கொரோனோ வைரசுக்கு பயந்து கைகுலுக்க தடை விதித்த நாடு..!

  • by
malayasian government bans handshake because of corona virus

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கை குலுக்குவதை தவிர்க்க நினைக்கிறது மலேசியா. வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள பிறருடன் கை குலுக்குவதை தவிர்க்குமாறு மலேசியா சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் லீ பின்சாய் அவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்.

கைகளைக் குலுக்குவதை தவிர்த்து மாறாக ஒருவருக்கு வணக்கம் தெரிவிக்கவோ, அல்லது வாழ்த்து தெரிவித்து வரவேற்க்க சலாம் மலேசியா என்று குறிப்பிடலாம். ஒருவர் தனது வலது கையை தன் நெஞ்சின் மீது வைத்து வணக்கம் தெரிவிப்பதே சலாம் மலேசியா என்பதன் பொருளாகும்.

யாருக்கெல்லாம் அதிக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது 

வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட அனைவருமே இறந்து விடுவதில்லை. யாரிடமெல்லாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதோ அவர்களுக்கே இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களிடம் இது வெறும் சளி, காய்ச்சல் உடன் நின்றுவிடுகிறது. எதிர்பாற்றல் இல்லாதவர்களிடம் சளி இருமலுக்கு அடுத்த நிலையான நிமோனியா ஏற்பட்டு அதன் பின் மரணம் ஏற்படுகிறது.

மேலும் படிக்க – நச்சுகளில் இருந்து உடலை சுத்தப்படுத்த உதவும் உணவுகள்..!

எந்த வகையான உணவு வைரஸை கட்டுப்படுத்துகிறது

சாதாரண சளி காய்ச்சலுக்கு அசைவ சூப் சாப்பிட்டால் சரியாகிவிடும். அதேபோல்தான் இந்த கொரோனோ வைரசும். சைவத்தை விட அசைவ உணவுகளில் இருக்கும் புரதங்கள் அதிக நோய் எதிர்ப்பாற்றலை கொடுக்கும். இதன் காரணமாக நோய் தொற்று அதிகம் பரவாமல் பார்த்துக் கொள்ளலாம். கோழி ஆடு, மாடு மூலமாக பரவுவது என்பது மிகவும் தவறான கருத்து.

மனிதர்களிடம் உள்ள உமிழ்நீர் வழியாக மட்டும்தான் இந்த வைரஸ் மற்றவரிடம் பரவுகிறது என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் எடுக்கப்பட்டுள்ள தற்காப்பு நடவடிக்கைகள்

வைரஸை கட்டுப்படுத்த மலேசிய அரசு பல்வேறு நடவடிக்கைகளைnமேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த கை குலுக்குவதை தவிர்க்குமாறு அறிவுரை கூறப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அமைச்சர் கூறுகையில், கொரோனோ பாதிக்கப்பட்டவர்களுடன் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு கொள்ளும் போது நமக்கும் வைரஸ் தொற்று ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் எவ்வாறு மற்றவரிடம் பரவுகிறது

பாதிப்பு உள்ள ஒருவர் நமக்கு 3 அடி தூரத்தில் இருந்தபடியே இரும்பினால் கூட போதும் நமக்கு அந்த வைரஸ் பாதிப்பு ஏற்படக்கூடும்.

பாதிக்கப்பட்ட நபர் இரும்பும்போது அவரது உமிழ் நீர் துளிகள் மூலமாக கிருமி அருகிலுள்ள அவருக்கு கடத்தப்படுகிறது.

மேலும் அந்த உமிழ் நீர் துளிகள் அருகில் உள்ள மேஜை, நாற்காலிகள் லிப்ட் உள்ளிட்ட மக்கள் பயன்படுத்த கூடிய இடங்களின் மீது விழலாம். அப்படி நிகழும் பட்சத்தில் அந்த பொருட்களின் மீது உள்ள வைரஸ் ஆனது சில மணி நேரங்களுக்கு மட்டுமே உயிர்ப்புடன் இருக்கும். அந்த பொருள்களை ஒருவர் தொட நேர்ந்தால் அவருக்கு கிருமித்தொற்று ஏற்படும் என்று கூறுகிறார் மலேசியா சுகாதாரத்துறை துணை அமைச்சர்.

மலேசியாவில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

ஒவ்வொரு தனிநபரும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கழுவுதல் அவசியமானதாக இருக்கிறது. ஏனென்றால் அந்த வைரஸ் கிருமிகள் சில மணித்துளிகள் மட்டுமே உயிருடன் இருக்கும்.  கைகளை அடிக்கடி கழுவுவதன் மூலம் அந்த கிருமித்தொற்று நம்மை தாக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

கிருமிகள் இல்லாமல் கைகளை சுத்தமாக வைத்துக்  கொள்ளுவது அவசியம் என்று மலேசியா மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரில் பாதிப்பு அதிகரிப்பதாக தகவல் வெளியான நிலையில் மலேசிய குடிமக்கள் அந்நாட்டுக்கு சென்று வர தடை ஏதும் இல்லை என அமைச்சர் கூறியுள்ளார்.

கைகுலுக்குவது மூலமாக ஏற்படும் பாதிப்பு

சில மணி நேரம் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கும் இந்த  வைரஸ் நம் கைகளில் இருக்கும் பொழுது மற்றொருவரின் கைகளோடு வைத்துக் கை கொடுக்கும் போது மற்றவர்களுக்கு அந்த கிருமித்தொற்று அவர்களுக்கும் பரவ நேரிடும். இதனால் இந்த வைரஸ் கிருமியின் தாக்கம் நாடு முழுவதுமே வெகு விரைவில் பரவிவிடும். இந்த காரணத்தினால் தான் மலேசியா வாழ் மக்களுக்கு கைகுலுக்க அதற்கு தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசாங்கம்.

மேலும் படிக்க – அரளிப் பூக்களில் இருக்கும் நன்மை மற்றும் தீமைகள்..!

நம் நாட்டிலும் வைரஸ் தொற்று வந்துவிட்டதாக ஆங்காங்கே தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் இருந்தால் வைரஸ் பாதிப்பில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

தமிழர்களின் முற்போக்கு சிந்தனை 

ஒருவருக்கு கை கொடுப்பது என்பது அவரைப் பார்த்தவுடன் வரவேற்பதை குறிக்கும்.ஆனால் நம் தமிழ் பழக்கவழக்கத்தில் இரு கைகளையும் கூப்பி வணக்கம் கூறும் முறை தான் இருந்திருக்கிறது. இம்மாதிரியான வைரஸ் தொற்றுக்கள் வருமென்று முன்னரே அறிந்து கொண்டுதான் நம் முன்னோர்கள் வணக்கம் கூறும் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் போல.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன