வராஹி வழிபாடு பற்றி தெரிந்து கொள்வோம்..!

methods of varahi valipaadu

ஆன்மீகத்தில் மிக முக்கியமான வழிபாடு என்று அழைக்கப்படுவதை இந்த வாராஹி அம்மன் வழிபாடு. நம் வாழ்க்கை தொடங்கி முடிவதற்கு இடையில் நம் வாழப்படும் வாழ்க்கை அனைத்தும் இந்த வாராஹி வழிபாடு மூலம் செழிப்புடன் வைத்துக்கொள்ள முடியும்.

நமக்கு எப்போதெல்லாம் துன்பம் அல்லது நம்முடைய வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு சென்று போக முடியாத சூழல் ஏற்படும்போது நாம் இந்த வாராஹி வழிபாடு செய்வதன் மூலமாக அம்மன் நம்முடைய வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவுவாள்.

வராகி அம்மனுக்கு எதிர்நோக்க சக்தி அதிகமாக இருக்கும். எனவே எல்லாவற்றையும் முன்னோக்கிப் பார்த்து நமது கஷ்டங்களை போக்குவார். அதுமட்டுமல்லாமல் இவர் சொல்லும் அனைத்து சொற்களில் சக்திகள் மிக அதிகம். எனவே இவர் ஒரு வாக்கை நமக்கு அளித்து விட்டார் என்றால் அது நிச்சயம் நடந்துவிடும். எனவே இவரின் வார்த்தையை ஆழ்ந்த வழிபாடு மூலமாக நாம் பெற முடியும்.

மேலும் படிக்க – சிவலிங்கத்தில் இருக்கும் வகைகள்..!

வாராஹி அம்பாள் வழிபாடு உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய முன்னேற்றத்தை தரும். இந்த வாராகி வழிபாடு பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும் அதிகாலையில் செய்ய வேண்டும்.

ஒரு சிலர் வாராஹி என்பது ஏவல் தெய்வம் என்பார்கள், இதனால் நமக்கு தீமைகளே அதிகமாக ஏற்படும். ஆனால், அது அந்த அளவிற்கு உண்மை இல்லை நாம் நேர்மறை எண்ணங்களுடன் வாராஹியை வழிபடுவதன் மூலம் நமக்கு நேர்மறையான சக்திகள் கிடைக்கும். அதே போல் நம் வாழ்க்கையும் நேர்மறை சிந்தனை உள்ளதாக இருக்கும். வாராகி அம்மன் வழிபாடு ஏவல், பில்லி, சூனியம் என கெட்ட சக்திகளை அழிக்கக் கூடியது.

வராஹி அம்மன் வழிபாட்டை நம் வீட்டிலேயே செய்ய முடியும். இதற்காக நிரந்தரமாக ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள் அது உங்கள் பூஜை அறையாக இருந்தாலும் சரி. இந்த வழிபாட்டை நாம் எந்த இடத்தில் முதலில் செய்கிறோமோ, அதே இடத்தில்தான் மற்ற எல்லா நாட்களிலும் செய்ய வேண்டும். வழிபாட்டில் அன்னையின் படம் மற்றும் விளக்கில் ஜோதி ஏற்றி வைத்து இருக்க வேண்டும். அதே போல் நாம் வடக்கு அல்லது மேற்க்கை நோக்கி அமர வேண்டும்.

வழிபாட்டிற்கு முன்பு நம் குளிக்க வேண்டும். இதில் துளசி மற்றும் வில்வ இலைகளை ஒரு கைப்பிடி அளவு போட்டு குளிப்பது நல்லது. வாராஹி வழிபாட்டிற்கு தனி பூஜை அறை இருந்தால் சேமமாக இருக்கும். அதே போல் அன்னையின் படத்திற்கு அருகில் விநாயகர் படத்தை வைப்பது நல்லது. வடக்கு மற்றும் கிழக்கு திசையை நோக்கி இப்படம் இருக்க வேண்டும்.

பூஜையறையில் பன்னீரில் மஞ்சளை மற்றும் ஏலக்காயை கலந்த நீரை வைக்க வேண்டும். இதை வீடு முழுவதும் தெளிப்பது நல்லது.

மேலும் படிக்க – மகத்துவம் நிறைந்த சிவராத்திரி கொண்டாட்டங்கள்

வாராகி பூஜைக்கு நெய்வேதியம், பூக்கள் என பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வைக்க வேண்டும். முதலில் குருவை வணங்க வேண்டும், பிறகு விநாயகரை தரிசித்து வாராஹி நமஹ என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். பூஜை தொடங்கிய பிறகு இடையில் எழுக்கூடாது. அதேபோல் வெளியூர் எங்கேயாவது சென்று விட்டால் அங்கே அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது. மலர்களைக் கொண்டு பூஜை செய்து முடித்தவுடன் அம்மனுக்கு நைவேத்தியம் அளித்து சாஷ்டாங்கமாக கீழே படுத்து வணங்க வேண்டும். பிறகு நைவேத்தியத்தை அனைவருக்கும் பகிரவும்.

பஞ்சமி, அமாவாசை போன்ற நாட்களில் நீங்கள் குறைந்தது ஐந்து பேருக்கு அன்னதானம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். எனவே உங்கள் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வழியை இந்த வாராஹி அம்மன் வழிபாடு மூலம் பெறலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன