பெண்களிடம் பழகும் ஆண்கள் கவனத்திற்கு..!

men should have this awareness before getting committed

ஏகப்பட்ட புதிர்கள் நிறைந்திருக்கும் உறவு தான் ஆண் பெண் உறவு. பொதுவாக ஒரு ஆண் மற்றும் பெண் இருவரும் நட்பாக இருந்தால் அவர்களின் நட்புக்குள் ஏதோ ஒரு மூளையில் காதல் இருக்கும். இதை பெண் உணராவிட்டாலும் ஆண் பல சமயங்களில் உணர்ந்து அந்தப் பெண்ணை மறைமுகமாக காதலிக்க தொடங்குவான். ஆனால் தங்களின் நட்பு பாதிப்படையாமல் இருப்பதற்காக அந்த காதலை வெளிக்காட்டாமல் அதற்கான தருணத்திற்காக காத்திருப்பான். அதுவே ஒரு பெண் தன் ஆண் நண்பனை எப்போதும் நண்பனாகவே பார்க்கிறாள். அவரை பார்த்த முதல் கணத்தில் காதல் ஏற்பட்டால் உண்டு, இல்லை எனில் பெண் மனதில் இறுதிவரை அவரை நண்பனாகவே பார்த்து காதலுக்கு நட்புக்கும் இடையே சில கட்டுப்பாடுகளை விதிக்கிறாள். இதனால்தான் ஆண்-பெண் உறவில் எப்பொழுதும் கருத்து வேறுபாடுகளினால் பல சிக்கல் உண்டாகிறது.

ஆண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை

ஒரு ஆண் முதல் முதலில் ஒரு பெண்ணை பார்க்கிறான் என்றால் அந்தப் பார்வையில் மறைமுகமான காமம் இருக்கத்தான் செய்கிறது. அவளின் உடை, முக அழகு, சருமத்தின் நிறம், மார்பகம், இடுப்பு, கால்கள் என எல்லாவற்றையும் அந்தப் பெண்ணுக்கு தெரியாத சமயங்களில் பார்த்து ரசிக்கிறான். இயற்கையாகவே எல்லா விலங்குகளுக்கும் இது போன்ற உணர்வுகள் இருக்கும். மற்ற பாலினத்தில் ஈர்ப்புகள் ஏற்பட்டால்தான் இனப்பெருக்கம் ஏற்படும். இதனால் தான் இந்த உணர்வு எல்லா விலங்குகளுக்கும் இருக்கின்றன. அதில் மனிதர்களுக்கு ஆறாம் அறிவு இருப்பதினால் இந்த உணர்வை தவறுதலாக புரிந்து கொண்டு எல்லைமீறி நடந்து கொள்கிறார்கள். எனவே ஆண்கள் பெண்களுடன் பழகுவதற்குமுன் நம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய சில கட்டுப்பாடுகளை இங்கு காணலாம்.

மேலும் படிக்க – கணவன்மனைவி நடுவில் காட்டாற்று வெள்ளமாக டிக்டாக்

பெண்களிடம் பழகும் போது நாம் எல்லாவற்றையும் புதிதாக உணருவோம், இதனால் அது காதல் என்று எண்ணக்கூடாது. பொதுவாக புதிதாக ஆண் நண்பரோ அல்லது பெண் நண்பர்கள் உங்களுக்கு கிடைத்தால் இதே உணர்வைதான் நீங்கள் உணர்வீர்கள். ஆனால் பெண் என்று வந்தவுடன் அந்த உணர்விற்கு அதிகமான முக்கியத்துவத்தை தந்து அது காதல் என்று நீங்களே நினைத்து கொள்கிறீர்கள். ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது நட்பின் அடையாளம் ஆனால் ஒரு பெண் உங்களுக்கு செய்யப்படும் ஒரு சிறு உதவியை காதலினால் தான் செய்கிறாள் என்ற தவறான எண்ணத்தை கொள்வதை தவிர்க்க வேண்டும்.

உங்களை ஒரு பெண் பார்க்கிறாள் என்றால், அது தற்செயலான பார்வையாக கூட இருக்கலாம். இல்லையெனில் உங்கள் அழகை ரசிப்பதற்காக கூட பார்த்திருக்கலாம். ஆனால் அதற்கும் காதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே சில ஆண்கள், பெண்கள் தங்களை பார்த்தாலே அது காதல் உணர்வுதான் என்று தவறுதலாக புரிந்து கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் பார்ப்பது இயல்பானது அதிலும் ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் பார்ப்பது மனித இயல்பு இதை அறிந்து மிக சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். பார்வை ஒன்றை மட்டுமே வைத்து ஒரு சிலர் காதல் கோட்டைகளை கட்டி வருகிறார்கள் அந்த கோட்டையை தகர்த்து வார்த்தையின் மூலமாக காதலை பரிமாறுங்கள்.

பெண்களின் கவனத்திற்கு

ஒருசில ஆண்கள் பெண்களின் உடல் ஈர்ப்பினால் காதல் கொள்கிறார்கள். இதை அவர்கள் நன்கு அறிந்து எதனால் காதல் உருவானது.? எதுவரை செல்லும்.? இப்போது இருப்பதுபோல் எப்போதும் இந்த காதல் நீடிக்குமா.? அவர்களின் குணம் என்ன.? உங்களை எந்த இடத்தில் வைத்துள்ளார்.? எப்படிப் பார்க்கிறாள்.? என்ற எல்லாவற்றையும் அறிந்து அந்த பெண்ணிடம் உங்கள் காதலை தெரியப்படுத்துங்கள். அவருக்கும் இது போன்ற உணர்வு இருந்தால் உங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது நல்லது. இல்லை எனில் அதை அங்கேயே குழி தோண்டி புதைத்து விடுங்கள், ஏனெனில் இது பெண்களுக்கு எதிராக குற்றங்களை தூண்டிவிடும்.

மேலும் படிக்க – காதல் கைகூட இந்த தாந்தீரிகம் செய்யுங்க..!

ஒரு பெண் உங்களை காதலிப்பதாக சொல்லி விட்டால் அதற்கு அர்த்தம் காதல் தான் தவிர காமம் அல்ல. ஒரு சில ஆண்கள் ஒரு பெண் தங்கள் காதலை சொல்லிவிட்டால் மறுகணமே தங்கள் காதலை வெளிப்படுத்துகிறேன் என்று பெண்களை ஏமாற்றி முத்தங்களை பரிமாறுவதும், உடலை உரசுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இதுபோன்று நடந்து கொண்டால் அந்தப் பெண் உங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்து விடுவாள். இதனால் உங்களுக்குள் பிரிவு மிக விரைவில் ஏற்படும்.

பெண்களை அறிவது கடினமானது

ஆண்-பெண் உறவு அற்புதமானது எனவே ஒவ்வொரு உணர்வையும் மதித்து அதற்கான நேரம் வரும் வரை காத்திருப்பது நல்லது. நீங்கள் வலுக்கட்டாயமாக உங்கள் மனதில் தோன்றுவதை உங்கள் காதலியின் மேல் திணித்தாள் உண்மையில் அது காதல் அல்ல, அதுவும் பாலியல் வன்கொடுமைதான். எனவே உங்களின் சுயமரியாதையை காப்பதற்காக ஒரு பெண்ணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள். இதுதான் நீங்கள் ஒரு குடும்பத்தை வழிநடத்த சிறந்தவரா என்பதை அறிய வைக்கும். இதை பொறுத்து தான் ஒரு பெண் உங்களை திருமணத்திற்கு தேர்ந்தெடுப்பார்.

மேலும் படிக்க – கணவன் மனைவிக்கான காதல் பரிமாற்றம் இப்படி இருக்க வேண்டும்.!

சினிமாவில் வருவதைப் போல் அல்லது நண்பர்கள் தங்களுக்கு நடந்தவையை சொல்வதைக் கேட்டு நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அது போன்ற செயல்களை செய்ய முயற்சித்தால் நிச்சயம் உங்கள் உறவு சிதைந்து விடும். எனவே தரமான ஆண் என்ற எண்ணத்தை உங்கள் காதலிக்கு அளியுங்கள், எப்போதும் எந்த சூழ்நிலையிலும் முழு காதலை வெளியிடுங்கள், காம உணர்வுகள் ஏற்படும் பொழுது உங்கள் காதலிக்கும் அந்த உணர்வில் ஈடுபாடு இருந்தால் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லலாம், இல்லையெனில் அவர்களின் உறவை மதித்து அந்த அற்புதமான தருணம் அமையும் வரை காத்திருங்கள். இதுதான் உங்கள் உறவில் உங்களை முழு ஈடுபாடுடன் வைத்துக் கொள்ள உதவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன