கொரோனாவிளிருந்து வேகமாக குணமடையும் தமிழ்நாடு..!

  • by
many members are getting cured from corona virus

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரத்து 680 க்கும் மேற்பட்டவர்கள் பதித்துள்ளார்கள். இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளார்கள், அதில் 4 ஆயிரத்து 748 பேருக்கு மேல் முழுமையாக குணமாகி வீடு திரும்பியுள்ளார்.

பாதிப்புள்ள மாநிலம்

இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப் பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்ட்ரா பார்க்கப்படுகிறது. இங்கே கிட்டத்தட்ட 5 ஆயிரத்து 600 பேருக்கு மேல் பாதி துள்ளார்கள், அதில் வெறும் 500 பேர் மட்டுமே குணமாகி வீடு திரும்பு இருகிறார்கள். அதேபோல் டெல்லியில் இன்று வரை 2248 பேர் பதித்துள்ளார்கள், மற்றும் 700க்கும் மேற்பட்டவர்கள் குணமாகி உள்ளார்கள். குஜராத்திலும் 2400 பேர் மேல் பாதித்துள்ளார்கள், இங்கே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் குணமாகுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

மேலும் படிக்க – ஊரடங்கில் ஆரோக்கியமாக வேலை செய்யலாம்

குணமாகும் தமிழர்கள்

ஆரம்பத்தில் அதிகமான நோயாளிகளை கொண்டிருந்த தமிழகம் இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இன்று வரை ஆயிரத்து 653 பேர் பாதிதுள்ளார்கள், இதில் கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்டவர்கள் குணமாகி வீடு திரும்பியுள்ளார்கள். கொரோனா நோயாளிகளை ஒப்பிடுகையில் அதிகமாக குணமாகி வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிலிருந்து குணமாகுபவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. எனவே இன்னும் சில நாட்களில் தமிழகம் இந்த கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இதன் பாதிப்புகளை குறைக்கும் என இந்திய சுகாதாரத் துறை எதிர்பார்த்து வருகிறது.

தென்னிந்தியா

தமிழகத்தை தொடர்ந்து தென்னிந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்புகளை வெகுவாக குறைந்து வருகிறது. அதை தவிர்த்து இதன் மூலமாக குணமாகி வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்திற்கு முன்பாக கேரளா மாநிலம்தான் கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது, அதைத் தொடர்ந்து தமிழகம். இப்போது கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசமும் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான சிகிச்சை அளித்து வருகிறது.

மேலும் படிக்க – வாசனை உணர்வைத்தாக்கும் கொரானா தொற்று

இன்னும் சில வாரங்களில் தென்னிந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு முழுமையாகக் குறையும் என சுகாதாரத்துறை எதிர்பார்த்து வருகிறது. அதை தவிர்த்து தமிழகத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் ஊரடங்கை ஒருசில தளர்வுகளுடன் பின் தொடர தமிழகம் முடிவெடுத்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன