மர்மங்கள் நிறைந்த பூமி!!!

  • by
most haunted places around the world

நம் வாழ்வில் பூமி என்பது மர்மங்கள் நிறைந்த ஒரு பகுதிதான். விஞ்ஞானத்தின் அடிப்படையில் அணுகினால் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைப்பதில்லை. என்றுமே பதில் கிடைக்காத கேள்விகள் நம் எண்ணத்தில் எழுந்து கொண்டே தான் இருக்கும். அப்படிப்பட்ட பூமியில் பல விசித்திரமான இடங்கள் காணப்படுகின்றன. 

க்ரூப் பாரஸ்ட்

இந்த குரூப் பாரஸ்ட் போலந்து நாட்டில் அமைந்திருக்கிறது. இந்த மரங்கள் கொக்கி வடிவில் காணப்படுகின்றன.1930 ஆம் ஆண்டு சுமார் 400 பைன் மரங்கள் நடப்பட்டன என்று கணக்கெடுப்பு கூறுகிறது. இந்த மாதிரி மரங்கள் வளர சில டெக்னிக்குகள் அல்லது மனிதர்களின் உத்திகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றனர். சிலர் பனிப்புயல் காரணமாகவும் மரங்கள் இந்த மாதிரி கொக்கி வடிவில் உருவாக்கி இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

மேலும் படிக்க – பலிபீடம் என்றால் என்ன அதை எதற்கு பயன்படுத்தினார்கள்..!

டால்ஸ் தீவு

இந்த டைல்ஸ் தீவு மெக்சிகோவில் அமைந்திருக்கிறது. இதனை “ஐலந்து ஆப் தி டால்ஸ்” என்றும் அழைக்கின்றனர். இந்தத் தீவில் சிறுவயதிலேயே இறந்து போன ஒரு குழந்தையின் ஆன்மாவை நினைவூட்டும் வகையில் உள்ளது. இந்த மெக்ஸிகோ நகரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வந்தாலும், ஆனால் இந்த சிறிய நகரத்தில் நூற்றுக்கணக்கான பொம்மைகள் மரங்களில் அடித்து வைக்கப்பட்டுள்ளன. தலையில்லாத கண்ணில்லாத கை கால்கள் இல்லாத பொம்மைகள் கூட இங்கு காணப்படுகின்றன. சில சமயங்களில் இந்த பொம்மைகள் பேசிக்கொள்வதை போலவும் கேட்கின்றன என்று மக்கள் கூறுகின்றனர். விசித்திரமான பூமிதான்.

தலக்காடு எனும் இடத்தில் காணப்படும் சிறிய பாலைவனம்

கர்நாடக மாநிலத்தில் சாமராஜநகர் என்னும் இடத்தில் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு கிராமம் மணல் நிறைந்த பிரதேசமாக உள்ளது. ஒரு காலத்தில் இந்த தலக்காடு எனும் ஊரில் 30 கோயில்கள் இருந்ததாக நம்பப்படுகிறது. அவற்றில் ஐந்து சிவபெருமானின் ஐந்து முகங்களைக் குறிக்கும் விதத்தில் காணப்படுமாம். இந்த இடத்தில் சிவபெருமானின் ஒரு விதவை பக்தை இந்த பகுதியை சபித்ததாக கூறப்படுகிறது. பிறகு இந்த இடம் ஒரு பாலைவனமாகவும்,  இந்தியாவிலேயே மிக மர்மமான இடமாகவும் மாறியது என்று மக்கள் கூறுகின்றனர்.

எலிகள் சூழ்ந்து காணப்படும் கர்ணி மாதா கோயில்.

இந்தக் கோவில் இராஜஸ்தானில் காணப்படுகிறது. இந்த கர்ணி மாதா கோயில் புனித தலங்களில் ஒரு இடமாகும். இந்த இடமும் மிக மர்மமான பகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோவிலில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எலிகள் காணப்படுகின்றன. இந்த எலிகளை துன்புறுத்தவோ அல்லது கொல்லவோ காயப்படுத்தவும் யாருக்கும் அனுமதி கிடையாது. இங்கு இந்த எலிகள் புனிதமானதாக கருதப்படுகின்றன. இங்கு கடவுளை வணங்க வரும் மனிதர்களை விட இந்த எலிகளுக்கு மதிப்பு அதிகம். இந்த எலிகளை மற்றொரு தெய்வமாகவே மக்கள் தரிசிக்கின்றனர். இங்கு அரிய வகை வெள்ளை எலிகள் காணப்படுகின்றன. இவற்றை மாதாவின் மகன்களாக மக்கள் கருதுகின்றனர். இங்கு காணப்படும் எலிகளை கர்ணி மாதாவின் மறுபிறவி உறவினர்கள் அல்லது குடும்ப உறவினர்கள் என்று மக்கள் நம்புகிறார்கள்.

மேலும் படிக்க – பழங்குடியினர்களின் உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகள்..!

தொங்கும் தூண்

ஆந்திராவில் லேபாக்ஷி எனும் நகரில் இந்த தொங்கும் தூண் காணப்படுகிறது.  இந்தியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் முக்கியமான ஒரு இடமாக காணப்படும் இங்கு பல வரலாற்று சிறப்புமிக்க கட்டிடக் கலைகளும் ஓவியங்களும் காணப்படுகின்றன. சிவபெருமானுக்காக கட்டப்பட்ட இந்த கோவிலில் ஒரு தொங்கும் தூண் காணப்படுகிறது. இங்கு சுமார் 70 தூண்கள் காணப்படுகின்றன. அதில் ஒரு தூண் தரையில் படாமல் காணப்படுகிறது. இந்த தூணுக்கடியில் ஒருவரால் ஒரு பகுதியிலிருந்து துணியை விட்டு மறு பகுதியில் எடுக்க முடியும். இந்தக் கோயிலைக் கட்டியவர் கண்டிப்பாக மிகப்பெரும் மேதாவியாக இருந்திருப்பார் என்று மக்கள் கூறுகின்றனர்.

இது போன்று நம் இந்தியாவில் பல வரலாற்று சிறப்புமிக்க நகரங்கள் காணப்படுகின்றன. அங்கு பல மர்மங்களும் நிறைந்த தான் காணப்படுகின்றன. எல்லோரும் கேள்விப்பட்ட கேரளாவில் உள்ள பத்மநாதபுர கோவிலும் இதில் அடங்கும். இங்க உள்ள ஒரு அறையில் என்ன இருக்கிறது என்று இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அரசாங்கம் கூட இந்த கோவிலை துணிந்து திறக்க முன்வரவில்லை. இந்த கோவில் உள்ள அந்த அறையை திறந்தால் இந்தியாவின் பணத்தட்டுப்பாடு நீங்கி செழுமை பெறும் என்று சிலர் பேசி வருகின்றனர். இது போன்று பல ரகசியங்கள் புதைந்து கிடக்கிறது அந்த கோவிலில். மீண்டும் ஒரு நல்ல தலைப்போடு உங்களை சந்திக்கிறேன் நன்றி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன