ஹோரை தெரிந்து செயல்படுவோருக்கு வெற்றி நிச்சயம்!

  • by
Meaning of Horai and How to Follow

சூரிய சுற்றுப்பாதையில், சூரியன் அருகில் அல்லது தொலைவில் இருக்கும் கிரகங்கள் அதன் ஈர்ப்பு சக்தியின் மூலமாக அதன் ஒளி பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரங்களை கணக்கிட்டு நம்முன்னோர்கள் ஹோரைகளை கணக்கிட்டுள்ளனர். அதேபோல் சூரியன் மற்றும் அதன் அருகில் அல்லது தொலைவில் உள்ள கிரகங்களை அமைப்பைப் பொருத்து வானவியல் அறிஞர்கள் ஹோரைகளை உருவாக்கினர்.

ஹோரைகளின் கணக்குகள்

வாரத்தின் முதல் நாள் என்று கருதப்படும் சூரியனின் அதாவது ஞாயிரை முதல் ஹோரையாக அளித்தார்கள். அதைத்தொடர்ந்து சுக்கிரனை இரண்டாவது ஹோரையாகவும், பூதனை மூன்றாவது ஹோரையாகவும், நான்காவது ஹோரையாக சந்திரனையும், ஐந்தாவது ஹோரையாக சனியையும், 6வது இடம் குருவுக்கும் 7வது இடம் செவ்வாய்க்கும் அளித்தார்கள்.

ஓரைகளில் பயன்கள்

பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை போன்றவைகளை நம் முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஹோரைகளும் உருவாக்கினார்கள். ஹோரைகளை அறிந்து நடப்பவனை ஜெயிப்பது என்பது இயலாத காரியம் என்பது சித்தர்களின் வாக்கு. ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஹோரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும் அதேபோல் அதற்கு சுற்றுப்பாதைகள் இல்லாததினால் அவைகளுக்கு ஹோரைகள் இல்லை.

ஹோரைகளின் அடிப்படையில் நாம் செய்யும் காரியம் சரியாக அமைந்தால் அதை விட அதிர்ஷ்டமான வாழ்க்கை யாருக்கும் கிடைக்காது. எனவே ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை ஹோரைகளின் பயன்கள் மாறிக்கொண்டே இருக்கும், இதை அறிந்து அதற்கேற்ப செயல்களை செய்வதன் மூலமாக உங்கள் வாழ்க்கையை உங்களுக்குப் பிடித்ததைப்போல் மாற்றலாம்.

மேலும் படிக்க – அதிசயங்களுக்குள் அதிசயங்களான பழங்கால கோவில்கள் பாருங்க.!

சூரிய ஹோரை

சூரிய ஹோரையில் அரசு சம்பந்தமான காரியங்களை செய்யலாம். அதேபோல் வழக்குகள் சம்பந்தமான விஷயங்களை பற்றி பேசலாம். மேலதிகாரி மற்றும் பெருந்தலைகள் இச்சமயங்களில் சந்திக்கலாம், அதன்மூலம் உங்களுக்கு பயனும் கிடைக்கும். இச்சமயங்களில் எந்த காரியத்தையும் புதிதாக துவங்க கூடாது. அதேபோல் சுப காரியங்களை செய்வதற்கு இந்த ஓரை ஏற்றதல்ல. இச்சமயங்களில் உங்களுக்கு தேவையான பொருட்கள் ஏதேனும் காணாமல் போனால் அது அவ்வளவு எளிதில் உங்களுக்கு கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் அந்த பொருளை நீங்கள் முழுமையாக மறந்து பிறகே கிடைக்கும். உயில் சாசனம் எழுதுவதற்கான சிறந்த நேரம் இதுவாகும்.

சுக்கிர ஹோரை

இந்த ஹோரையில் சகல சுப காரியங்கள், வீடு, வாகனம், ஆடை, ஆபரணங்கள் வாங்க ஏற்றதாகும். இச்சமயங்களில் பெண்கள் தொடர்பு கொண்ட எல்லா காரியங்களும் நன்மையைத் தரும். விவசாயம் செய்வதற்கும், பயணங்கள் மேற்கொள்வதற்கும் உகந்த ஓரை இதுவாகும். இந்த ஹோரையில் நீங்கள் தொலைத்த பொருட்கள், மேற்கு திசையில் கிடைக்கலாம்.

மேலும் படிக்க – கிருத்திகை வழிபாடு செய்தால் வாழ்வு வளம் பெறும்.

புதன் ஹோரை

கல்வி மற்றும் எழுத்துத் சம்பந்தமான காரியங்களை தொடங்குவதற்கான சிறந்த ஹோரை இதுவாகும். சுப காரியங்கள் செய்யலாம், நல்ல விஷயங்களைப் பற்றி பேசலாம், பயணங்கள் மேற்கொள்வதற்கும் இந்த ஹோரை சிறந்ததாகும்.

சந்திர ஹோரை

இந்த ஹோரையில் திருமணம், சீமந்தம், குழந்தைக்கு மொட்டை அடித்தல் போன்ற எல்லா சுப காரியங்களையும் செய்யலாம். அதேபோல் வங்கி கணக்கை தொடங்குவது, தொழில்ரீதியாக யாரேனும் சந்திப்பது போன்ற எல்லாவற்றுக்கும் சிறந்த ஹோரை இதுவாகும். இந்த ஹோரையில் பெண்கள் சம்பந்தப்பட்ட அனைத்துக் காரியமும் சுமுகமாக முடியும். இந்த ஹோரையில் நீங்கள் ஏதேனும் பொருட்களை தொலைத்தால், அது நிச்சயம் கிடைக்கவே கிடைக்காது.

சனி ஹோரை 

ஒரு சில ஹோரைகளுக்கு ஏற்றது இந்த சனி ஹோரை. நீங்கள் இந்த ஹோரையில் வாங்கிய கடனை திருப்பி அளித்தீர்கள் என்றால் மீண்டும் உங்களை கடன் வாங்கும் சூழ்நிலைக்கு இது தள்ளாது. பாதயாத்திரை செல்வது, மரக்கன்று நடுவது, அணைகள் கட்டதுவங்குவது போன்றவைகளுக்கு ஏற்ற ஹோரையாகும்.

மேலும் படிக்க – குலதெய்வம் வழிபாட்டை செய்து பலன் பெறுவது எவ்வாறு ?

குரு ஹோரை

இதுவும் எல்லாவிதமான சுப காரியங்களுக்கும் ஏற்ற ஹோரை ஆகும். ஆனால் இந்த ஹோரையில் எல்லாம் நேர்வழியில் செய்வது அவசியம், குறுக்கு வழியில் ஏதேனும் சுப காரியத்தை முடிக்க முயற்சித்தால் அது தவறான விளைவுகளை ஏற்படுத்தும். கப்பல் பயணங்களை இந்த ஹோரையில் தவிர்க்க வேண்டும். உங்கள் பொருட்கள் ஏதேனும் காணாமல் போனால் அதை வெளியே சொல்வதன் மூலம் உடனடியாக கிடைக்கும்.

செவ்வாய் ஹோரை

நிலம் வாங்குவது, விற்பது, ஏதேனும் பத்திரங்களை பதிவு செய்வது, ரத்ததானம், உறுப்பு தானம் என மருத்துவ ரீதியான செயல்களில் ஈடுபடுவது. என அனைத்திற்கும் உகந்த ஹோரை இதுவாகும். நமது அதிகாரத்தை வைத்து எந்த செயலும் இந்த ஹோரையில் கட்டுக்குள் கொண்டு வரலாம். ஆனால் சுப காரியங்களுக்கும் ஏற்ற ஹோரை இதுவல்ல. சண்டைக்கு, வாங்குவதற்கு ஏற்ற ஹோரை இதுவல்ல. எனவே இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்த்து ஹோரைகளின் அடிப்படையில் வாழ்வது அவசியம்.

ஒவ்வொரு நாளும் 4 முறை ஹோரை வருவதினால் நாம் செய்யும் காரியங்கள் அதன் அடிப்படையில் நிகழ்கிறது. ஆனால் அந்த ஹோரைக்கு ஏற்ற நாள் வரும்போது, சில காரியங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே அதை நன்கு அறிந்து அதற்கேற்ற நாளில் அதற்குகேற்ற ஹோரை நேரத்தில் செய்வது தான் சிறந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன