பாதுகாப்பான பாரம்பரிய தமிழர்களின் பழக்க வழக்கங்கள்..!

  • by
most secured habits followed by ancient tamil people

அக்காலத்தில் வாழ்ந்த முன்னோர்கள் நமக்கு ஏராளமான நன்மைகளை நமக்காக விட்டு சென்றுள்ளார்கள். ஆனால் நாம் அதை பின் தொடராமல் தேவையற்ற செயல்களை செய்து நம்முடைய ஆரோக்கியத்தை அழித்து வருகிறோம். நாம் அக்கால பழக்கங்களை பின்தொடர்வது மூலமாக நாம் மீண்டும் ஆரோக்கியமாகவும் மற்றும் நம்முடைய சுற்றுச்சூழலை பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள முடியும்.

உணவே மருந்து

அக்காலத் தமிழர்கள் உணவே மருந்து என்று வாழ்ந்து வந்தவர்கள். தாங்கள் சாப்பிடும் உணவுகளில் ஏராளமான சக்திகள் மற்றும் ஆற்றல்கள் இருந்தது. அவர்கள் தானிய உணவுகள், பழங்கள், காய்கறிகளை அதிகமாக பயன்படுத்தி வலிமையாக இருந்தார்கள், இதன் மூலமாக எந்த ஒரு உடல் பிரச்சனைகளும் ஏற்படாமல் உறுதியாக இருந்தார்கள். அதேபோல் ஒவ்வொரு கால மாற்றத்திற்கு ஏற்றார்போல் உணர்வுகளை அருந்து வந்தோம். ஆனால் இக்கால உணவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பிரச்சினையை அளிக்கிறது. இதை தவிர்த்து இயற்கையினால் செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு நாம் வலுவாக இருக்கலாம்.

மேலும் படிக்க – கனடா நாட்டுக் கொடியில் இருக்கும் மாப்பில் இலையின் வரலாறு..!

எண்ணெய் குளியல்

அக்காலத்தில் கோடை காலங்களில் ஒவ்வொரு வாரமும் விளக்கெண்ணையை கொண்டு குளியலை மேற்கொண்டு வந்தோம். இதன் மூலமாக உங்கள் உடல் மற்றும் தலை குளிர்ச்சி அடைந்து உங்களின் மேல் எந்த ஒரு நோய்த்தொற்றுகள் அண்டாமல் பார்த்துக் கொண்டார்கள். ஆண்கள் புதன் கிழமை மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் குளியல் மேற்கொள்வது தமிழர்களின் பாரம்பரிய பழக்கமாக இருந்தது.

கலைகளுடன் வாழ்ந்தோம்

அக்காலத் தமிழர்கள் உடற்பயிற்சியைக் கலைகள் மூலமாக செய்து வந்தார்கள். பரதநாட்டியம், குச்சிப்புடி, சிலம்பாட்டம் போன்ற கலையை கற்று தேர்ச்சி பெற்றார். இதன் மூலமாக அவர்கள் உடல் ஒல்லியாகவும் மிக ஆரோக்கியமாகவும் இருந்தது.

நீரை தெய்வமாக பார்த்தார்கள்

நாம் இன்றும் கிராமப்புறங்களுக்கு செல்லும்போது வீட்டிற்கு வெளியே தொட்டியில் நீர் வைத்திருப்பார்கள். அது எதற்கு என்றால் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பாக நாம் கை, கால்களை கழுவிவிட்டு நுழைய வேண்டும். இதை அக்கால தமிழர்கள் பின் தொடர்ந்த ஆரோக்கியமான செயல். இதன் மூலமாக வீட்டில் உள்ளே எந்த ஒரு நோய்களும் அண்டாது. இதைத்தவிர்த்து தியானம், வழிபாடுகள், கோவில்கள் போன்ற எல்லாவற்றிலும் நீரின் பங்கு அதிகமாக இருந்தது.

மேலும் படிக்க – பழங்கால தமிழர்களின் வாழ்க்கை முறைகள்..!

மூலிகைகளை பயன்படுத்தினார்கள்

உங்கள் சருமம், உடல், தலை என அனைத்திற்கும் மூலிகைகளை பயன்படுத்தி வலுவுட்டினார்கள். ஆலுவேரா, துளசி, புதினா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி, வேப்பிலை போன்றவைகளை தமிழர்கள் அதிகளவில் பயன்படுத்தி ஆரோக்கியமாக இருந்தார்கள்.

சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை, உணவுகளை வீணாக்காமல் மறுசுழற்சி செய்வது, ஒவ்வொரு காலங்களுக்கு ஏற்றார்போல் உடைகளை அணிவது, மற்றும் ஆயுர்வேத கசாயங்கள், உணவுகளை சாப்பிடுவது என ஏராளமான பாரம்பரிய முறைகள் தமிழர்கள் பின் தொடர்ந்து வந்தார்கள். இதை நாமும் பின்தொடர்ந்து ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன