புற்றுநோயில் இருந்து உங்களை பாதுகாக்கும் கவா இலை டீ.!

make tea with these leaves helps you in protecting from cancer

இயற்கையானது, நமக்கு நோய்களை உண்டாக்குவதோடு அதற்கான தீர்வுகளையும் இயற்கையை உண்டாக்கி உள்ளது. இதை அறிந்த பலரும் புதியதாக மருந்துகளை கண்டுபிடிக்கிறார்கள் ஆனால் உண்மையில் நமக்கு ஏற்படும் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாக இயற்கை மூலிகை, செடிகள், மரங்கள், பழங்கள், பயிர்கள் என அனைத்தையும் உற்பத்தி செய்துவிட்டுதான் சென்றுள்ளது. இதை அறியாதவர்கள்தான் குறுக்கு வழியில் பாதுகாத்து வருகிறார்கள். பசுபிக் பெருங்கடலில் இருக்கும் கவா என்ற இலையை நாம் பயன்படுத்தி நம் உடலில் ஏற்படும் ஏகப்பட்ட பிரச்சனைகளில் இருந்து தீர்வு காணமுடியும் அதைபற்றி பார்ப்போம்.

பசுபிக் தீவுகள் சுற்றியுள்ள ஹவாய், வானுவாட்டு, மைக்ரோனேசியா போன்ற இடங்களில் கவா இலையை உணவில் சேர்த்துக் கொள்ளும் கலாச்சாரங்கள் இவர்களுக்கு இருக்கின்றன. மற்ற நகரங்களில் இதை மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள். இது தவிர்த்து இறப்பு, பிறப்பு மற்ற சுபகாரியங்கள் அனைத்துக்கும் இந்த கவா இலையை பயன்படுத்துகிறார்கள்.

மேலும் படிக்க – மாசு நிறைந்த உலகில் உங்களை காத்துக்கொள்ள ஆயுத்தமாகுங்க.!

இந்த இலையை ஆஸ்திரேலியாவில் மருந்துக்காக பயிரிடுகிறார்கள். இதய வடிவில் உள்ள இந்த இலை எப்போதும் பசுமையாக இருக்கும். இத்தாவரத்தின் வேர் நமது நரம்பு மண்டலத்தில் மற்றும் தசை மண்டலத்தில் ஏற்படும் நோயை குணப்படுத்துகிறது. இதைத் தவிர்த்து தூக்கமின்மை, பதட்டம் என பல நோய்களுக்கும் இது மருந்தாக அளிக்கப்படுகிறது.

கவா இலையைக் கொண்டு நாம் டீ தயாரித்து சாப்பிட முடியும் இதனால் நம் உடம்பில் ஏற்படும் புற்றுநோய் செல்களை அழித்து, மூளையின் செயல் ஆற்றலை அதிகரிக்கிறது. அல்சர், பதட்டம், தோல் வறட்சி என அனைத்திற்கும் இந்த இலை தீர்வாக இருக்கிறது.

மேலும் படிக்க – திடகாத்திரமான வாழ்க்கைக்கு திராட்சை அவசியமுங்க..!

இதை உட்கொள்ளும் போது ஒரு சிலருக்கு இது கூடுதலான சில பிரச்சினைகளைத் தருகிறது. அது என்னவென்றால் தலைவலி, வாந்தி, குமட்டல், மயக்கம், வயிற்றுப்போக்கு, சொரி ஏற்படுத்துதல், கல்லீரல் பாதிப்பு எனவே இதை சிறிய அளவு எடுத்துக்கொள்வது நல்லது இல்லை எனில் இது போன்ற பிரச்சினைகளில் நீங்கள் மாட்டிக் கொள்ள நேரிடும்.கவா இலைகளை காயவைத்து அதை பொடியாக்கி கொண்டு நாம் டீ போட்டு குடித்தால் நமது உடலில் இருக்கும் பிரச்சனைகளை தீர்த்து நம்மை வலுப்படுத்தும். எனவே உங்களுக்கு கவா இலையை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைத்தால் நிச்சயம் அதை வாங்கி பயன் பெறுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன