கோவிட் 19: அழிப்பதற்கு ஏராளமான முதலீடுகள் தேவை..!

  • by
more investment required to fight corona virus

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதைக் கட்டுப்படுத்தும் எண்ணத்தில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இருந்தாலும் இதற்கு முன்பு வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்க்கு பயணம் செய்தவர்கள் மூலமாகவும் மற்றும் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலத்தவர்கள் வெளிநாட்டவர்களிடம் தொடர்பு வைத்து, மீண்டும் அவரவர் சொந்த நகரங்களுக்கு சென்றதால், இந்த வைரஸ் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இருந்தாலும் இது இன்று வரை சமூக தொற்றாக மாறவில்லை. இது மிகப்பெரிய அளவில் உருவானால், அதை தடுப்பதற்கு இந்திய அரசாங்கத்திடம் போதுமான அளவு பணம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தேவைப்படும்.

முதலீட்டின் அவசியம்

மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவில் இது போன்று நோய்த்தொற்று சமூக தொற்றாக மாறிமாள் நாம் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும். இதைத் தடுப்பதற்கு வைரஸை எதிர்த்துப் போராடும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நாம் அதிகளவில் உற்பத்தி செய்ய வேண்டும். இதற்கு நமக்கு போதுமான அளவு முதலீடு தேவைப்படுகிறது.

மேலும் படிக்க – லாக் டவுனின் போது பிரிட்ஜில் என்னென்ன வைத்துக் கொள்ளலாம்..!

பாரதப் பிரதமர் நிவாரண நிதி

கொரோனா வைரஸுக்கு எதிராக போராடுவதற்காக பாரதப் பிரதமர் தங்கள் நாட்டில் உள்ள மக்களிடம் உதவும்படி கேட்டு இருந்தார். இதை மதித்து இந்தியாவில் உள்ள ஏராளமான தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சியினர் மற்றும் கார்ப்பரேட் தொழிலாளர்கள் என எல்லோரும் தங்களால் முடிந்த உதவிகளை அள்ளிக் கொடுத்தார்கள். இதன்மூலமாக கிட்டத்தட்ட மூன்றே வாரங்களில் 6 ஆயிரத்து 500 கோடிக்கு மேல் நிவாரணம் கிடைத்தது. இதில் டாட்டா குழுமம் மற்றும் விப்ரோ குழுமம் ஏராளமான தொகைகளை இந்திய வளர்ச்சிக்கு அளித்துள்ளது. இதை தவிர்த்து ஏராளமானோர் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கவசங்களை  அளித்தார்கள்.

தமிழ்நாட்டின் நிவாரண நிதி

ஏராளமான பிரபலங்கள் நிவாரண நிதியை இருவகையாகப் பிரித்து அளித்தார்கள். அதில் முதல் பகுதி மத்திய அரசுக்கும், இரண்டாம் பகுதி மாநில அரசிற்கும் என நிதியை வழங்கி வந்தார்கள். இதன் அடிப்படையில் தமிழகத்தில் தொழில் நடத்துபவர்கள் தமிழக அரசுக்கு ஏராளமான நிதியை வழங்கினார்கள். அதில் அதிக நிதி அளித்து தமிழகத்திற்கு உதவியவர்கள் சக்தி மசாலா குழுமம், ஏசியன் பெயிண்ட்ஸ், சிம்சன் மற்றும் சண்முக நிறுவனங்கள். இதை தவிர்த்து அரசியல் கட்சியினர், சமூக அக்கறை உள்ளவர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் என ஏராளமானோர் தங்களால் முடிந்தவரை நிதிகளை கொடுத்து உதவினார். இதன் மூலமாக தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 36 ஆயிரம் கோடி கிடைத்தது.

முதலீடு செய்வார்கள்

இந்த நிவாரணத் தொகையை இந்திய அரசாங்கம் சரியாக பயன்படுத்துகிறார்கள். இதன் மூலமாக மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை தயார் செய்து வருகிறார்கள். இதைத் தவிர்த்து மருத்துவ ஊழியர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் சுகாதார துறையில் வேலை செய்பவர்கள் என அனைவருக்கும் ஆயுள் காப்பீட்டு திட்டங்களை அலித்து உள்ளார்கள். கொரோனா வைரஸினால் இவர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் காப்பீட்டு திட்டத்தில் கிடைக்கக்கூடிய தொகை இவர்கள் குடும்பத்திற்கு அளிக்கப்படும். இதைத் தவிர்த்து மருந்துகள் மற்றும் மிக முக்கியமான உபகரணமாக கருதப்படும் வெண்டிலேஷன்கள் போன்ற அனைத்தையும் நாம் வெளிநாடுகளில் இருந்து வாங்கி வருகிறோம்.

மேலும் படிக்க – மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகா பயிற்சி..!

பொருளாதார சமநிலை

பொருளாதார மிகப்பெரிய அளவில் இழுந்துள்ள நிலையில் மக்கள் அளிக்கப்பட்ட இதுபோன்ற நிவாரண நிதியின் மூலமாக நம்முடைய நாடு ஒரு நிலையாக சென்றுகொண்டிருக்கிறது. இதைத் தவிர்த்து கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்பட்ட சோதனைகளை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இந்த நிதி உதவியது. இதைக் கருத்தில் கொண்டு நம் நாட்டிற்கு செய்யப்படும் உற்பத்தியின் எண்ணிக்கையை அதிகரித்து அதை மற்ற நாடுகளுக்கும் வியாபாரம் செய்யலாம். இதன் மூலமாக நம்முடைய பொருளாதாரம் ஓரளவுக்கு பாதிப்பில் இருந்து தப்பிக்கும்.

சீனா போன்ற நாடுகள் இன்று கொரோனா வைரஸை ஒரு வியாபாரமாக மாற்றி உள்ளது. இந்த வைரஸை தடுப்பதற்கான மருந்துகள் மற்றும் அதற்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் என அனைத்தையும் வியாபாரம் செய்து வருகிறார்கள். இதுப்போல் சுயநலமாக சிந்திக்காமல் நம் நாட்டில் உற்பத்தியை அதிகரித்து, குறைந்த விலையில், மக்களுக்கு உதவும் வகையில் நாம் செயல்பட்டால் தான் நம் நாட்டின் மேல் நம்பிக்கைத் தன்மை அதிகரிக்கும். இதன் மூலமாக வெளிநாடுகளில் இருக்கும் முதலீட்டாளர்கள் நம் நாட்டை நம்பி ஏராளமான முதலீடு செய்வார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன