பேஸ் பேக்குகளின் வகைகள் தன்மை அறிவோம் வாங்க

  • by

அனைவருக்குமே ஒரே வகையான சருமம் இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சருமம். அவை எண்ணெய் பசையுள்ள சருமம், வறட்சியான சருமம், நார்மல் சருமம் போன்றவை. மேலும் இந்த ஒவ்வொரு வகையான சருமத்திற்கும், தனித்தனி ஃபேஸ் பேக்குகள்  உள்ளன. இதனை நாம் பயன்படுத்து அழகைப் பராமரிக்கலாம். பேஸ் பேக்குகள் சருமங்களுக்கு பல்வேறு நலன்களை கொண்டது ஆகும்.

மேலும் படிக்க: எளிய மேக் அப்புக்கு இதை இப்படி செய்யுங்க

ஒரு சிலருக்கு தமக்கு எந்த வகையான சருமம் உள்ளது என்று தெரியாது. இது போன்றவர்களுக்கு அத்தகையவர்களுக்காக அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற பொதுவான சில ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி, சருமத்தை அழகாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ளலாம்.

ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் சந்தனப் பொடி அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில்  தடவி ஊற வைத்து கழுவினால், சருமம் மென்மையாவதுடன், அழகாகவும், வறட்சியின்றிவும் இருக்கும். மாசு மங்கு குறையும் தேவையெனில் முட்டையுடன் சிறிது தேன் சேர்த்து கலந்தும் சாப்பிடலாம்.

தயிர் பேக்குகள்:

கடலை மாவு சிறந்த குளோ கொடுக்கும் தன்மை உடையது, தயிர், சிறிது தேன் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் தேய்த்து கழுவ வேண்டும், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி முகம் பொலிவாக்கும் தன்மையை தயிர் கொடுக்கும்.

தயிர் பேசியல்

அழகு மற்றும் மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் தூளை, தயிர் அல்லது பாலுடன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள  முகப்பருக்கள் மற்றும் கருமை நீங்கி, முகம் அழகாக காணப்படும்.
மேலும் படிக்க:சருமத்தில் பிரச்சனையா..இதோ உங்களுக்கான தீர்வு..!

ரோஸ் டோனர்:

ரோஸ் வாட்டர் ஒரு நேச்சுரல் டோனர். இது அனைத்து வகையான சருமத்தினரும் சருமத்திற்கு பயன்படும். ரோஸ்வாட்டர் சேர்த்து சந்தன பவுடர் கலந்து கலவையை, ஃபேஸ் பேக் போட்டால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, முகம்  பளிச்சென்று இருக்கும்.

பப்பாளி பேக்:

பப்பாளியை நன்றாக சிறிய துண்டுகளாக நறுக்கி மசித்து வைக்க வேண்டும் அதனுடன் சர்க்கரை ஒரு ஸ்பூன் சேர்த்து அந்த கலவையை முழுமையா முகம்கை கால்களில் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவலாம்.

பப்பாளி பேசியல்

மாம்பழம் சுவையானது மட்டுமில்லை அதில் சருமத்திற்கு தேவையான சத்துகளும் இருக்கிறது. இதை முகத்திற்கும் பயன்படுத்தலாம். மாம்பழத்தை வைத்து இயற்கையாக சருமத்தின் கருமையை போக்க உதவும் சில பேஸ் பேக்குகளை விரிவாக பார்க்கலாம்.

சர்க்கரை பேஸ் பேக்:

சாதாரணமாக மஞ்சளும், உப்பும் அழுக்குகளை அகற்றும் மாசு போக்கும். நிறத்தை பொலிவாக்கும். முகத்தை பளிச்சிட வைக்கும். சர்க்கரையும் அவைகளுக்கு போட்டியாக சருமத்தை காக்கும். இந்த சர்க்கரை ஃபேஸ் பேக்கை முறைப்படி செய்து பயன்படுத்துதல் சிறந்தது ஆகும். சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன், ஆலிவ் ஆயில் – 2 சொட்டு, எலுமிச்சை சாறு – 2 சொட்டு.

மேலும் படிக்க:முகத்தில் உடனடி பொலிவை பெறுவதற்கு இதை செய்யுங்கள்.!

எலுமிச்சை சாறு முகத்திலுள்ள கருமையை போக்கும். சர்க்கரை இறந்த செல்களை அகற்றும். ஆலிவ் ஆயில் சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து  முகத்தை பொலிவாக்கும். ஆலிவ் ஆயிலுடன் சர்க்கரையையும், எலுமிச்சை சாறினையும் சேர்த்து நன்றாக கலக்கவும். அதனை முகம், கழுத்து கை கால்களில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன