ஆணாதிக்கம் கொண்ட ஆண்களை அறிவதற்கான வழிகள்.!

Men Have These Symptoms They Hate Women

முன்னொரு காலத்தில் ஆண்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. பெண்கள் எப்போதும் தனக்குக் கீழ் மட்டும் அடிமையாக இருக்க வேண்டும் என்ற சட்டம் ஆண்களால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது நாளடைவில் பல போராளிகளால் மாற்றப்பட்டது. இருந்தாலும் இப்போது இருக்கும் காலங்களிலும் ஒரு சில ஆண்கள் பெண்களின் வெற்றியை கண்டு பொறாமைப்பட்டு அவர்களை எப்போதும் கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறார்கள். இப்படி உங்கள் காதலன் அல்லது கணவன் இதுபோன்ற எண்ணத்தில் இருந்தால் சில அறிகுறிகளை வைத்து நாம் கண்டறிய முடியும். அவை என்னவென்று பார்ப்போம்.

ஆண் ஆதிக்கம் செலுத்தும் ஆண்களுக்கு ஒரு பெண் நண்பர்கள் கூட இருக்கமாட்டார்கள். பெண்களுடன் நட்பு வைத்திருக்கும் சூழ்நிலையில் இவர் இருந்தாலும் எந்த ஒரு பெண்ணும் இவருடன் நட்பு வைத்திருக்காமல் இருப்பார்கள்.

மேலும் படிக்க – காதலர் தினத்தை இதுபோல கொண்டாடி உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள்.!

நீங்கள் எப்போதெல்லாம் உணர்ச்சிவசப் படுகிறார்களோ அப்போதெல்லாம் உங்களை பைத்தியக்காரி என்றே சொல்வார்கள். அதைத் தவிர்த்து உணர்ச்சியைக் கட்டுப்படுத்த தெரிந்தவன் நான், நீ வலிமையற்றவள் என்ற எண்ணத்திலேயே இருப்பவர்களை பெண்கள் தவிர்க்க வேண்டும்.

நீங்கள் ஆணாதிக்கம் உள்ள நபருடன் உறவில் இருந்தால் அவர் மற்ற பெண்களை எப்படி பேசுகிறார் என்பதை கவனிக்க வேண்டும். பொதுவாக இதுபோன்ற ஆண்கள் மற்ற பெண்களை இழிவுபடுத்தி பேசுவார்கள் இப்படி உங்கள் நண்பரும் பேசினால் உடனடியாக அவரை விட்டு விலகுவது நல்லது.

உங்கள் கருத்துக்களை அவமதிப்பது மட்டுமல்லாமல் அதை மட்டத்தட்டி பேசுபவர்கள் ஆண் ஆதிக்கம் உடையவர்கள். அவர் ஏதாவது தவறு செய்தால் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அதற்கும் நீங்கள் செய்த காரியம்தான் காரணம் என்பார்கள்.

மேலும் படிக்க – கலைகட்டும் காதலர் தின முன்னோட்ட ரோஸ் டே

உங்களை எப்போதும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களே முடிவெடுப்பார்கள். உங்களுக்கான தனி சுதந்திரத்தை தவிர்த்து அவர்கள் கட்டளைகளுக்கு நடக்கும்படி செய்வார்கள்.

எனவே இதுபோன்ற செயல்கள் உங்கள் ஆண் நண்பர் அல்லது காதலர் செய்தால் அவர் ஆணாதிக்கம் உடைய நபர். எப்போதும் பெண்களுக்கு ஆண்கள் ஆதிக்கம் செய்வது பிடிக்கும் ஆனால் இது ஆரம்பத்தில் இனிமையாக இருந்தாலும் உறவில் பிரச்சினை ஏற்படும் பொழுது இது உங்களை அதிகளவில் கஷ்டப்படுத்தும் எனவே இதுபோன்ற ஆண்களை திருத்த முயற்சி செய்யுங்கள் இல்லையெனில் அவர்களை விட்டு பிரிவது நல்லது ஏனென்றால் இதுபோன்ற ஆண்கள் உங்களிடமிருந்து கிடைக்கும் ஒரு சில தேவைகளுக்காக பழகுவார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன