அதிசயங்களுக்குள் அதிசயங்களான பழங்கால கோவில்கள் பாருங்க.!

most astonishing facts about temples in tamilnadu

அதிசயங்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். பூமியில் ஏராளமான அதிசயங்கள் இருக்கின்றன. நம் தமிழ்நாட்டில் உள்ள சில திருத்தலங்களில் அதிசயங்களுக்குள் அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றன. அவை என்ன என்று பார்ப்போம் வாருங்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மிக சிறப்புமிக்க கோவில் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  ஆனால் அங்கு உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளராது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். 

கங்கைகொண்ட சோழபுரம் கோவிலைப்பற்றி ஏராளமான தகவல்கள் உள்ளன. ஆனால் அந்தக் கோவிலில் உள்ள ஒரு கிணற்றுக்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம்  இருப்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. அந்த சிங்கத்தின் வாயில் ஒரு கதவு இருக்கும். அந்த கதவு வழியாக நாம் கீழே இறங்கினால் ஒரு கிணறு இருக்கும், அந்த கிணற்றில் குளிக்கலாம். மேலே இருந்து பார்ப்பவர்களுக்கு கீழே குளிப்பதை காண முடியாது.

மேலும் படிக்க – குலதெய்வம் வழிபாட்டை செய்து பலன் பெறுவது எவ்வாறு ?

அதிசயத்திலும் அதிசயம் இதுதான். மடவிளாகம் கோவிலில் ஒரு குளம் இருக்கிறது. அந்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதியுடன் தோன்றுகிறது என்பது வரலாறு.

மிக சிறப்பு மிக்க கோயில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். இங்குள்ள கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும், வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா.

சுசீந்திரத்தில் உள்ள சிவன் கோயிலைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அங்கு ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை விட்டு மறு காது வழியாக எடுக்க முடியும்.

செங்கம் எனும் ஊரிலுள்ள ரிஷபேஸ்வரர் கோயிலில் பங்குனி மாதம் 3ஆம் நாள், ஆண்டுக்கு ஒருமுறை மாலையில் சூரிய அஸ்தமனத்தின் போது நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும். அந்த சமயத்தில் நந்தியம்பெருமான் தங்க நிறத்தில் ஜொலிப்பார்.

மேலும் படிக்க – நோக்கு வர்மத்தினை ஆன்மீகத்தில் செலுத்தி ஆற்றல் பெறுவது எவ்வாறு?

தாராபுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயில் பற்றி அறிந்திருப்பீர்கள். இங்கு உள்ள படிகளை இசை படிகள் என்று அழைக்கின்றனர். ஏனென்றால் இந்த இசை படிகளை தட்டும்போது சரிகமபதநிச என்ற இசை வருகிறது.

கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை என்ற ஊரின் அருகே கோட்டையூரில் நூற்றியொரு சாமி மலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபம் ஏற்றினால் பிரகாசமாக எரியும். இளநீரில் விளக்கு எரிவது என்பது அதிசயம் தானே.

திருச்சி ஸ்ரீரங்கம் பற்றி அறியாதவர்களே இருக்க முடியாது. அங்கு ஸ்ரீ இராமானுஜரின் உடல் ஆயிரம் வருடங்களாக கெடாமல் அப்படியே இருக்கிறதாம்.

பல ஆயிரம் யானைகளைக் கொண்டு தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டது என்பது வரலாறு. ஆனால் இன்னும் சிலர் 30 அடி உயரம் உள்ள மனிதர்கள் அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் என்றும், அவர்களால் தான் இது சாத்தியமானது என்றும் கூறி வருகிறார்கள்.

மேலும் படிக்க – இறையருள் பெற இதை செய்தால் போதுமுங்க..!

இந்த கோயில் கட்டுவதற்காக அந்த காலத்திலேயே 30 அடி மனிதர்களை உருவாக்கினார்கள் என்றும், கோயில் கட்டி முடிக்கப்பட்டதும் முப்பதடி மனிதர்களை நிச்சயமாக அழித்திருப்பார்கள் என்றும்நம்பப்படுகிறது. ஏனெனில் அவர்கள் மூலம் மற்றொரு சந்ததி உருவாகி விடக்கூடாது என்பதில் அந்த காலத்து அரசர்கள் கருத்தாக இருந்ததாக நம்பப்படுகிறது. இதில் எவ்வளவு உண்மை என்பது இன்னும் புலப்படவில்லை.

திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயிலில் இரண்டு ரகசிய அறைகள் உள்ளன என்றும், அந்த அறைகளில் புதையல்கள் இருக்க கூடும் என்றும் நம்பப்படுகிறது. இந்த கோயிலில் தியாகராஜ சுவாமிகளின் கருவறைக்குள்ளும் ஆனந்தீஸ்வரர் கருவறைக்குள்ளும் இரண்டு ரகசிய அறைகள் உள்ளன என்றும், அந்த அறைகள் கல் கொண்டு மூடப்பட்டிருக்கின்றன என்றும் கூறுகின்றனர்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டின் மீது அந்நியர்கள் படையெடுத்து, நம் நாட்டில் உள்ள கோயில்களில் எல்லாம் சூறை ஆடினர் என்று வரலாறு கூறுகிறது. இதில் தியாகராஜர் கோயிலும் அடங்கும். 

இதனால் 80 ஆண்டு காலம் இந்தக்கோயில் மூடப்பட்டு பூஜை எதுவும் நடக்கவில்லை என்று கல்வெட்டுகள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

நம் நாடு மிகவும் செழுமையான நாடு மட்டுமல்ல. பல அதிசயங்களும் நிறைந்த நாடு. அக்காலத்து மன்னர்கள் செய்த ஒவ்வொரு செயலிலும் ஒரு காரணம் இருந்திருக்கிறது. இப்பேர்ப்பட்ட அதிசயங்களைப் பற்றி பேசிக் கொண்டு போனால் பேசிக்கொண்டே இருக்கலாம். மேலும் சில நல்ல தகவல்களுடன் உங்களை நான் சந்திக்கிறேன் நன்றி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன