சர்க்கரை நோயுள்ள ஆண்களின் தாம்பத்திய உறவு எப்படி இருக்கும்?

men with diabetes, what can you do to protect your sexual life

சக்கரை நோய் என்பது இன்றைய காலகட்டங்களில் அதிகமாக காணப்படுகிறது. சாதாரணமாக ஒரு ஆண் அல்லது பெண் 30 வயதைக் கடந்தவுடன் சர்க்கரை வியாதி தோன்றுகிறது. இதற்கு காரணம் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள்தான். எப்போது ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ சக்கரை வியாதி ஏற்பட்டு விட்டதோ அப்போதிலிருந்து அவரது இயல்பு வாழ்க்கை அதிகமாக பாதிப்படைகிறது. இவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் இருந்து தாங்கள் செயல்முறை அனைத்தும் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். இதை தவிர்த்து இதனால் இவர்களின் தாம்பத்திய வாழ்க்கையும் அதிகமாக பாதிக்கப்படும். இப்படிப்பட்ட ஆண்கள் எந்த சமயங்களில் எப்படி தாம்பத்திய உறவுகள் வைப்பது என்பதை பார்ப்போம்.

எப்போதெல்லாம் உடலுறவு வைத்த போகிறீர்களோ அப்போது உடலுறவுக்கு முன் உங்களின் சர்க்கரை அளவை பரிசோதிப்பது நல்லது ஏனென்றால் உடலுறவு மேற்கண்டவுடன் இயற்கையாகவே உங்கள் உடம்பில் இருக்கும் சர்க்கரை அளவை குறைத்துவிடும். இதனால் நீங்கள் மயக்க நிலைக்கு செல்வதற்கும் வாய்ப்புள்ளது. இதற்காகவே உங்களை சர்க்கரை அளவை பரிசோதித்து அதற்கேற்ப உடலுறவு வைத்துக் கொள்ளுங்கள். பிறகு உடலுறவுக்கு முன் அல்லது பின் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது நல்லது.

மேலும் படிக்க – யாருக்கெல்லாம் சிறுநீரக புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது தெரியுமா?

மது அருந்திவிட்டு உடலுறவு கொள்வதை தவிர்க்க வேண்டும் ஏனென்றால் மது அருந்துவதன் மூலம் உங்களின் சக்கரை அளவு குறைந்திருக்கும். அதைத் தொடர்ந்து நீங்கள் உடல் உறவு மேற்கொண்டால் மேலும் சர்க்கரை அளவு குறைந்து உங்கள் உங்களை சுயநினைவற்றவர்களாக மாற்றிவிடும் எனவே இதை இரண்டையும் ஒன்றாக சேர்க்காமல் தனித்தனியாக அனுபவியுங்கள்.

சில சமயங்களில் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நரம்பு பிரச்சனைகள் ஏற்படும் இதனால் உங்களின் ஆணுறுப்புகளில் உணர்வின்மை ஏற்படலாம் அதனால் எப்போதும் ஆரோக்கியமாக இருங்கள். உடல் உறவில் சரியாக ஈடுபட முடியவில்லை என்றால் உடனே உடற்பயிற்சி செய்யத் தொடங்குங்கள் தினமும் உடற்பயிற்சி குறிப்பிட்ட நேரங்களில் நீங்கள் செய்யும் போது உங்கள் உடல் உறவு உணர்வை இது தூண்டுவது மட்டுமல்லாமல் அதன் ஆழத்தையும் அதிகரிக்கிறது. இதனால் உங்களால் நிலையான உடலுறவு மேற்கொள்ள முடியும்.

மேலும் படிக்க – விரைவில் கர்ப்பமாக விரும்பும் பெண்கள் இந்த உடற்பயிற்சியை கண்டிப்பாக செய்யணுமாம்…!

உடலுறவு கொள்வது கடினமாக இருந்தாலும் முடிந்தவரை அதற்கான முயற்சிகளை எடுங்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் ரத்த அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள் இல்லையெனில் உங்கள் மருத்துவரை அணுகி இதற்காக என்ன தீர்வு என்பதை கேட்டு அறிவது நல்லது. ரத்த நோய் இல்லாதவர்கள் இதுபோன்ற அபாயங்களிலிருந்து சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு இப்போதிலிருந்து உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி கட்டுப்பாடாக இருங்கள்.

1 thought on “சர்க்கரை நோயுள்ள ஆண்களின் தாம்பத்திய உறவு எப்படி இருக்கும்?”

  1. Pingback: சந்தேகப்படும் மனைவியை சமாளிக்கும் சுலபமான வழிகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன