சமூக சேவைகளால் எழுச்சிகாணும் மாநிலம்..!

  • by
many ngos offering social service during this corona crisis

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் அயராமல் உயர்ந்து வருகிறது. இதற்கிடையே அவர்களுக்கு உதவும் வகையில் ஏராளமான சமூக சேவை தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு உணவுகள் மற்றும் உதவிகளை அளித்து வருகிறது. கிட்டத்தட்ட 13 மாநிலங்களில் இவர்கள் உதவி செய்வதினால் இந்திய அரசுக்கு இது மிகப்பெரிய உதவியாக அமைந்துள்ளது.

உதவிபெறும் தமிழ்நாடு

தமிழகத்தில் கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கும் மேல் தமிழக அரசே மக்களுக்கு உதவிகளை செய்து வருவதனால் சமூக சேவை செய்யும் தொண்டு நிறுவனங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். ஒரு நாளைக்கு தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 74 ஆயிரம் பேர்களுக்கு இதுபோன்ற தொண்டு நிறுவனங்கள் உதவிகளை அளித்து வருகிறது. இவர்களுக்கான மூன்று வேளை உணவுகள் மற்றும் வீடு இல்லாதவர்கள் தங்குவதற்கான இடம் என அனைத்தையும் அளிக்கிறது.

மேலும் படிக்க – கொரோனா பாதிக்கும் சூழ்நிலையில் தாய்ப்பால் கொடுக்கலாமா..!

சேவை செய்பவர்கள்

ஆர்வம் உள்ள அனைத்து மனிதர்களும் இதில் இணைந்து மக்களுகான உதவிகளை செய்து வருகிறார்கள். அதாவது சமைப்பதற்கான அத்தியாவசிய பொருட்களை வாங்குவது முதல் அதைக் கொண்டு சமைத்து அனைவருக்கும் பரிமாறுவது வரை எல்லாவற்றையும் இவர்களை செய்து வருகிறார்கள். அரசாங்கமும் இவர்களுக்கான ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது, அதாவது அத்தியாவசிய பொருட்களை அரசாங்க விலைக்கு வாங்கி பயன்பெறுகிறார்கள். அதேபோல் இவர்கள் தமிழகத்தைத் தவிர்த்து இந்தியாவில் உள்ள ஏராளமான மாநிலங்களுக்கும் உதவிகளை செய்து வருகிறார்கள்.

மற்ற மாநிலங்கள்

தென்னிந்தியாவில் கேரளா மற்றும் தமிழகத்திற்கு போதுமான உதவிகள் அரசாங்கம் செய்து வருவதனால் மீதமுள்ள உதவிகளை இவர்கள் செய்கிறார்கள். அதே சமயத்தில் ஹரியானா, குஜராத், உத்தர் பிரதேஷ், டெல்லி மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு ஏராளமான உதவிகளை செய்கிறார்கள். கிட்டத்தட்ட ஹரியானாவில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இவர்கள் உணவுகளை அளித்து வருகிறார்கள். அதை தொடர்ந்து டெல்லி மற்றும் உத்திர உத்திரப்பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

மேலும் படிக்க – கொரோனா : புற்றுநோயாளிகள் பின்பற்ற வேண்டியவை..!

அரசுக்கு உதவி

இவர்கள் செய்யும் இந்தக் காரியத்தினால் அரசாங்கத்திற்கு மிகப்பெரிய உதவியாக அமைந்துள்ளது. இன்னும் இந்த பாதிப்புகள் அதிகரிக்காமல் இருப்பதற்காகவும், பசியால் மக்கள் கவலைப்படுவது தடுப்பதற்காகவும் இதுபோன்ற செயல் பெரிதாக உதவுகிறது. ஒரு சில மாநிலங்களுக்கு இவர்கள் 50 சதவீதத்திற்கு மேல் மக்களுக்கு உதவுகிறார்கள்.

இந்தியாவில் உள்ள இது போன்ற நிறுவனங்கள் மூலமாக நமக்கு ஏராளமான நன்மைகள் நடக்கிறது. இது மேலும் தொடர்ந்து மக்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்க வேண்டும், அதை தவிர்த்து இதை மக்களும் சரியாக பயன்படுத்த வேண்டும். கொரோனா தொற்றை முழுமையாக விலகும் வரை இவர்களின் உதவி நமக்கு மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன