30 வயது உடையவர்கள் இதை நிச்சயம் பின்பற்ற வேண்டும்.!

men of 30 years old should follow these to maintain their beauty

இளமையாக இருக்கும் போது நமது சருமம் மற்றும் அழகைப்பற்றி நாம் அதிகளவில் கவலை கொள்வதில்லை ஏனென்றால் அப்போது நாம் முடிந்தவரை கொண்டாட்டங்களில் கவனம் செலுத்துவோம். ஆனால் எப்போது நமக்கு 30 வயது தொடங்குகிறதோ அப்போதிலிருந்து நமது அழகை பற்றிய கவலை நமக்கு தொற்றிக்கொள்ளும். முன்பை போல் நாம் ஏன் இப்போது இல்லை என்ற கவலையால் ஏராளமான கிரீம்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை வாங்கி பணத்தை விரையம் செய்வோம். இது அனைத்தையும் தவிர்த்து 30 வயதிற்கு ஏற்பட்டால் போல் பொறுப்புடன் இந்த வழிகளை பின் தொடர்ந்தால் நீங்கள் அழகாகவும், இளமையாகவும் மற்றும் சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும்.

நீங்கள் வேலை செய்யும் நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் ஒரு சிலரோ தங்கள் வேலைகளை இழுத்துக்கொண்டே செய்வார்கள் இதனால் அவர்கள் எப்போதும் வேலையாக இருக்கும் உணர்வை கொண்டவர்களாக இருப்பார்கள். இதை தவிர்த்து உங்கள் வேலைகளை மிக விரைவில் முடித்துக் கொள்ளுங்கள். பின்பு உங்களுக்கான நேரத்தை ஒதுக்கி அதில் கவனம் செலுத்துங்கள்.

மேலும் படிக்க – வாழ்வை ஒளிர செய்யலாம் துளசியின் மருத்துவம்

உணவை சரியாக தேர்ந்தெடுப்பது அவசியம். முப்பது வயதை கடந்தவர்கள் முடிந்தவரை உணவில் சர்க்கரை மற்றும் எண்ணெய்யை குறைத்துக் கொள்வது நல்லது.  உணவில் சர்க்கரை மற்றும் எண்ணெய் இருந்தால் உங்கள் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சனை உண்டாக வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் இது உங்கள் அழகையும் பாதிப்படைய செய்து விடும்.

நீங்கள் வயதாவதை தடுப்பதற்க்கு ஒரு எளிய வழிமுறை இருக்கின்றது அதற்குத் தேவையான பொருள் முட்டையின் வெள்ளைக்கரு, எலுமிச்சை சாறு, யோகர்ட். இது மூன்றையும் ஒன்றாக சேர்த்து உங்கள் முகத்தில் தடவி வந்தால் உங்கள் வயதை இது மறைத்து இளமையாக வைக்கும்.

இது மட்டுமல்லாமல் உங்கள் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு விட்டால் கேரட், உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள் மற்றும் பேக்கிங் சோடாவை கொண்டு சரி செய்யலாம். முதலில் நாம் கேரட் மற்றும் உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து விட்டு அதை ஒன்றுடன் ஒன்று நன்கு இணைத்து பேசிய வேண்டும் பின்பு அதில் மஞ்சள் தூள் மற்றும் பேக்கிங் சோடாவை சேர்த்து முகத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும் சுமார் 20 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு நீரில் கழுவினால் நிச்சயம் உங்கள் முகம் பொலிவுடன் இருக்கும். இதை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்தால் உங்கள் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி நீங்கள் எப்போதும் இளமையாக இருப்பீர்கள்.

மேலும் படிக்க – கேரளா பெண்கள் தேவதையாக இருப்பதற்கு இதுதான் காரணம்.!

முதிர்ச்சி அடையும் நிலையில் நீங்கள் இருந்தீர்கள் என்றால் முடிந்தவரை வெந்நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். இது உங்கள் சருமத்தை வறட்சி அடைய வைப்பது மட்டுமல்லாமல் உங்கள் உடலையும் பாதிப்படைய செய்யும் இதனால் எப்போதும் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது. வயதாவதை இந்த வழிகளின் மூலமாக தடுத்து எப்போதும் இளமையாக இருங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன