பவளமல்லியில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

  • by
medicinal benefits of pavalamalli

பூக்கள் என்றாலே பெண்களுக்கு மிக பிடித்தமான ஒன்று, அதிலும் மருத்துவ குணங்கள் அடங்கி உள்ள பூக்களை பூக்களை பெண்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் இருப்பது தான் பவளமல்லி. இதன் பூக்கள், இலைகள் மற்றும் விதைகள் போன்ற அனைத்தும் உங்களுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கிறது.

உடல் கழிவுகளை அகற்றும்

பவளமல்லிகையின் கசாயம் குடிப்பதன் மூலமாக உங்கள் உடலில் உள்ள அனைத்து கழிவுகளையும் அகற்றலாம். உங்கள் உடலில் வியர்வை, சிறுநீர் மற்றும் பித்தங்களை பெருக்கி வெளியேற உதவுகிறது. இதன் இலை மற்றும் வேர்கள் உங்கள் பித்தங்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.

மேலும் படிக்க – கரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பாக அலுவலகத்திற்கு செல்லும் வழிகள்..!

வயிற்றுப் புழுக்கள்

வயிற்றில் புழுக்கள் உள்ளவர்கள் இந்த பவள மல்லி இலையில் இருந்து எடுக்கப்படும் சாறுடன் சிறிது உப்பு மற்றும் தேன் கலந்து குடிப்பதன் மூலமாக உங்கள் வயிற்று பிரச்சனை அனைத்தையும் தீர்க்கும்.

இருதயம் மற்றும் ரத்தம்

பவள மல்லி இலையை மண்சட்டியில் போட்டு அதை நன்கு சூடேற்றி அதில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி அதை அரை லிட்டர் ஆகும் வரை சுண்ட காய்ச்சி அந்த நீரை இதயம் வலுவில்லாத குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அதேபோல் ரத்த அளவு குறைவாக உள்ளவர்களும் இந்த நீரை அருந்தலாம், இதன் மூலமாக உங்கள் ரத்தத்திலுள்ள அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து உங்கள் இருதயத்தையும் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்கிறது.

வைரஸ் பாதிப்புகள்

கேரளாவில் உருவான நீபா வைரஸ் பாதிப்பை குறைப்பதற்கு பவளமல்லியை அதிகளவில் பயன் படுத்தினார்கள். இதன் மூலமாக செய்யப்படும் கசாயத்தினால் உங்களுக்கு ஏற்படும் சளி, தொண்டை வலி, காய்ச்சல் போன்ற அனைத்து பிரச்சினைகளும் குணமாகும். அதேபோல் நோய் தொற்றுக்கள் ஏதும் உங்களை அண்டாமல் பார்த்துக் கொள்ளும்.

மேலும் படிக்க – உங்கள் தினசரி வாழ்க்கையை கரோனா வைரஸ் எப்படி பாதிக்கிறது..!

காய்ச்சல் மற்றும் உடல் வலி

பவள மல்லிச் செடியின் இளம் கொழுந்தை, இஞ்சி சாற்றுடன் அரைத்து தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் உடனடியாக குணமாகும். இதன் இலையை வெந்நீரில் போட்டு நன்கு ஊறவைத்து அதை குடித்து வந்தால் காய்ச்சலினால் ஏற்படும் முதுகு வலி மற்றும் உடல் வலிகள் அனைத்தும் நீங்கும்.

சித்த மருத்துவத்தில் மிக முக்கியமான பங்கை வகிக்கும் இந்த பவளமல்லி பூக்கள், இலைகள் மற்றும் வேர்கள் ஏராளமான நன்மைகளை அளிக்கிறது. எனவே இதை வீட்டில் செய்து உங்கள் குடும்ப ஆரோக்கியத்தை வலுவாக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன