இந்தியாவில் புகழைப் பறைசாற்றும் வரலாற்று சின்னங்கள்!

  • by
most famous monuments which are pride of india

இந்தியா தனக்குள் மிகப்பெரும் வரலாற்றை உள்ளடக்கியுள்ளது. வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கட்டிடம் கலைகளும்,,கோயில்களும், சிற்பங்களும் நிறைந்து காணப்படுகின்றன. இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க கட்டிடக்கலையும், ஓவியக் கலையும், சிற்பக் கலைகளையும் காண்பதற்காகவே பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வெளிநாட்டவர்கள் மட்டுமல்லாது இந்தியர்களும் முக்கியமாக தெரிந்து கொள்ளவேண்டியவை. 

விக்டோரியா மெமோரியல்

விக்டோரியா மெமோரியல் கொல்கத்தாவில் அமைந்துள்ளது. தாஜ்மஹாலை போன்று கட்டப்பட்டுள்ள இந்த விக்டோரியா மெமோரியல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தை நினைவுபடுத்தும் ஒரு சான்று ஆகும். 1921 ஆம் ஆண்டு முதல் இந்த மாளிகை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த மாளிகையில் பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தினரின் பல அரிய புகைப்படங்கள் காணப்படுகின்றன. நாயகா இந்த மாளிகை ராணி விக்டோரியாவின் நினைவுச் சின்னமாக கட்டப்பட்டது.தற்போது இது அருங்காட்சியமாகவும் மற்றும் மிகவும் புகழ்பெற்ற ஒரு சுற்றுலாத் தலமாகவும் இருந்து வருகிறது.

மேலும் படிக்க – பழங்குடியினர்களின் உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகள்..!

பகாய் வழிபாட்டுத்தலம்

இந்தப் பகாய் வழிபாட்டுத்தலம் அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்களை கொண்டதற்காக 2001ஆம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இது ஒரு ஆன்மீக ஸ்தலம் ஆகும். இந்தக் கோவில் தாமரைக் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. 1986ஆம் ஆண்டு இந்த வழிபாட்டுத்தலம் மக்களின் வழிபாடுகளுக்கு திறக்கப்பட்டது. இது திறக்கப்பட்ட காலம் முதலே இங்கு வரும் பயணிகளின் கூட்டம் எப்பொழுதும் அதிகமாகவே இருந்து வருகிறது. சுமார் 40 லட்சம் பார்வையாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த கோயிலுக்கு வந்து செல்வதாக கணக்கெடுப்பு கூறுகிறது.

ஹவா மஹால்

ஜெய்ப்பூரில் அமைந்துள்ள இந்த ஹவா மஹால் லால் சந்த் உஸ்தா எனும் பிரபல கட்டிடக்கலை நிபுணரால் வடிவமைக்கப்பட்டது ஆகும். இதில் மிகவும் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இங்கு 950 ஜன்னல்கள் உள்ளன. இங்குள்ள சல்லடை துவார ஜன்னல்கள் வழியாக வீதிகளில் நடைபெறும் ஊர்வலங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை அங்குள்ள அரண்மனைப் பெண்கள் பார்த்து ரசிப்பதற்காக மிகவும் பாதுகாப்புடன் கட்டப்பட்டது இந்த மாளிகை.

சத்ரபதி சிவாஜி டெர்மினலஸ்

மும்பை நகரில் அமைந்துள்ள இந்த சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், இதற்கு முன்னர் விக்டோரியா டெர்மினஸ் என்றே அழைக்கப்பட்டு வந்தது. இது ஒரு ரயில் நிலையம் ஆகும். இங்கு மிக அருகில் பிரபலமான தாஜ் ஹோட்டல் இருக்கிறது.

மகாபோதி கோயில்

போத்கயா நகரில் அமைந்துள்ள மகாபோதி கோயில், புத்தர் ஞானம் பெற்ற இடமாக கருதப்படுகிறது. இந்தக் கோவிலுக்கு மேற்கில் மிகவும் புகழ் பெற்ற போதி மரம் இருக்கிறது. இந்தக் கோயில் அசோகச் சக்கரவர்த்தி அவர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. தாஜ்மகால்

ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் நாம் அனைவரும் அறிந்த ஏழு அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் முக்கிய வரலாற்றுச் சின்னம் ஆகும்.

இந்த வரலாற்றுச் சின்னம் முகலாயப் பேரரசர் ஷாஜகானால் அவரது காதல் மனைவி மும்தாஜ் கட்டப்பட்டதாகும். இது ஒரு கல்லறை. இந்த தாஜ்மஹால் கட்டி முடிப்பதற்கு சுமார் 21 ஆண்டுகள் தேவைப்படுகின்றன. இந்தப் பணியில் பல்லாயிரக்கணக்கான கலைஞர்களும் வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.

கடற்கரைக் கோயில் மகாபலிபுரம்

தமிழ்நாட்டில் மகாபலிபுரம் என்பது மிகவும் பிரபலமான ஒரு இடமாகும். இது கடற்கரை கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோயில் கிரானைட் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட இருக்கிறது. மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய கலை சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த கோவில் யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப் பட்டதாகும்.

மேலும் படிக்க – ஹோலி விழாக்கள் ஒற்றுமையின் சின்னங்கள்

ஹம்பி நினைவுச்சின்னம்

தம்பி என்பது மிகவும் தொன்மை வாய்ந்த ஒரு நகரமாக புராண காலத்தில் விளங்கி வருகிறது. ராமாயணத்தில் வரும் கிஷ்கிந்தா இந்த ஹம்பி நகரம் தான் என குறிப்பிடப்படுகிறது. இந்த ஹம்பி நகரத்தை நீங்கள் சுற்றிப்பார்க்க விரும்பினால் ஒரு சைக்கிள் உங்களுக்கு போதும். சைக்கிள் மற்றும் மோட்டார் வாகனங்கள் இங்கு உங்களுக்கு வாடகைக்கு கிடைக்கின்றன. 

இப்படி பல்வேறு வரலாற்றுச் சின்னங்களை உள்ளடக்கியதுதான் நமது இந்தியா. இன்னும் வெளிவராத பல ரகசியங்கள் மற்றும் மர்மங்கள் பல கோவில்களிலும் பல இடங்களிலும் நிறைந்து காணப்படுகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன