எம்.ஜி.ஆர் நடிக்கும் பொன்னியின் செலவன் ..!

MGR to act in ponniyin selvan movie

எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் இறந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இச்சமயத்தில் இவர் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஒன்று விரைவில் வெளியாக உள்ளது. இவருக்கு ஜோடியாக மறைந்த முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்கள் நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்தின் பெயர் “வந்தியதேவன்” அதாவது கல்கி எழுதிய பொன்னியின் செல்வனின் இருக்கும் கதாபாத்திரத்தை கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இறந்த இருவரும் எப்படி இந்த படத்தில் நடிக்கப் போகிறார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு எழுந்திருக்கும். ஆம் இந்த படத்தில் இவர்கள் தான் நடிக்க இருக்கிறார்கள். ஆனால் இது ஒரு முழு நீள முப்பரிமாண அனிமேஷன் திரைப்படமாகும்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்தினம் பிரம்மாண்ட முறையில் இயக்கி வருகிறார். ஆனால் இந்த திரைப்படத்தை முதன்முதலில் எடுக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தவர் எம்ஜிஆர். இதனால் எம்ஜிஆர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்ற போஸ்டரை எல்லாம் வெளியிட்டார்கள் ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தப் படம் கைவிடப்பட்டது. அவரின் கனவை நனவாக்கும் வகையில் இந்த படத்தை இயக்கி உள்ளார் துருவ செல்வன். இந்த படத்திலிருந்து ஒரு பாடலை எம்ஜிஆர் பிறந்த நாளன்று வெளியிட்டார்கள். அக்காலத்தில் எம்ஜிஆர் பாடல்கள் எந்தவகையான பாடல்வரிகளை கொண்டிருக்குமோ அதேபோல் மதன் கார்க்கி அவர்களும் இந்த பாடலுக்கு புரட்சிகரமான வரிகளை எழுதியுள்ளார்.

மேலும் படிக்க – விக்னேஷ் சிவனின் வாழ்க்கை தொடக்கம்..!

“உலகம் என் உலகம்” என்ற பாடலுக்கு இசை அமைத்தவர் ரமேஷ் தமிழ்மணி. இந்த பாடலை பாடியவர் சந்தோஷ் ஜெயகரன். இந்தப் பாடலை இதுவரை பார்க்காதவர்கள் யூடியூப் சென்று இந்த பாடலை பார்க்கலாம்.

கிட்டத்தட்ட இந்த திரைப்படத்தை கடந்த 4 ஆண்டுகளாக தயாரித்து வருகிறார்கள். ஒருவழியாக நிறைவடைந்த இந்த படத்தில் இருந்து உலகம் என் உலகம் என்ற பாடலை மட்டும் வெளியிட்டுள்ளார்கள். எம்ஜிஆருக்கு அன்று முதல் இன்று வரை ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் நம்பிக்கையுடன் வெளியிட்ட இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் அனிமேஷன் படம் என்றால் அதன் தரம் எப்போதும் குறைவாகவே இருக்கும்.

ஹாலிவுட்டுக்கு இணையாக அனிமேஷன் படம் எடுப்பது என்பது இயலாத காரியம். ஆனால் ஹாலிவுட்டு பணத்திற்கு இந்தியாவில் இருப்பவர்கள் தான் அனிமேஷன் செய்து தருகிறார்கள். இப்படியிருக்கையில் நாம் ஒரு தரமான அனிமேஷன் படத்தை இதுவரை பார்த்ததில்லை. கடைசியாக ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படம் அனிமேஷன் வடிவில் வெளியாகின. படம் வெற்றி அடைந்தாலும் அதன் அனிமேஷன் வேலைகள் ஹாலிவுட் தரத்திற்கு இல்லை என்றே சொல்லலாம். ஆனால் பொன்னியின் செல்வன் முதல் பகுதியின் வந்தியதேவன் திரைப்படத்தின் அனிமேஷன் எதிர்பார்ப்பதை விட தரமாக இருக்கும் என்று இந்த பாடலை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வரலாம். எதுவாக இருந்தாலும் முழு படத்தை பார்த்த பிறகு தான் இந்த அனிமேஷன் வேலைகள் உலகத்தரத்திற்கு இணையாக இருக்கிறதா என்பது தெரியும். 

மேலும் படிக்க – “கொலவெறி” அனிருத் ரவிச்சந்திரனின் வாழ்க்கை.!

அதேபோல் நாம் மீண்டும் காண முடியாது என்று நினைத்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கூட்டணியில் இந்தப் படம் வெளியாக இருப்பதினால் அனிமேஷன் எப்படி இருந்தாலும் பரவாயில்லை இந்த படத்தை பலமுறை பார்க்க நான் தயார் என்று இவர்கள் ரசிகர்கள் இன்றும் படம் வெளிவருவதற்கு காத்திருக்கிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன