மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம்..!

  • by
mahavishnu's fourth avatar - narashiman

உலகில் எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் மகாவிஷ்ணு அவர்கள் ஒவ்வொரு அவதாரமாக எடுத்து தனது மக்களை காப்பாற்றி வந்தார். இப்படி மகாவிஷ்ணு அவர்கள் தனது நான்காவது அவதாரம் நரசிம்ம அவதாரமாக உருவெடுத்தார். இந்த அவதாரம் உருவானதற்கான காரணம் மற்றும் செயலை விரிவாக பார்க்கலாம்.

அசுர சகோதரர்கள்

சக்தி யுகத்தில் காசியப முனிவருக்கும், தித்திக்கும் இரணிய சகோதரர்கள் பிறந்தார்கள். அவர்களுக்கு இரணியகசிபு மற்றும் இரணியாட்சன் என்று பெயர் சூட்டினார்கள். உடலுக்கு ஆகாத அந்தி நேரத்தில் கூடியதால் இவர்களுக்கு அசுரர்கள் பிரிந்துவிட்டதாக மக்கள் கருதினார்கள். வராக அவதாரத்தில் இரணியாட்சனை விஷ்ணு அவர்கள் கொன்றதன் பிறகு இரணியகசிபு விஷ்ணுவை கொள்வதற்காக தீராத தவத்தை மேற்கொண்டு தன்னை வலிமைப்படுத்தி வந்தார்.

மேலும் படிக்க – விளக்கேற்றி வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பிரம்மன் அளித்த வரம்

இரணியன் பிரம்மனை நோக்கி தீராத தவத்தை மேற்கொண்டார். இதனால் இரணியனுக்கு காட்சியளித்த பிரம்மன் அவருக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார், உடனே இரணியன் தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ எந்தவித ஆயுதத்தாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது என்றும் இந்த உலகிலும் தனக்குப் போட்டியாக யாரும் இருக்கக் கூடாது என வரம் கேட்டார். அதேபோல் அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் கடவுள்களுக்கும் தானே தலைவனாக இருக்க வேண்டும் என்றும், யோகங்களாலும் மற்றும் தவத்தாலும் அடையக்கூடிய காலத்தால் அழியாத வல்லமை வேண்டும் என்றார்.

அசுரன் உருவானான்

இரணியன் மிகப் புத்திசாலித்தனமாக கேட்ட வரத்தை பிரம்மனும் அளித்தார். கிடைத்த வரத்தை பயன்படுத்தி இரணியன் தன்னால் முடிந்த பேரழிவுகளை நிகழ்த்தினார். இரணியனை அடக்க உலகத்தில் யாருமில்லை என்ற கர்வத்தில் தலைகனம் கொண்டு ஆடினான். கொடிய அரக்கனான இரணியனின் மனைவி கயாது கர்ப்பமானார், அப்போது நாரத மாமுனிவர் தாயின் கர்ப்பத்தில் இருந்த குழந்தைக்கு அரி ஸ்ரீமன் நாராயணன் அதாவது விஷ்ணு தான் கடவுள் என்று போதித்தார்.

பிரகலாதன்

அவர்களுக்குப் பிறந்த அந்தக் குழந்தைக்கு பிரகலாதன் என்று பெயர் சூட்டினார்கள். பிரகலாதன் பிறந்து கல்வி பயிலும் காலத்தில் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார், இரணியன் கடவுள் என போதிக்க ஆனால் பிரகலாதன் அரி ஸ்ரீமன் நாராயணன் நான் கடவுள் என்ன சாதித்தார். இந்த செய்தியை அறிந்த இரணியன் பிரகலாதனை வெவ்வேறு விதமாக துன்புறுத்தினான், இருந்தாலும் இரணியனின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. ஆத்திரமடைந்த இரணியன் தன் மகனைக் கொல்ல முயற்சித்தான்.

கடவுளின் ஆசி பெற்ற பிரகலாதன்

இரணியன் பிரகலாதனை கொள்வதற்காக யானையின் காலடியில் கொலை செய்யப் பார்த்தான், விஷம் கொண்ட பாம்புகள் இருக்கும் அறைகளில் அடைத்து வைத்தான், விஷத்தை அளித்தள் போன்ற அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இது அனைத்திற்கும் காரணம் பிரகலாதன் விஷ்ணுவின் மேல் வைத்திருந்த நம்பிக்கையும் பற்றும் பக்தியும் தான். இரணியனின் சகோதரி ஹோலிகா தீயினால் அழியாத வரம் பெற்றிருந்தாள். உடனே இரணியன் பிரகலாதனை ஹோலிகா மடியில் அமரவைத்து தீயில் இறக்கினான், அப்போது பிரகலாதன் விஷ்ணுவின் பெயரை ஜெபித்துக் கொண்டே இருந்தான், இதனால் ஹோலிகா மரணமடைந்தால். அன்றைய தினத்தை தான் இந்தியர்கள் ஹோலிப் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள்.

இரணியன் அசுர குணம்

எல்லா வழிகளும் தோல்வியுற்றதால் ஆத்திரமடைந்த இரணியன் தன் கையாலேயே தன் மகனை கொல்ல சென்றான். இருந்தும் பிரகலாதன் தன்னை விஷ்ணு காப்பாற்றுவார் என்று தைரியமாக சொன்னான், உடனே ஆத்திரமடைந்த இரணியன் விஷ்ணுவை வரச்சொல், அவரை என் கையால் நானே கொள்கிறேன் என்றான். அதற்கு பிரகலாதன் தன் கடவுள் எங்கும் இருப்பார், அவர் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று கூறினான்.

மேலும் படிக்க – வாழ்க்கை நிகழ்வை துல்லியமாக கணிக்கும் ஜோதிட வல்லுநர் ஆஸ்ட்ரோ குமார்.!

நரசிம்மா அவதாரம்

இரணியன் எதிரே இருந்த துணை பார்த்து உன் விஷ்ணு இதில் இருக்கிறான என்று கேட்டான், உடனே பிரகலாதன் இருக்கிறார் என்று பதிலளித்தான். அந்தத் தூணை இரணியன் பார்த்துப்பார்த்து கட்டியதாகும், உடனே பிரகலாதன் அதை உடைத்து பாருங்கள் உள்ளே என் கடவுள் இருப்பார் என்று கூறினான். உடனே இரணியன் அந்தத் தூணை உடைக்க முயற்சித்தான், உடனே உள்ளிருந்து பாதி மனிதனாகவும், பாதி சிங்கமாகவும் விஷ்ணு அவர்கள் தோற்றமளித்தார். மிகப் பெரிய சத்தத்தை எழுப்பி நரசிம்ம அவதாரத்தை எடுத்த விஷ்ணு அவர்கள் இரணியனை தன் மடியில் படுக்க வைத்து எந்த ஒரு ஆயுதமும் இல்லாமல் இரணியனை 2 ஆக பிரித்து எறிந்தார்.

மிக உக்கிரமாக இருந்த நரசிம்மனை கண்டு பிரகலாதன் துளியும் பயம் கொள்ளாமல் அவர் அருகே சென்று தனக்கு செய்த உதவிக்கு நன்றியை தெரிவித்தார். உடனே நரசிம்ம அவதாரத்தில் இருக்கும் விஷ்ணு பிரகலாதனை அந்த நாட்டு அரசனாக நியமித்தார், அன்று முதல் இன்று வரை பிரகலாதன் நேர்மையாகவும் மற்றும் மக்களின் நலனுக்காகவும் ஆட்சியை சிறப்பாக நடித்து வந்துள்ளார் என்று புராண கதைகளில் எழுதப்பட்டிருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன