இருக்கும் அனைத்து பாக்டீரியாக்களும் விலகும்.

இதைப்போல் பலவிதமான வழிகளில் நாம் பயன்படுத்த முடியும். ஆனால் ஒரு சிலருக்கு இந்த ஆப்பிள் சீடர் வினிகர் ஏற்றுக்கொள்ளாது. எனவே அலர்ஜி உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை கேட்டு பிறகு இதை பயன்படுத்தலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன