பூக்கள் மற்றும் அதில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

  • by
medicinal benefits of different flowers

பூக்கள் பிடிக்காத பெண்கள் என்று யாரும் இருக்க முடியாது, ஆனால் இப்போதிருக்கும் தலைமுறைகள் பூக்களை வேறு வழியில் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் வாசனை திரவியத்தில் பூக்கள் இருக்கிறது. அதை தவிர்த்து சோப்பு, ஷாம்பூ மற்றும் இயற்கை எண்ணெய்களில் பூக்களின் பங்கு அதிகமாக இருக்கிறது. இதை தவிர்த்து பூக்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. எந்தெந்த பூக்களில் என்னென்ன பயன்கள் இருக்கிறது என்பதை இந்த பதிவில் தெளிவாக காணலாம்.

உலகிலுள்ள மலர்கள்

ஒட்டுமொத்த உலகில் பல லட்சக்கணக்கான மலர்கள் இருக்கின்றன அதில் 25 சதவீத மலர்களை மனிதர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அதை தவிர்த்து அதில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன, நமக்கு ஏற்படும் உடல் உபாதைகள் மற்றும் உடல் பிரச்சனை அனைத்தையும் தீர்க்கும் தன்மை இந்த பூக்களில் உள்ளது. பூக்கள் நமக்கு நறுமணம் மட்டும் அளிக்கிறது என்று தவறாக நினைபவர்களுக்கான பதிவு இது.

மேலும் படிக்க – ஒழுக்கமற்ற இளைஞர்களினால் ஏற்படும் விபரீதம்..!

ரோஜாப்பூவின் நன்மை

காதல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் ரோஜா பூக்களில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. இந்த இதழை வெறுமனே சாப்பிட்டாலும் அல்லது கசாயமாக செய்து சாப்பிடுவதன் மூலமாகவும் நமக்கு உண்டாகும் தலைச்சுற்றலை நீக்கிவிடும். இதை தவிர்த்து கண்களில் உண்டாகும் நோய்கள் மற்றும் பிரச்சினைகளை தீர்க்கும் பண்பு ரோஜா பூக்களுக்கு உண்டு. இதன் மூலமாக எண்ணெய் மற்றும் வாசனைப் பொருட்களை உருவாக்குகிறார்கள்.

மல்லிகைப்பூ

மல்லிகை பூவின் மனம் நம்முடைய மனப்பதட்டம் மற்றும் மன பிரச்சனைகளை போக்கும் வலிமை கொண்டது. இதனால்தான் இதை எல்லாவிதமான சுப காரியங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள் அதைத் தவிர்த்து பெண்கள் மல்லிகையை அதிக அளவில் விரும்பி பயன்படுத்துவார்கள். உங்கள் உடல் மற்றும் கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும் பண்பு மல்லிப்பூக்கு உண்டு.

செண்பகப்பூ மற்றும் பாதிரிப் பூ

செண்பகப்பூவும் உங்களுக்கு உண்டாகும் வாதத்தை குணப்படுத்தும் தன்மையை கொண்டது. அது மட்டுமல்லாமல் உங்கள் பார்வைத் திறனை அதிகரிக்கும் சக்தியும் இதற்கு உண்டு. பாதிரிப்பூ செவி கோளாறுகளை சீர்படுத்தி உங்கள் செரிமான சக்தியை அதிகரிக்கும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்ற அனைத்தையும் குறைத்து உங்கள் இயல்பு வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும்.

செம்பருத்திப்பூ

நம் வீட்டுத் தோட்டங்களில் மிக எளிதில் வளரக்கூடிய இந்த செம்பருத்திப்பூ உங்கள் கூந்தல் பராமரிப்பதற்கும் உதவியாக இருக்கும். இதில் சியக்காய் மற்றும் எண்ணெய்களில் கலந்து நம் கூந்தலை பராமரிக்க செய்கிறார்கள். உங்கள் உடல் உஷ்ணத்தையும் குறைக்கும் தன்மை இந்தப் பூவில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்க்கு உண்டு.

மகிழும் மற்றும் வில்வப்பூ

மகிழம்பூ உங்கள் தலை சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கும். இதைத் தவிர்த்து பல் சொத்தையை போக்கி உங்கள் பற்களை வலிமையாக்க உதவும். வில்வப்பூ உங்கள் சுவாசத்தை சீராக்கும் மற்றும் காச நோயை குணப்படுத்தும். அதேபோல சித்தகத்தி பூ உங்களுக்கு உண்டாகும் தலைவலி, களைப் போக்கி உங்கள் மூளையின் ஆற்றலை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவும்.

மேலும் படிக்க – இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்காத மாநிலங்கள்..!

தாழம்பூ மற்றும் தாமரைப்பூ

தாழம்பூ உங்கள் உடல் சோர்வை நீக்கி உங்கள் உறக்கத்திற்கு உதவும். இதன் நறுமணம் நமக்கு மனநிறைவு மற்றும் மன நிம்மதியை அளிக்கும். தாமரைப்பூ உங்களுக்கு உண்டாகும் தலைசுற்றல் மற்றும் தலைவலியை போக்கும். மன உளைச்சலைப் போக்கி உங்களை நிம்மதியாக உறங்க வைக்கும் பண்பு தாமரை பூக்களுக்கு உண்டு.

அதேபோல் கனகாம்பரம் பூ தலைசுற்றல் மற்றும் தலைவலி போன்றவற்றை அகற்றும், எனவே இந்த பூக்களின் பயனை அறிந்து இதை கசாயமாக இல்லை எனில் இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் கொண்டு உங்கள் தலையில் மசாஜ் செய்தும் பயன் பெறலாம். இந்தப் பூக்கள் அனைத்தும் உங்களை லேசாக உணர வைத்து உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன