உங்கள் உள்ளத்தை கிழித்து காதல் உணர்வை தூண்டும் சிறந்த காதல் பாடல்கள்!

1. நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை – வாரணம் ஆயிரம் 

முதல் சந்திப்பில் இதுவரை பார்த்திராத ஒரு அழகிய பெண்ணை பார்த்து பல நாள் வாழ்ந்தது போன்ற ஏக்கத்தை உண்டாக்கும் அனுபவத்தைப் பெற்ற ஒரு காதலன் தன் இனிய நினைவுகளால் பாடப்படுவது தான் இந்த பாடல் இந்த பாடலை இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் வரிகளை எழுதியவர் தாமரை இந்த பாடலை பாடியவர்கள் ஹரிஹரன் தேவன் ஏகாம்பரம் மற்றும் பிரசன்னா, அதிலிருந்து சில வரிகள்

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

தூக்கங்களை தூக்கிச் சென்றாள்

தூக்கி சென்றாள்..

ஏக்கங்களை தூவிச் சென்றாள்

உன்னை தாண்டி போகும் போது

போகும் போது..

வீசும் காற்றின் வீச்சு வேறு

நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே

நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே

காதல் எனை கேட்கவில்லை

கேட்டால் அது காதல் இல்லை

மேலும் படிக்க – காதலர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய காதல் திரைப்படங்கள்!

2. மன்னிப்பாயா – விண்ணைத்தாண்டி வருவாயா 

முழுநீள காதல் படமான விண்ணைத்தாண்டி வருவாயாவில் மிக முக்கியமான கட்டத்தில் உருவானதுதான் இந்தப் பாடல் சற்றும் எதிர்பாராத காதலி தன் காதலுக்காக திருமணத்தை நிறுத்தி கொண்டு அவனை காதலிப்பதாக சொல்லும் தருவாயில் நம் மனதை கிழித்தெறியும் வரிகளாக இந்தப் பாடலைப் பாடுவார் காதலன் இந்தப் பாடலை இசையமைத்தவர் ஏ ஆர் ரகுமான் இந்த பாடல் வரிகளை எழுதியவர் தாமரை பாடியவர்கள ஏ ஆர் ரகுமான் மற்றும் ஸ்ரேயா கோஷல்

கனவே தடுமாறி நடந்தேன்

நூலில் ஆடும் மழையாகிப் போனேன்

உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே…

தொலை தூரத்தில் வெளிச்சம் நீ

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே…

மேலும் மேலும் உருகி உருகி

உனை எண்ணி ஏங்கும்

இதயத்தை என்ன செய்வேன்?

3. உயிரே உயிரென – ஹீரோ 

மிகவும் அழகான அர்த்தங்களைக் கொண்ட பாடல்தான் இந்த பாடல் எதைப் பற்றியும் தெரியாத ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்த பின் அவளை எந்த அளவுக்கு காதலிக்கிறேன் என்பதை உணர்த்துவதே இந்த பாடலாக வெளிப்படுத்தி இருப்பார் கதாநாயகன் இந்த பாடலை இசை அமைத்தவர் நிவாஸ் கே பிரசன்னா இந்த பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன் இந்தப் பாடலை எழுதியவர் கபிலன் 

உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே

இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன் 

இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவே

கனவாய் உன் விழிகளைப் பார்த்திருப்பேன் தினமே

மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்

விழுந்தாய் ஓர் விதையென நான் எழுந்தேன்

மேலும் படிக்க – உங்கள் உள்ளத்தை கிழித்து காதல் உணர்வை தூண்டும் சிறந்த காதல் பாடல்கள்!

4. மின்னலை பிடித்து – ஷாஜகான் 

ஒருவன் தன் காதலிக்கும் பெண்ணிற்கு தன் காதலை சொல்வதற்கான எழுதப்படும் கடிதம்தான் இந்தப்பாடல் தன் காதலியை எந்த அளவிற்கு கற்பனையான கவிதையால் போற்றப்பட்டு உள்ளார் என்பதை இந்தப் பாடல் வரிகள் உங்களுக்கு உணர்த்தும் இந்த பாடலை இசை அமைத்தவர் மணிசர்மா பாடியவர் உன்னிமேனன் இந்த பாடல் வரிகளை எழுதியவர் வைரமுத்து

மின்மினி பிடித்து கண்களில்

பதித்து கண்களில் பதித்து

கண்மணி கண் பறித்தாள்

தங்கத்தை எடுத்து

அம்மியில் அரைத்து மஞ்சளாய்

நினைத்து கன்னத்தில் குழைத்து

ஜீவனை ஏன் எடுத்தாள்

காவித் துறவிக்கும்

ஆசை வளா்ப்பவள் அருகம்புல்லுக்கும்

ஆண்மை கொடுப்பவள் பெண்களின்

நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே

ஒஹோ தொிந்த பாகங்கள் உயிரைத்

தந்திட மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட

ஜனனம் மரணம் ரெண்டும் தருபவளே

5. பூவாசம் புறப்படும் – அன்பே சிவம் 

ஒரு கலைஞன் தன் ஓவியத்தை வரையும் போது தன் காதலியின் கற்பனையால் தன் கலையை மேம்படுத்திக் கொள்ளும் ஓர் காதலனின் உணர்வுமயமான பாடல் இது இருவருக்கும் இடையில் பரிமாறப்படும் காதல் வரிகள் மிகவும் மென்மையாகவும் ஆழமாகவும் நம்மை ஊடுருவும் இந்த பாடலை இசை அமைத்தவர் வித்யாசாகர் பாடலை பாடியவர்கள் விஜய் பிரகாஷ் மற்றும் சாதனா சர்க்கம் இந்த பாடல் வரிகளை எழுதியவர் வைரமுத்து

பூவாசம் புறப்படும்

பெண்ணே நான் பூ வரைந்தால்

தீ வந்து விரல் சுடும் கண்ணே

நான் தீ வரைந்தால்

பெண் : உயிரல்லதெல்லாம்

உயிர் கொள்ளும் என்றால்

உயிருள்ள நானோ

என்னாகுவேன்

ஆண் : உயிர் வாங்கிடும்

ஓவியம் நீயடி

மேலும் படிக்க – சிறந்த பத்து காதல் தோல்வி தமிழ் பாடல்கள்!

6. அழகூரில் பூத்தவளே – திருமலை 

கோபமும் அடிதடியும் கொண்ட ஒரு இளைஞன் காதல் வயப்பட்டு அதில் படும்பாடு மற்றும் அதில் அவருக்கு இருக்கும் எண்ணத்தை மிக அழகாக வெளிப்படுத்திய பாடல் தான் இது இதற்கு தன் காதலி மிக அழகான பதிலை பாடல் மூலமாக எடுத்து வைத்திருப்பார் இந்த பாடலை இசை அமைத்தவர் வித்யாசாகர் இந்த பாடலை பாடியவர்கள் எஸ் பி பாலசுப்பிரமணியம் மற்றும் சுஜாதா மோகன் இந்த பாடலை எழுதியவர் பா விஜய்

ஆண் : நீ முறிக்கும் சோம்பலிலே

நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன்

பெண் : நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே

நான் இறங்கி தூங்கிடுவேன்

ஆண் : குறிலாக நான் இருக்க

நெடிலாக நீ வளர்க்க

சென்னை தமிழ்

சங்கத்தமிழ் ஆனதடி

பெண் : அறியாமல் நான் இருக்க

அழகாக நீ திறக்க

காதல் மழை

ஆயுள் வரை தூருமடா

7.விண்மீன் விதையில் – தெகிடி 

தான் யார் என்று தன் காதலிக்கு தெரியப்படுத்தாமல் அவளைப் பின்தொடர்ந்து தன்னை அறியாமல் அவள் மேல் காதல் வயப்பட்டு இருவருக்கும் இடையே ஒரு மெல்லிய உறவு ஏற்பட்டதின் வெளி பாட்டினால் பாடப்பட்ட பாடல் தான் இது இந்தப் பாடலின் இசை அமைத்தவர் நிவாஸ் கே பிரசன்னா இந்த பாடலை பாடியவர் அபய் ஜோத்பூர்கர் மற்றும் இந்த பாடலின் வரிகளை எழுதியவர் கபிலன்

நான் பேசாத

மௌனம் எல்லாம்

உன் கண்கள் பேசும்

உனை காணாத நேரம்

என்னை கடிகாரம் கேட்கும்

மணல் மீது தூறும் மழை

போலவே மனதோடு நீதான்

நுழைந்தாயடி

முதல் பெண்தானே

நீதானே எனக்குள் நானே

ஏற்பேனே இனி நீயும் நானும்

ஒன்றாய் சேர்ந்தால்

காதல் இரண்டு எழுத்து

8. மறுவார்த்தை பேசாதே – எனை நோக்கி பாயும் தோட்டா 

மிக அழகான ஆழ்ந்த உள் அர்த்தங்களையும் இசையும் கொண்டதுதான் இந்த பாடல் காதலன் காதலி மேல் வைத்துள்ள அலாதியான அன்பை மிக அழகான வரிகளால் வெளிப்படுத்துவது தான் இந்தப் பாடலின் சூழல் இந்தப் பாடலை இசை அமைத்து எழுதியவர் தர்புகா சிவா இந்த பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம் 

மறந்தாலும் நான் உன்னை

நினைக்காத நாளில்லையே

பிரிந்தாலும் என் அன்பு

ஒருபோதும் பொய்யில்லையே

விடியாத காலைகள்

முடியாத மாலைகளில்

வடியாத வேர்வை துளிகள்

பிரியாத போர்வை நொடிகள்

9.நீயும் நானும் சேர்ந்து – நானும் ரவுடிதான் 

மிகவும் அழகான காதல் பாடல் இது இதில் இருக்கும் ஒவ்வொரு வரிகளும் உங்களை உள்ளிழுக்கும் காதலனும் காதலியும் ஒன்றாக சேர்ந்து வெளியே செல்லும் பொழுது ஏற்படும் உணர்வை பாடலாக எழுதியுள்ளார் பாடலாசிரியர் தாமரை இதுபோன்று வாழ்க்கை முழுவதும் ஒன்றாக பயணிப்போம் என்பதை மிக அழகாக இசையமைத்துள்ளார் அனிருத் ரவிச்சந்திரன் இந்த பாடலை பாடியவர் அனிருத் மற்றும் நேத்து மோகன் நீதி

மொழி இல்ல மௌனத்தில்

விழியாலே வார்த்தை கோர்த்து

கண்ணால் பேசினாய்

கண்ணால் பேசினாய்

நூறு ஆண்டு உன்னோடு

வாழவேண்டும் மண்ணோடு

பெண் உன்னை தேடும் எந்தன் வீடு

10. காதல் ஆசை – அஞ்சான் 

காதலி பற்றி முழுமையாக அறியாத காதலன் தன்னை நேசித்த பெண்ணை நேசிக்காமல் விட்டுச் சென்ற பின்பு அவளைப் பற்றி யோசித்து பாடப்படும் மிக அழகான பாடல் தான் இது இந்த பாடலை இசையமைத்து பாடியவர் யுவன் ஷங்கர் ராஜா இந்த பாடலின் வரிகளை எழுதியவர் கபிலன் 

ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே

உன்னை விடுமுறை தினமென பார்கிறேன்

என் நிலைமையின் தனிமையை நீ மாற்று

என் நேரமே அன்பே

நான் பிறந்தது மறந்திட தோணுதே

உன் ஒரு முகம் உலகமாய் காணுதே

உன் ஒரு துளி மழையினில் தீராதோ

என் தாகமே

ஒருமுறை இதில் இருக்கும் அனைத்துப் பாடல்களையும் கேட்டு பாருங்கள் உங்களை அறியாமலேயே உங்களுக்கு பிடித்தவர்கள் மேல் உங்களுக்கு காதல் அதிகரிக்கும் அந்த உணர்வை அப்படியே தக்கவைத்துக் கொண்டு உங்கள் வாழ்க்கையை மிக அழகாக உருவாக்குங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன