வெற்றிலையில் இருக்கும் நாம் அறிந்திராத மருத்துவ குணங்கள்.!

Medicinal properties of betel leaves

ஒருகாலத்தில் வயதானவர்கள் எப்போதும் தங்கள் வாயில் போட்டு அரைத்துக் கொண்டிருக்கும் பொழுது போக்கு உணவுதான் வெற்றிலை. இது ஒருவிதமான போதைப்பொருள் என்றும், எப்படி ஆண்கள் பீடி, சிகரெட் பிடிக்கிறார்களே அதுபோல் பெண்கள் வயதாகும் சமயங்களில் வெற்றிலையை போட்டு அரைத்து வருவார்கள் என்று நாம் தவறுதலாக நினைத்திருந்தோம். உண்மையில் இதில் எந்த போதை தன்மையும் இல்லை, இதை சாப்பிடுவதன் மூலம் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கிறது. அதை உணர்ந்துதான் முன்னோர்கள் நமக்கு இந்த பழக்கத்தை தந்துள்ளார்கள்.

காயங்களுக்கு ஏற்றது வெற்றிலை

உங்களுக்கு ஏற்படும் வெளிப்புற காயங்களுக்கு வெற்றிலை ஒரு சிறந்த மருந்தாகும். காயங்கள் ஏற்பட்ட பகுதியில் வெற்றிலை சாரை வைப்பதினால் காயங்கள் மேல் ஏற்படும் வலிகள் குறைந்து மிக விரைவில் குணமாகும். இன்றுவரை இதை எத்தனை பேர் கடைப்பிடித்து வந்துள்ளார்கள், எனவே சுபகாரியங்களுக்கு பயன்படுத்தும் வெற்றிலையை வீணாக்காமல் இதுபோன்ற மருத்துவம் முயற்சிக்கு பயன்படுத்துங்கள்.

மேலும் படிக்க – இயற்கையற்ற உணவுகளிலிருந்து இயற்கை உணவுக்கு மாறுவதினாள் நமக்கு ஏற்படும் நன்மைகள்..!

மூட்டு வலி நிவாரணம்

இயற்கையாகவே வெற்றிலையில் கிருமிநாசினி சக்திகளைக் கொண்டுள்ளது இதனால் உங்கள் மூட்டு பகுதியில் ஏற்படும் வலிகளை வெற்றிலை மூலமாக போக்க முடியும். வெற்றிலையை நன்கு சாறாக அரைத்து உங்கள் மூட்டுக்களில் தடவுவதன் மூலம் வலிகள் குறைந்து மீண்டும் பழைய நிலைக்கு உங்களை மாற்றும். இதனால் உங்களுக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது.

அஜீரண கோளாறு

வெற்றிலையில் இருக்கும் இயற்கையான வேதிப்பொருள் உங்கள் உணவுகளை விரைவில் ஜீரணம் செய்ய உதவும். இதனால் தான் எந்த திருமணத்திற்கு சென்றாலும் அதிகப்படியான உணவுகளை உட்கொள்கிறோம் என்பதை அறிந்து அங்கே வெற்றிலையை வைக்கிறார்கள். இதனால் உங்களுக்கு ஏற்படும் அஜீரணக் கோளாறு அனைத்தையும் போக்கி உங்களை இயல்பு நிலையில் வைக்கிறது.

மேலும் படிக்க – ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.!

சுவாச பிரச்சினையை சரி செய்கிறது

வெற்றிலை சாப்பிட்டால் வாய் மணக்கும் என்பார்கள் அதைப்போலவே உங்களுக்கு ஏற்படும் அனைத்து சுவாசப் பிரச்சினை மற்றும் துர்நாற்றம் நிலையைப் போக்கி உங்களின் வாயை மணக்க வைக்கிறது. இதில் இருக்கும் பண்பு உங்கள் வாய்ப்பகுதியில் ஏற்பட்டு இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து உங்கள் பிஎச் அளவையும் அதிகரிக்கிறது.

உடல் எடையைக் குறைக்கிறது

ஜீரணசக்தியை வெற்றிலை அதிகரிப்பதினால் உங்கள் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் வெளியேறுகிறது. அதுமட்டுமல்லாமல் தேவையற்ற உணவை மிக விரைவில் ஜீரணம் செய்ய உதவுகிறது. உங்கள் உடல் எடை உயராமல் உங்களைப் பார்த்துக் கொள்கிறது.

தொண்டை வலி நிவாரணம்

வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் உங்கள் தொண்டையில் ஏற்பட்டிருக்கும் வலி, புண்கள் அனைத்தும் நிவாரணம் அடையும். இதற்காக நாம் தினமும் ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பிறகு வெற்றிலையை சாப்பிடுவது அவசியம்.

மேலும் படிக்க – மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலியை போக்கும் வழிகள்.!

ஆண்களின் விரைப்புத்தன்மை

வெற்றிலையில் இருக்கும் வேதிப்பொருள் ஆண்களின் உடலில் செல்லும் ரத்த நாளங்களுக்கு புத்துணர்ச்சி அதிகரிக்கிறது. இதனால் அவர்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மையை குறைந்து நிம்மதியாக இருக்க உதவுகிறது.

வெற்றிலையை வெறுமென மெல்லும்போது உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைக்கிறது. அதுமட்டுமல்லாமல் இதில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதினால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் நோய்களை ஆரம்பத்திலேயே அழிக்கிறது. இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட வெற்றிலையை இன்று பலரும் சாப்பிடுவதில்லை, யாராவது திருமணத்திற்கு சென்றால் மட்டும் அதில் சேர்க்கப்படும் இனிப்புக்காக சாப்பிடுகிறார்கள். எனவே உண்மையில் ஆரோக்கியத்தைத் தருவது வெற்றிலை தான் அதை வாங்கி தினமும் சாப்பிடுவதினால் உங்களுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன