கீழாநெல்லியில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

  • by
medicinal benefits of kilanelli

இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் நமக்கு ஏதாவது ஒரு சிறிய உடல் பிரச்சினை ஏற்பட்டாலும் உடனே  நாம் மருத்துவமனைக்கு சென்று நம் கைகளில் இருக்கும் பணத்தை வீணாக்குகிறோம். ஆனால் அக்காலத்தில் வாழ்ந்த முன்னோர்கள் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் இயற்கை மூலமாகவே அதற்கான தீர்வுகளை கண்டு பிடித்து வந்தார்கள். எனவே வயல்வெளிகள், பூங்காக்கள் மற்றும் நீர்நிலைகள் அதிகமாக இருக்கும் இடங்களில் வளரக் கூடிய மூலிகை பொருட்களின் வகையை சேர்ந்தது தான் இந்த கீழாநெல்லி செடி.

எளிய பராமரிப்பு

நாம் ஒரு பூக்கள் செடி வளர்க்க வேண்டும் என்றாலே அதற்கு ஏராளமான பராமரிப்புகள் தேவைப்படுகிறது. ஆனால் மூலிகை பொருட்களை கொண்ட செடிகள் அனைத்திற்கும் பராமரிப்பு என்பது அவசியமில்லை. எனவே இந்த கீழாநெல்லி செடிக்கும் பராமரிப்பு அவ்வளவாக தேவைப்படாது, எனவே இதை மிக எளிமையான முறையில் வளர்த்து அதில் இருக்கும் இலைகளை உணவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலமாக நமது உடல் ஆரோக்கியம் பல மடங்கு அதிகரிக்கும். கீழாநெல்லியின் பொட்டாசியம் சத்து அதிகமாக இருக்கிறது, இதை தவிர்த்து இந்த இலையில் ஓரளவு கசப்புத் தன்மை இருக்கும்.

மேலும் படிக்க – கொரோனா பாதிப்பைத் தடுக்க நுரையீரலை ஆரோக்கியமாக வைப்பது எப்படி..!

மஞ்சள் காமாலை

குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கும் மற்றும் வெயிலில் அதிகமாக சுற்றித் திரிபவர்களுக்கு ஏற்படும் கொடிய வியாதி தான் இந்த மஞ்சள் காமாலை. இது ஒருவரின் உயிரை பறிக்கும் தன்மையைக் கொண்டது, எனவே இதை எளிதில் குணப்படுத்தும் தன்மையைக் கொண்டது தான் இந்த கீழாநெல்லி கீரை. கீழாநெல்லி கீரையை நன்கு அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து மோருடன் சேர்த்து குடிப்பதன் மூலமாக உங்கள் கல்லீரலில் உள்ள அனைத்து பிரச்சினையையும் தீர்த்து மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கீழாநெல்லி கீரையை வெயிலில் காயவைத்து அதை பொடியாக்கி மூன்று வேளை உணவு சாப்பிடுவதற்கு முன்பாக இந்த பொடியை சாப்பிட வேண்டும். இதன் மூலமாக சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து உங்களுக்கு டயாலிசஸ் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுவிக்கும். அதே போல் உங்கள் உடலில் சக்கரையின் அளவை முடிந்து வரை குறைத்து உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

தொற்று நோய்களை தடுக்கும்

கீழாநெல்லியின் வேரை அரைத்து அதை நன்கு பொடியாக்கி பசும்பாலில் அதை கலந்து குடிக்க வேண்டும். இதன் மூலமாக கோடை காலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணம் அனைத்தும் குறைந்து தொற்று நோய்களில் இருந்து உங்களை முழுமையாகப் பாதுகாக்கும். அதேபோல் இந்த கீரையின் சாறு மோரில் கலந்து குடிப்பதன் மூலமாக உங்கள் தொண்டை மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஏற்படும் புண்களைக் குணப்படுத்தும்.

மேலும் படிக்க – ஊரடங்கை நேர்மறையாக எதிர்கொள்ளுங்கள்..!

வெள்ளைப்படுதல்

கீழாநெல்லி கீரையை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 3 டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளராக மாறும் வரை கொதிக்க வைத்து அந்த நீரை காலை மற்றும் இரவு என இரு வேளைகளில் குடித்து வந்தால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் உடனடியாக குணமாகும். அதேபோல் நல்லெண்ணெய்யை சூடு ஏற்றி அதில் கீழாநெல்லி சாறு கலந்து பாலுடன் சேர்த்து குடிப்பதன் மூலமாக தலைகளில் ஏற்படும் வலிகளை உடனே குறையும்.

ஆயுர்வேதத்தில் அதிகமாக பயன்படுத்தி வரும் இந்த கீழாநெல்லி கீரையில் இதை தவிர்த்து ஏராளமான நன்மைகளும் இருக்கிறது. கீழாநெல்லி இலையில் உப்பு சேர்த்து அதை நன்கு அரைத்து நீரில் கலந்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு போன்ற பிரச்சனைகள் அனைத்தும் விலகும். எனவே மிக எளிமையான முறையில் கிடைக்கும் இந்த மூலிகையை சரியாக பயன்படுத்தி உங்களை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன