2020 இல் ரசிகர்களால் எதிர் பார்க்கப்படும் படம்.!

most expected tamil films in 2020

ஒவ்வொரு வருடங்களும் ஒவ்வொரு மாற்றங்கள் நம் வாழ்கவில் ஏற்பட்டாலும் பொழுதுபோக்கில் மட்டும் நாம் சினிமாக்களை அதிகமாக நாடி உள்ளோம். கடந்த வருடம் மட்டும் மொத்தம் 149 தமிழ் திரைப்படங்கள் வெளியாயின அதில் ஏராளமான படங்கள் வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. இதில் பல படங்கள் எதிர்பார்ப்புக்கும் மேலாக அற்புதமாக அமைந்தது. அதேபோல் 2020 இல் நாம் அதிகளவில் எதிர்பார்க்கும் படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

புதிய வருடம் தொடங்கி முதல் மாதத்திலேயே மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட தர்பார் மற்றும் பட்டாஸ் திரைப்படம் வெளியாகி விட்டது. நினைத்ததை விட அதிக வரவேற்ப்பை இந்த இரு படங்களும் பெற்றது. அதே போல் வசூல் துறையிலும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த வருடத்தில் மேலும் என்னென்ன படங்கள் ரசிகர்களால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது என்பதை பார்ப்போம்.

மாஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய அளவில் எதிர் பார்க்கும் படம்தான் மாஸ்டர். இது விஜய்யின் 64வது படம். இதைத் தவிர இந்த படத்தில் விஜய்சேதுபதியும் நடிக்கவிருக்கிறார் என்பது கூடுதல் பலமாகும். விஜய் எப்போதும் கமர்சியல் திரைப்படங்களுக்கு அதிகளவில் முன்னுரிமை தருவார் ஆனால் லோகேஷ் கனகராஜ் கமர்ஷியல் மற்றும் கதை என அனைத்திலும் கவனத்தை செலுத்துவதால் இந்த திரைப்படம் விஜய் ரசிகர்கள் மற்றும் மற்ற ரசிகர்கள் அனைவரின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்ய உள்ளது.

மேலும் படிக்க – விஜய் தேவர் கொண்டாவின் வாழ்க்கை முறைகள்..!

இந்தியன்-2 

1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தில் இரண்டாவது பாகம் தான் இது. இந்த படத்தை இயக்குநர் சங்கர் இயக்கி வருகிறார் அதேபோல் முதல் படத்தில் நடித்த கமல் ஹாசன் இந்த படத்தின் கதாநாயகன். அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த இந்த திரைப்படம் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக பல கருத்துக்களை முன்வைத்தது. இந்த வருடத்தின் மிகப் பெரிய படம் என்று இதையும் சொல்லலாம். அது மட்டுமல்லாமல் கமல் மற்றும் சங்கர் ரசிகர்கள் அதிகளவில் எதிர்பார்க்கப்படும் படம் இது.

சூரரைப் போற்று 

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா சிவகுமார் அவர்களின் வெறித்தனமான நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் தான் சூரரை போற்று. டெக்கான் விமான சேவையை உருவாக்கியவர் கோபிநாத்தின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவத்தைப் தழுவி எடுக்கப்பட்ட படம் இது. இதுவரை பார்த்திராத புதிய கதைக் களத்தை கொண்ட தமிழ் சினிமா என்ற பெருமையை இந்த படம் தட்டிச் செல்லும் என்று முழுமையாக நம்பலாம்.

வலிமை

அஜீத் குமாரின் அடுத்த படமான வலிமை 2020  மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் திரைப்படம். ஏனென்றால் அஜித் ரசிகர்களை ஏராளமாக வைத்துள்ளார் மற்றும் நேர்கொண்டபார்வை படத்தை இயக்கிய எச் வினோத் இவர்கள் இருவரின் கூட்டணியில் இந்த வருடம் வெளியாகும் படம் இது. நிச்சயம் இது எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும்.

சுல்தான்

கைதி படத்திற்கு பிறகு நடிகர் கார்த்திக் சிவக்குமார் படங்கள் பெரிய எதிர்பார்ப்புக்குள்ளாகி உள்ளது. இவரின் அடுத்த படம் இந்த வருடம் வெளியாக உள்ளது, இதை பாக்யராஜ் கண்ணன் இயக்கவிருக்கிறார். இந்த படத்தின் பெயர் சுல்தான்.

கோப்ரா

நடிகர் விக்ரமின் கோப்ரா திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளது. ஏன்என்றால் இந்த படத்தை இமைக்காநொடிகள் இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இவர்களின் கூட்டணியில் இந்தப் படம் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் பஞ்சம் இல்லை.

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் பொன்னியின் செல்வன். படத்தில் விக்ரம் அமிதாப் பச்சன் என முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். கடந்த பல நூற்றாண்டுகளாகவே பொன்னியின் செல்வன் நாவல் மிக பிரபலம் அடைந்துள்ளது. முதல் முறையாக திரை வடிவில் பார்க்கும் சந்தோஷம் பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கு இருக்கிறது.

மேலும் படிக்க – மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வாழ்க்கை முறை..!

டாக்டர்

பொழுதுபோக்கு நாயகன் சிவகார்த்திகேயனை வைத்து நெல்சன் டிலிப்குமர் இயக்கும் படம்தான் டாக்டர். குறைந்த சில வருடங்களில் சிவகார்த்திகேயனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவெடுத்து விட்டார்கள். இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த படம் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

கே ஜி எஃப் 2

கடந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியடைந்த தென்னிந்திய திரைப்படம் கே ஜி எஃப் என்று சொல்லலாம். இந்தப் படத்திற்கான இரண்டாம் பாகம் இந்த வருடம் வெளியாக உள்ளது என்ற செய்தி வெளியிட்டார்கள். இந்திய முழுவதும் இதற்கான ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள், இவர்கள் கேஜிஎப் இரண்டாம் பாகம் ஃபர்ஸ்ட் லுக்கை இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்வார்கள். எனவே இந்த வருடத்தின் மிகப்பெரிய படமாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன