தொட்டாச்சிணுங்கி செடியில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

  • by
medicinal benefits of touch me not plant

நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது விளையாடுவதற்கு பயன்படுத்தும் செடிதான் தொட்டாசினிங்கி. இதை தொட்டவுடன் நம் கண்களை மூடுவது போல தன் இதழ்களை மூடிக் கொள்ளும். இத்தகைய குறும்புத்தனம் மிக்க இந்த சிறிய செடியில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன, அதை இந்த பதிவில் காணலாம்.

உடல் சூட்டை குறைக்கும்

கோடைகாலம் வந்துவிட்டாலே நம்முடைய உடலின் சூடு அதிகரிக்கும். இதன் மூலமாக சிறுநீர் செல்லும் வழியில் எரிச்சல் உண்டாகும். இதைத் தடுப்பதற்கு நாம் தொட்டாசினிங்கி இதழை அரைத்து அதை 5 முதல் 6 நாட்கள் தினமும் காலையில் தயிருடன் கலந்து சாப்பிட வேண்டும், இதன் மூலமாக உடல் உஷ்ணம் குறையும்.

மேலும் படிக்க – நெல்லிக்காய் மற்றும் திருபல பொடியை சாப்பிட்டு நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்..!

வீக்கத்தை குறைக்கும்

கை, கால்கள் வீக்கம், ஒவ்வாமை, தோல் தடிப்பு போன்றவற்றை குணப்படுத்த தொட்டாசினிங்கி இலையை நன்கு அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பற்று போட வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் உங்கள் வீக்கங்கள் அனைத்தும் குறைந்து பழைய நிலைக்கு திரும்பலாம்.

வயிற்றுப்புண் மற்றும் மூலம்

வயிற்றுப்புண் உள்ளவர்கள் தொட்டாசினிங்கி இலையை நன்கு அரைத்து அதை மோரில் கலந்து தொடர்ந்து மூன்று நாள் சாப்பிட்டு வந்தால் அவர்கள் உடல்குளிர்ச்சி அடைந்து வயிற்றில் உள்ள அனைத்து புண்களும் குணமாகும். அதேபோல் மூலம் பிரச்சனை உள்ளவர்கள் தொட்டாசினிங்கியை சம அளவு எடுத்து அதை அரைத்து பாலில் கலந்து குடிப்பது நல்லது.

சக்கரை நோய்க்கு தீர்வு

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொட்டாசினிங்கி இலையும் அதன் வேரையும் ஒன்றாக சேர்த்து அதை பொடியாக்கி தினமும் காலையில் வெறும் வயிற்றில் அதை பாலில் கலந்து சாப்பிடுவதன் மூலமாக உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.

ஆண்மை சக்தி அதிகரிப்பு

ஆண்மை சக்தி குறைபாடு உள்ளவர்கள் தொட்டா சிணுங்கி இலையை காய வைத்து அதை பொடியாக்கி பாலில் கலந்து தொடர்ந்து பதினைந்து நாட்கள் குடிக்க வேண்டும். இதன் மூலமாக அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை உணரலாம்.

மேலும் படிக்க – குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்..!

மாதவிடாய் பிரச்சனை

மாதவிடாய் சமயங்களில் பெண்களுக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் தொட்டா சிணுங்கி செடியை நன்கு இடித்து அதில் இருந்து வரும் சாறை தேனுடன் கலந்து 3 வேளை குடிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அந்த சாறை வெந்தயம் மற்றும் சீரகத்தை கலந்து சாப்பிடலாம்.

எனவே இதுவரை அறிந்திராத இந்த தொட்டசினிங்கியில் இருக்கும் மருத்துவ குணங்களை நாம் பெற வேண்டும் என்றால் உடனே கிராமப்புறங்களில் இருக்கும் தொட்டசினிங்கி இலைகளை மற்றும் செடிகளை பறித்து நகரத்திற்கு கொண்டு வாருங்கள். அதை தவிர்த்து இதன் பயன்களை மற்ற அனைவருக்கும் தெரியப்படுத்தி எல்லோரும் ஆரோக்கியமாக வாழுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன