காலை நேர உடற்பயிற்சி அல்லது மாலை நேர உடற்பயிற்சி இவை இரண்டில் எது சிறந்தது?

morning exercise vs evening exercise which is best to your body?

உடற்பயிற்சி செய்வது நம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகப்பெரிய பங்கை வகிக்கிறது. இதனால் நாம் காலை, மாலை இரண்டு முறையும் உடற்பயிற்சி செய்வது நல்லது ஆனால் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை மாற்றத்தினால் ஏதாவது ஒரு வேளை மட்டும் தான் தங்கள் உடற்பயிற்சி செய்ய முடியும். இதில் காலையில் செய்வது சிறந்ததா அல்லது மாலையில் செய்வது சிறந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

காலை நேர உடற்பயிற்சி

இரவு முழுவதும் உறங்கி விட்டு நம் உடலை மீண்டும் இயக்குவதற்கு அதிகாலையில் எழுந்து நமது கலைப்பை போக்குவதற்காக உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம் உடல் உற்சாகம் அடைந்து நம்மை நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்துக் கொள்கிறது.

மேலும் படிக்க – யாருக்கெல்லாம் சிறுநீரக புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது தெரியுமா?

காலை எழுந்தவுடன் நம்மை சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வைப்பதற்கு இந்த உடற்பயிற்சி ஒரு சிறந்த மருந்தாகும். இதை நாம் உணவு அருந்துவதற்கு முன் செய்வதினால் நம் உடம்பில் கலோரிகளை அதிகமாக எரித்து விடுகிறது. இதன் மூலம் நம் உடம்பின் ஆற்றலை நம்மால் உணர முடியும். எனவே காலை உடற்பயிற்சியினால் நமக்கு அதிக நன்மைகள் கிடைக்கின்றன.

மாலை நேர உடற்பயிற்சி

மாலை நேர உடற்பயிற்சி செய்வது என்பது எளிமையான காரியம் ஆகும் ஏனென்றால் நாம் காலை முதல் மாலை வரை மற்ற வேலைகளில் கவனம் செலுத்தி இருப்பதினால் அதன் தொடர்ச்சியாகவே நம் அந்த உடற்பயிற்சி செய்வதன் மூலம் நமக்கு சிரமங்கள் ஏதும் அதிகமாக இருக்காது. ஆனால் சில சமயங்களில் உடல்ரீதியாக வேலை செய்பவர்களுக்கு இது சவாலான விஷயமாக இருக்கும் ஏனென்றால் ஏற்கனவே அவர்கள் சோர்வாக இருப்பார்கள் அவர்களை மீண்டும் உடற்பயிற்சிக்கு செய்வது சற்றுக் கடினமான விஷயமாகும்.

மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதன் மூலமாக உங்கள் தசைகள் மற்றும் மூட்டுகளில் குறைவாகவே சிரமப்படுகிறது. இதைத் தவிர்த்து இந்த சமயங்களில் நீங்கள் உடற்பயிற்சி செய்த பிறகு உங்களுக்கு மன அழுத்தம் விடுவித்து ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கிறது.

மேலும் படிக்க – விரைவில் கர்ப்பமாக விரும்பும் பெண்கள் இந்த உடற்பயிற்சியை கண்டிப்பாக செய்யணுமாம்…!

இரண்டு உடற்பயிற்சிகளும் இரண்டு சூழல்களுக்கு ஏற்றால்போல் சிறந்ததாக விளங்குகிறது. இதில் காலையில் செய்யும் உடற்பயிற்சிக்காக நாம் அதிகாலையில் எழுந்து இருப்பது என்பது மிகக் கடினமாக இருக்கிறது. இதை எளிதாக செய்யக்கூடியவர்களுக்கு இது ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். அதுவே மாலை நேரங்களில் சோர்வாக இருப்பவர்களுக்கும் மாலை நேர உடற்பயிற்சி கடினமாக இருக்கும் இதை சவாலாக எடுத்துக் கொள்பவர்களுக்கு மாலை நேர உடற்பயிற்சி சரியான ஒன்றாகும். எனவே உங்களுக்கு சிறந்த உடற்பயிற்சி நேரத்தை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொண்டு உடலை வலிமைப்படுத்தும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன