ஆண்களின் ஹார்மோன்களினால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்.!

Male Hormones Affects Female Body Problem Solution

ஹார்மோன் பிரச்சினை என்பது கணக்கிடப்படாத ஒரு பிரச்சினையாகவே இருக்கிறது. ஒரு சில ஆண்களுக்கு பெண்களின் ஹார்மோன்களை அதிகரித்து விடுகிறது, அதேபோல் பெண்களுக்கு ஆண்களின் ஹார்மோன்கள் அதிகரிக்கிறது. இதன் தாக்கம் ஏற்ற இறக்கமாக இருக்கிறது. இதனால் இவர்கள் சருமம் மற்றும் உடல்நிலை சில சமயங்களில் பாதிப்படைகிறது. இதனால் பாதிப்படையும் பெண்கள் தங்கள் சருமம் மற்றும் உடல்நிலை பிரச்சினை களால் அவதிப்படுகிறார்கள் இதை சரிசெய்வதற்கான சில அறிவுரைகளை இந்த பதிவில் பார்ப்போம்.

பெண்களின் உடலில் ஆண்கள் ஹார்மோன் சுரப்பதினால் அவர்களுக்கு முகப்பரு, முடி உதிர்தல், முகத்தில் முடி வளர்வது, தடிப்புகள், ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் சருமத்தில் கருமை ஏற்படுத்துதல் போன்றவை உண்டாகிறது. இதை தடுப்பதற்கு நாம் செய்ய வேண்டிய எளிய வழிகளைப் பார்ப்போம்.

மேலும் படிக்க – திரிபாலா ஆரோக்கியத்தின் ஆசானுன்னு சொல்லலாம்.!

இந்த ஹார்மோன் பிரச்சினையினால் ஆண்ட்ரோஜனின் என்ற சுரப்பி அதிகமாக சுரக்கிறது இதனால் உங்கள் சருமத்தில் அதிகப்படியான இடைவெளிகள் ஏற்பட்டு உங்களுக்கு முகப்பரு ஏற்படுகிறது. இதைத் தடுப்பதற்கு நாம் முகங்களை சாலிசிலிக் அல்லது கிளைகோலிக் அதிகமாக உள்ள ஃபேஸ் வாஷ்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். இது உங்கள் முகத்தில் ஏற்படும் இடைவெளிகளை அகற்றி முகப்பருவை தவிர்க்கிறது.

முகப்பரு உண்டாவதை போல்தான் முகத்தில் முடியும் ஏற்படுகிறது. ஆனால் சாதாரணமாக ஒரு ஆணுக்கு வளரும் முடியை விட இது கடினமாகவும், மிக வேகமாகவும் வலரும், இதனால் உங்கள் தோற்றம் மாறுபடும். இதை சரி செய்வதற்காக நாம் முடிந்தவரை குறுகிய காலத்தில் இதை அகற்ற வேண்டும் இல்லை எனில் நீங்கள் பார்ப்பதற்கு ஆண்கள் போல் இருப்பீர்கள். எனவே இதற்காக விற்கப்படும் சிறப்பு க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.

மேலும் படிக்க – பாசிப்பயிறு முளைக்கட்டி சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்கள்..!

உங்கள் சருமம் எண்ணெய் சருமமாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதை சரி செய்வதற்காக நீங்கள் தேயிலை மரச்செக்கு எண்ணெயை பயன்படுத்தலாம். இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் உங்கள் சருமத்தில் ஏற்படும் துளைகளை அகற்றி இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து உங்களை பாதுகாக்கிறது.

உங்கள் ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகமாக இருப்பதினால் உங்கள் கண்களுக்கு கீழ், தொடைகளுக்கு மேல், மார்பகத்திற்கு அடியில் மற்றும் அக்குள் பகுதிகளில் கருமை அதிகமாக இருக்கும். இதைப் போக்குவதற்கு நீங்கள் இன்சுலின் குறைவாக உள்ள பொருட்களை பயன்படுத்துவது நல்லது, இல்லை எனில் வெள்ளையாக உதவும் க்ரீம்களை பயன்படுத்த லாம். அக்குள் பகுதிகளில் ஏற்படும் கருமையைப் போக்குவதற்கு நாம் எலுமிச்சை சாறு அல்லது பேக்கிங் சோடா போன்றவற்றை பயன்படுத்தி கருமையை போக்கலாம். இதில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு தொடர்வது மிகவும் நல்லது.

இந்தப் பிரச்சனையினால் முடி உதிர்தல் மற்றும் வறட்சியான சருமம் ஏற்படும். உங்கள் சருமத்திற்கு ஸ்கப்பரை பயன்படுத்துவதன் மூலம் வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்ளலாம் அதே போல் முடி உதிர்தல் ஏற்படும் போது அதை ஆயுர்வேத அல்லது ஆர்கானிக் ஷாம்புகளை கொண்டு கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்தால் போதும்.

இதுபோல் ஹார்மோன் பிரச்சனைகள் நூற்றில் ஒருவருக்கு ஏற்படும் எனவே இதுபோன்ற பிரச்சினைகள் உங்களுக்கு இருக்கிறதா என்பதை மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு இந்த வழிகளை பயன்படுத்துங்கள் இல்லை எனில் இது போன்ற பிரச்சினைகளில் அவதிப்படுபவர்களுக்கு இந்த ஆலோசனையை வழங்குங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன