தேங்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

  • by
medicinal-benefits-of-coconut

மனிதர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கும் இயற்கை, வெப்பம் அதிகமாக உள்ள இடங்களில் மக்களை குளிர்விப்பதற்காக ஒரு சில அற்புதங்களை உண்டாக்கியது. அந்த அற்புதத்தை உண்டாக்கிய ஒரு முக்கியமான மரம்தான் தென்னை மரம் இதில் இருந்து கிடைக்கக்கூடிய இளநீர், தேங்காய் போன்றவை மூலமாக நமது உடலை குளிர்ச்சி அடைய செய்து, நம்மை என்றும் இளமையாக வைத்துக்கொள்ளலாம். அப்படி நமக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் தென்னை மரத்திலிருந்து எடுக்கக்கூடிய தேங்காயில் இருக்கும் மருத்துவ குணங்களை இந்த பதிவில் காணலாம்.

என்றும் இளமை

ஊட்டச்சத்து உணவுகளை தவிர்த்தல் மற்றும் அயராமல் உழைப்பவர்களுக்கு இளமையில் முதுமை தோற்றம் உண்டாகும். இது போன்றவர்கள் தினமும் தேங்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து கிடைத்து முகத்தில் உண்டாகும் சுருக்கங்கள் அனைத்தையும் தடுக்கலாம். தேங்காய் இரத்தத்திற்கு தேவையான ஆக்சிஜனை அளித்து உங்கள் உடலை பராமரிக்கிறது.

மேலும் படிக்க – ஆரோக்கியத்தை அள்ளித் தரும் பனை வெல்லம்..!

பற்கள் மற்றும் எலும்பு பாதுகாப்பு

தேங்காயில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்து அதிகமாக இருக்கிறது. இதனால் பச்சை தேங்காயை மென்று சாப்பிடுவதன் மூலமாக உங்கள் எலும்புகள் வலு வாகிறது. அதேபோல் இது உங்கள் பற்களை உறுதியாக்கி பளபளப்பாகவும் வைக்கிறது. நாம் தினமும் ஏதாவது ஒரு வேலையில் எதாவது கொழுப்புகள் அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். எனவே இதை உடற்பயிற்சிகள் செய்து குறைக்க முடியும், உடற்பயிற்சி செய்ய முடியாமல் தவிப்பவர்கள் தேங்காய்யால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டும். தொப்பை உள்ளவர்கள் தேங்காயை அடிக்கடி சாப்பிட வேண்டும் இதனால் உங்கள் வயிற்றுப் பகுதியில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் அனைத்தும் கரைந்து உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

நார்ச்சத்து

நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு ஆற்றலை அளிக்க உதவுவது இந்த நார்ச்சத்து. நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் சிறிதளவாவது நார்ச்சத்து இருக்க வேண்டும், அப்படி நார் சத்து இல்லாத உணவுகளை உட்கொள்பவர்கள் தேங்காயை மென்று சாப்பிடலாம். தேங்காயில் கிட்டத்தட்ட 61 சதவீதம் வரை நார் சத்து இருக்கிறது. மேலும் இது செரிமானத்திற்கு தேவையான என்சைமனை அதிகரித்து உங்கள் உணவுகள் எளிதில் செரிமானம் செய்ய உதவுகிறது.

தலைமுடி உதிர்வு

இன்று பலரும் பிரச்சினையாக பார்ப்பது இளமையில் நரைப்பது, முடி உதிர்வது, முடியின் அடர்த்தி குறைவது போன்றவைகள்தான். இதனால் அவர்களின் மனநிலையை தவிர்த்து உடல் நிலை சோர்வடையும். என்வே தேங்காயில் உள்ள புரதம் மற்றும் செலினியம் சக்தி உங்கள் கூந்தலின் அழகை அதிகரிக்க உதவும். இதனாலேயே இதை கேரளாவில் எண்ணெயில் சேர்த்து பயன்படுத்தி வருகிறார்கள். தேங்காயை சாப்பிடுவதன் மூலமாக உங்களுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

மேலும் படிக்க – உடல் உஷ்ணத்தை சீராக்கி ஆரோக்கியமாக வாழுங்கள்..!

சிறுநீரக தொற்று

மனிதர்களுக்கு அதிக வேதனை அளிக்கக் கூடிய நோய்தான் சிறுநீரக தொற்று, இதனால் ஏற்படும் வலியை தவிர்த்து சிறுநீரகப் பாதையில் அடைப்பு ஏற்படும். இதை ஆரம்பத்திலேயே தடுப்பதற்கு தினமும் தேங்காயை உண்ண வேண்டும். தேங்காயில் கிருமிநாசினி வேதிப்பொருட்கள் இருப்பதினால் சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை அழிக்கும் தன்மை இதற்கு உண்டு. சிறுநீரகத் தொற்று உள்ளவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேங்காயை உண்ண வேண்டும். இதனால் தொற்றுகளால் ஏற்படும் பாதிப்புகள் படிப்படியாக குறையும்.

தேங்காயில் இருக்கும் நீர்ச்சத்து உங்கள் உடல் மற்றும் சருமத்தை பாதுகாக்கிறது, அதைத் தவிர்த்து சருமத்தில் ஈரப்பதத்தை அதிகரித்து வறட்சியை குறைகிறது. காக்காய் வலிப்பு உள்ளவர்கள்  அதன் வலிப்பு தன்மையைக் குறைப்பதற்கு தேங்காயை பயன்படுத்தலாம். நம் நாட்டில் எளிமையாக கிடைக்கக்கூடிய இந்த தேங்காய்யை பயன்படுத்தி என்றும் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வாழயுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன