வாழையின் வனப்பு சோலைபோல் உடலுக்கு தரும் செழிப்பு..!

medical benefits of eating bananas

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றது. வாழைப்பழம் ஆரோக்கியமானது என்று பலருக்கும் தெரியும், ஆனால் அது என்னவிதமான ஆரோக்கிய குணங்கள் இருக்கிறது என்பதை பலரும் அறிந்து இருப்பது அரிது. மிக எளிதில் ஜீரணமாகும் வாழைப்பழத்தை நாம் பசிக்கும்போது ஒன்றிரண்டை வாங்கி சாப்பிடுகிறோம். இதற்குக் காரணம், இதன் விலையும் எப்போதும் குறைவாக இருப்பதுதான். உடனடி உடல் ஆற்றலுக்கு நாம் வாழைப்பழத்தை சாப்பிடுகிறோம், ஆனால் இதில் நாம் அறிந்திராத ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றது.

வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின்கள்

வாழைப்பழத்தில் அதிக அளவிலான வைட்டமின் ஏ, பி6,  மற்றும் சி இருக்கிறது. இதைத் தவிர்த்து இதில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இதனால் உங்கள் உடலில் ஏற்படும் பல நோய்களை போக்கி உங்கள் ஆற்றலை அதிகரித்து உங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது.

வாழைப்பழத்தில் அமினோ அமிலங்கள் நிறைந்து இருப்பதால் உங்களுக்கு ஏற்படும் அலர்ஜியை இது தடுக்கிறது.

மேலும் படிக்க – கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள்..!

உடல் ஆற்றலை அதிகரிக்கும் வாழைப்பழம்

ரத்தசோகை பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடும் போது உங்கள் உடலில் ரத்தத்தின் அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அதேபோல் உடற்பயிற்சி செய்பவர்கள் அல்லது விளையாட்டுத்துறையில் இருப்பவர்கள் தாங்கள் மிகப்பெரிய பயிற்சிகளை மேற்கொள்வதற்கு முன்பாக வாழைப் பழத்தை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால், இது அவர்களுக்குத் தேவையான மொத்த ஆற்றலையும் சில வினாடிகளிலேயே தந்துவிடும்.

மேலும் படிக்க – குழந்தைகளுக்கான பாரம்பரிய கஞ்சி வகைகள்..!

வயிறு கோளாறுகள்

ஒரு சிலர் தேவையற்ற உணவுகளை தேவையில்லாத சமயங்களில் சாப்பிட்டு வருவார்கள். இவர்களுக்கு அவ்வப்பொழுது வயிற்றுக் கடுப்பு ஏற்படும். அதேபோல் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதால் ஒரு சிலருக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். இவை இரண்டிற்க்கும் தீர்வாக வாழைப்பழம் இருக்கிறது. 

ஒரு சிலர் காலை உணவை தவிர்ப்பதன் மூலம் அவர்களுக்கு அல்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதனால் வயிற்று மற்றும் குடல்களில் புண்கள் உருவாகும். இதை தடுப்பதற்கு தினமும் வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும். இதனால் உங்கள் வாய் மற்றும் வயிற்றில் இருக்கும் புண்களை அகற்றி, உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். எனவே இரவு உணவு அருந்திய அடுத்த 30 நிமிடங்களுக்கு பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது உங்கள் வயிற்றின் ஆரோக்கியத்திற்கு நல்ல பயன் தரும்.

மன அழுத்தப் பிரச்சினைகள்

ஒரு சிலருக்கு தாங்க முடியாத தலைவலி ஏற்படும், அதேபோல் மன அழுத்தம், மன அமைதியின்மை போன்ற பிரச்சனைகள் இருக்கும். இதனால் இவர்கள் தேவையற்ற போதை பழக்கத்திற்க்குள் நுழைகிறார்கள். இது அனைத்தையும் தடுப்பதற்கு நாம் தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால் போதும். உங்களுக்கு ஏற்படும் தலைவலிக்கு உடனடி நிவாரணத்தைத் தரும். அதேபோல் மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள் வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் அவர்கள் மன நிறைவு பெற்று நிம்மதியாக இருப்பார்கள். புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் புகைக்கும் நேரங்களில் வாழைப்பழத்தை சாப்பிடுவது நல்லது. இது இவர்கள் உடலில் படிந்திருக்கும் நிகோடினை குறைத்து நாளடைவில் இவர்களின் புகை பிடிக்கும் எண்ணத்தை தகர்த்துவிடும்.

மேலும் படிக்க – அன்றாடகுளியல் ஆரோக்கித்தை அதிகரிக்கும்

மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்

வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் உங்கள் மூளைக்கு தேவையான ஆற்றலை அளித்து அதன் செயல்பாட்டை அதிகரிக்க உதவும். இதன் மூலமாக நீங்கள் தேர்வுகள் ஏதேனும் எழுதுவதாக இருந்தால் படிப்பதற்கு முன்பு வாழைப் பழத்தை சாப்பிடுவது நல்லது. இது உங்களின் ஞாபகத் திறனை அதிகரிக்கும்.

வாழைப்பழத்தில் குறைந்த அளவில் உப்பு, புரோட்டின் இருப்பதினால் உங்கள் சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்த்து சிறுநீரகக் கல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது. ஒரு நாளைக்கு எட்டு முதல் ஒன்பது வாழைப்பழங்கள் வரை நன்கு குழைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனை மற்றும் சிறுநீரக கல் என அனைத்தயும் விலக்கி உங்களை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ளும்.

மாதவிடாய் பிரச்சனை

மாதத்தில் மூன்று நாட்கள் பெண்கள் பெரும் மிகப்பெரிய அவஸ்தை மாதவிடாய் பிரச்சனை. இச்சமயங்களில் அவர்களுக்கு ரத்தப் போக்கு அதிகரித்து வலிகள் அதிகமாகும். இதை தடுப்பதற்கு நாம் இது போன்ற சமயங்களில் வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இது உங்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை சீராக்கி வலிகளையும் குறைக்கும்.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவிற்கு பதிலாக அவ்வப்போது வாழைப்பழத்தை எடுத்துக் கொள்வது நல்லது. வாழைப்பழத்தை சாப்பிடுவதினால் உங்கள் உடல் எடை அதிகரிக்கும் என்பதெல்லாம் கட்டுக்கதையே, எனவே அதை தவிர்த்து மிக எளிதில் ஜீரணமாகும் வாழைப்பழங்களை எடுத்து உங்கள் உடலை மெலிதாக மாற்றிக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன