துளசி, மஞ்சள், கிராம்பு கொண்டு தயாரிக்கும் கசாயம்..!

  • by
making health drink with tulsi,turmeric and cloves

உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக நாம் ஒரு சில வீட்டு சமையல் பொருட்களை வைத்து ஒரு அற்புத கசாயத்தை தயாரிக்கலாம். இதை தினமும் காலையில் குடிப்பதன் மூலமாக உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து எந்த ஒரு வியாதியும் உங்களை நெருங்காமல் பார்த்துக் கொள்ளும்.

கசாயத்திற்க்கு தேவையானவை

இஞ்சி, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, துளசியிலை, இளம் வேப்பிலை மற்றும் மஞ்சள். முதலில் இஞ்சியை சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் நறுக்கிய இஞ்சியை போட வேண்டும். பிறகு மிளகு, பட்டை, கிராம்பு, சீரகம் ஒவ்வொன்றாக போட்டு நன்கு கொதிக்க விடவும். அதில் மஞ்சளை சேர்த்து மீண்டும் கொதிக்கவிட்டு கடைசியில் துளசி மற்றும் இளம் வேப்பிலை அதில் போட்டு தீயைக் குறைக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து அதை எடுத்து வடிகட்டி குடித்தால் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

மேலும் படிக்க – இரவில் குளிப்பதனால் உங்களுக்கு ஏற்படும் நன்மைகள்..!

காய்ச்சலை குணப்படுத்தும்

இந்த கசாயம் காய்ச்சல் உள்ளவர்கள் குடிப்பதன் மூலமாக அவர்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இதைத்தவிர்த்து காய்ச்சல் சமயங்களில் ஏற்படும் தொண்டை வலி, உடல்வலி போன்ற அனைத்தையும் போக்கி உங்களை மீண்டும் உற்சாகமாக மாற்றும்.

நோய் எதிர்ப்பு சக்தி

மஞ்சள், துளசி, வேப்ப இலைகளில் இருக்கும் சக்திகள் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் உங்கள் உடலில் எந்த ஒரு நோய் தொற்றுகளும் பரவாமல் உங்களை பாதுகாக்கும். அதை தவிர்த்து மேலும் எந்த ஒரு பெரும் பாதிப்பும் இல்லாமல் உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த கசாயம் உதவும்.

ஜலதோஷம் பிரச்சனை

சுவாசப் பிரச்சினை இருப்பவர்கள் இந்த கஷாயத்தை குடிப்பதன் மூலமாக அவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். இதைத் தவிர்த்து ஜலதோஷம், சளி, தொண்டை வலி, வயிற்று வலி பிரச்சினைகள் உள்ளவர்கள் இதை குடிக்கலாம்.

மேலும் படிக்க – ஆரஞ்சு பழம் சாப்பிடுவதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

ஜீரண சக்தி அதிகரிக்கும்

இந்த கசாயம் உங்களுக்கு பல நன்மையை அளிக்கிறது. இவை அனைத்திற்கும் மேலாக நீங்கள் சாப்பிடும் உணவை மிக எளிதில் ஜீரணமாக உதவுகிறது. அதைத் தவிர்த்து உங்கள் உணவில் உள்ள சக்திகள் தனியாக பிரித்து உங்கள் உடல் முழுவதும் பரவுவதற்கு இந்த கசாயம் உதவுகிறது.

வயிற்றுப் பிரச்சனை, வாய் பிரச்சனை, உடல் வலி, தலைவலி போன்ற அனைத்திற்கும் தீர்வாக இந்த ஒரு கசாயம் இருக்கிறது. எனவே இதை வயது வரம்பில்லாமல் எல்லோரும் குடிக்கலாம். இதை வாரத்திற்கு ஒரு முறை குடித்தால் உங்களுக்கு எந்த ஒரு வியாதியும் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன