சேமிப்பை பின்பற்றி செழிப்புடன் வாழ்வோம்

  • by

 மாதம் முழுவதும் மாடாய் உழைப்போம் ஆனால் மறந்து போனதில்லை. இந்திய தேசத்தின் இணையற்ற தேடல்கள் எது   என்றால் வாழ்க்கையில் நிலைத்த வாழ்வை கொண்டு வாழுதல் ஆகும். ஆனால் இன்றைய சூழலில் நம்மை தூண்டும் ஆசைகளில் மூழ்கி கிடக்கின்றோம். 

எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் மயமாக உள்ளது. கையில்  பத்து பைசா இல்லை என்றாலும் உடனடியாக நாம் பத்தாயிரம் வரை செலவு செய்ய முடியும் எல்லாம் கூகுள் பே, பேட்டியம், போன் பே,  பேபால் இது போன்ற வசதிகள் எல்லாம் நமது சம்பாத்தியத்தை சர்வசாதரணமாக மாயமாக்குகின்றது. 

வாழ்வில் நீங்கக் எந்த தேவையை வேண்டுமானாலும் நாம் பெற்றுக் கொள்ளலாம்.  பணத்தை லாவகமாக கையாள தெரிவது அவசியம் ஆகும். 

சேமிப்பு

பணத்தை  சரியாக கையாளத் தெரிந்தவரா நீங்கள் உங்களுக்கு சிக்கல் இல்லை.  ஆனால் அப்படி வந்து இப்படி பணத்தை போக்கடிக்கும் பேர்வழியா நீங்கள் முதலில் உங்களுக்குத்தான் இந்த பதிவு அவசியம் ஆகும். 

மேலும் படிக்க: தமிழக அரசு பட்ஜெட் வெளியிட்ட பின் நாம் எப்படி செயல்பட வேண்டும்?

சேமிப்பு: 

பணத்தை சேமித்தல் என்பது  மிகவும் முக்கியம் ஆகும். இந்திய மக்களின் ஆதாரமே பண சேமிப்பு ஆகும். பணத்தை சேமிக்க நாம் செய்ய  வேண்டியது என்னவெனில் அஞ்சலகத்தில் கணக்கு தொடர்தல் மற்றும் இன்சூரன்ஸ் போன்றவற்றில் உங்கள் வருமானத்தில் ஒரு தொகையை சேமித்து வையுங்கள் அது உங்களை லாவகமாக வழி நடத்தும்  தன்மை கொண்டதாக இருக்கும். 

சேமிப்பு என்பது வாழ்வில் அவசியமானதாகும். சிறிய உண்டியல் வாங்கி தினமும் ஒரு தொகையை அதில் இட்டு வையுங்கள் பணம் இட்டதும் அதனை  மறைத்து வையுங்கள் நிச்சயம் உங்களுக்கு ஒரு நாளைக்கு உதவியாக இருக்கும். 

தங்கம் போன்ற பொருட்களை வாங்கி சேமிக்கலாம்.  வங்கியில் பெண் பிள்ளைகளுக்கு என புதிய திட்டங்கள் உள்ளன அவற்றில் பதிவு செய்து உங்கள் தொகையை சேமிக்கவும். 

சேமிப்பு

தேவையற்ற செலவுகள்: 

தேவையற்ற செலவுகளை நாம் குறைக்க வேண்டியது என்பது அவசியம் ஆகும். செலவுகளை எப்பொழுதும் பட்டியலிட்டு வையுங்கள். புதிதாக செலவு வந்தால் என்ன செய்வது என்பதை ஆலோசித்து சேமியுங்கள், மியூட்ச்சுவல் பண்ட் மற்றும் பங்கு சந்தை போன்றவற்றினை அறிந்து தெரிந்தால் அவற்றில் முதலீடு செய்யலாம். 

அஞ்சல்  அலுவலக சேமிப்பு முறை: 

அஞ்சல் அலுவலகத்தில் மட்டும் நீங்கள்  சேமிக்க 9 திட்டங்கள் உள்ளன. இந்தியாவின்  முக்கிய அங்கமான அஞ்சலகத்துறை மக்கள் சேமிப்பை துவங்க அவர்களை ஊக்குவித்து மொத்தம் 9 வகையான திட்டங்களை  கொண்டுள்ளது. 

மேலும் படிக்க: வீட்டு நிர்வாக பட்ஜெட் பட்டியல் அவசியமானது

அஞ்சலத்தில் சிறு சேமிப்பு செய்ய பிபிஎப்  மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டங்கள் மற்றும் சுகன்யா சம்ரிதி யோஜ்னா என்று அழைக்கப்படும்   பெண் பிள்ளைகளுக்கான செல்வ மகள் திட்டம ஆகிய திட்டங்கள் எல்லாம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளன. இவற்றில் வட்டிவிகிதமானது 3 மாதங்களுக்கு ஒரு முறை அப்டேட்டு செய்து  அறிவிக்கப்படுவதால் இத்தகைய திட்டங்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. வயதானவர்களுக்கான தனிக்கணக்குகள் மற்றும் 5 வருடம் சேமிப்பு திட்டங்கள் விவசாயிகளுக்கு உதவும் வகையிலான திட்டங்கள் எல்லாம் அனைவருக்கும்  உதவிகரமாக உள்ளது.   

இந்தியாவை பொறுத்தவரை சேமிப்புகள்தான்  நமது ஆதாரமாக இருந்தது ஆனால் அடிப்படை திட்டமிடல் குறைவால் உடனடியாக வாங்கும் ஆசையால் நாம் நமக்கே  ஆப்பு வைக்க கிரெடிட் கார்டு , இஎம்ஐ கலாச்சாரங்களில் கரைந்துபோய் நிற்கின்றோம். 

சேமிப்பு

காப்பிடுகள்: 

இந்தியாவில் சேமிக்க சேமிப்பு கணக்குகள்,  முதலீடுகள் செய்வதோடு, காப்பீடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன.  வாகனங்களுக்கான காப்பிடு மற்றும் பயணங்களுக்கான காப்பிடுகள் மருத்துவம் சார்ந்த காப்பீடுகள், மூதலீட்டு திட்டங்கள், கார் காப்பீடுகள், பாதுகாப்பு காப்பீடு திட்டங்கள், ஆயுள் காப்பீடு ஓய்வூதிய திட்டங்கள் ஆகியவை எல்லாம் அந்த வரைமுறைகளோடு உள்ளன. அவற்றை  நன்கு படித்து பார்த்து காப்பீடு செய்து வாழ்வை வளமாக்க முயற்சி செய்யுங்கள். 

மேலும் படிக்க: மாதக் கடைசி வீட்டுக்கு புது பட்ஜெட் ரெடி பண்ணியாச்சா

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன