மகாபாரதம் பகுதி-2 : விநாயகரால் எழுதப்பட்ட மகாபாரதம்!!!

  • by
Mahabharatam written by lord ganesha

இந்த மாபெரும் இதிகாசமான மகாபாரதம் கதையை நமக்கு அளித்தவர் வியாச முனிவர் என்று பார்த்தோம். இது ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற வேதங்களை அடுத்து  ஐந்தாவது வேதமாக நமக்கு பாடம் புகட்டும் ஒன்றாகும். 

வியாச முனிவரின் ஆசை 

இந்த இதிகாசத்தில் மனித வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய அனைத்து நிகழ்வுகளையும் மிகத் தெளிவாகவும்,அழகாகவும் நமக்கு கூறிய பெருமை வியாசமுனிவரையே சேரும். இந்த மகாபாரத கதையை நூலாக எழுதவேண்டும் என்ற ஆவல் கொண்டார் வியாச முனிவர். இதை யாரை வைத்து எழுத வைக்கலாம் என்று யோசித்தபோது அவரது நினைவுக்கு எட்டியவர் பிரம்மதேவர். 

இதனால் வியாசமுனிவர் பிரம்ம தேவனை நினைத்து மனமுருக வேண்டினார். பிரம்ம தேவனும் வியாசரின் வழிபாட்டுக்கு இணங்கி அவர் முன் தோன்றினார். அப்போது அவருடைய ஆசையை பிரம்மதேவரிடம் கூறிய வியாசர் அந்த வரத்தினை தருமாறு பிரம்மதேவரிடம் கேட்டார். 

மேலும் படிக்க – பங்குனி உத்திரத்தின் சிறப்பு வழிபாடு..!

கணபதியின் நிபந்தனை 

அதற்கு பதிலளித்த பிரம்மதேவர் இந்த பணி செய்வதற்கு நீங்கள் விநாயகப் பெருமானை மனமுவந்து வேண்டிக்கொள்ளுங்கள். அவர் உங்களுடைய இந்த ஆசையை ஈடு செய்ய துணை புரிவார் என்று கூறினார். அதன்பிறகு வியாசமுனிவர் விநாயகப் பெருமானை நினைத்து வேண்டி வணங்கி நின்றார். விநாயகப் பெருமானும் வியாசரின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர் முன் தோன்றினார். வியாச முனிவர் தன்னுடைய எண்ணத்தை விநாயகப் பெருமானிடம் தெரிவித்ததும், அதற்கு கணபதியும் ஒப்புக்கொண்டார். ஆனால் இந்த காரியத்தை செய்ய வேண்டுமானால் விநாயகர் விதிக்கும் நிபந்தனையை முனிவர் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டார். என்ன கட்டளை என்று வினவிய வியாசருக்கு, கணபதி இந்த மகாபாரதத்தை நீங்கள் தங்குதடையில்லாமல் சொல்லவேண்டும். மேலும் எக்காரணம் கொண்டும் இந்த பாரதத்தை கூறுவதை இடையில் நிறுத்தக் கூடாது என்றும் கூறினார். வியாச முனிவரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.

வியாசமுனிவரின் நிபந்தனை 

அதன்பிறகு வியாசமுனிவர் கணபதி பெருமானுக்கு ஒரு நிபந்தனையை விதித்தார். அதாவது தாங்களும் இந்த மகாபாரதத்தை எழுதும் பணியில் இருந்து ஒரு நொடி கூட நிறுத்தக்கூடாது என்று கூறினார். இதற்கு அர்த்தம் வியாச முனிவர் கூறும் அர்த்தத்தை உணர்ந்து எழுத வேண்டும் என்பதாகும். இதற்கு சம்மதித்த விநாயகரும் ஒரு நன்னாளில் இந்த இதிகாசத்தை எழுதத் தொடங்கினார். இந்த மகாபாரத கதையை வியாசமுனிவர் பாடலாக கூற விநாயகர் அதை யோசித்து யோசித்து எழுத தொடங்கினார். வியாச முனிவரின் வேகத்துக்கு ஈடு கொடுத்து விநாயகப் பெருமானும் இந்த மகாபாரதத்தை எழுதிக் கொண்டிருந்தார். எழுதிக் கொண்டிருக்கும் பொழுது விநாயகப் பெருமானின் எழுத்தாணியின் கூர் மழுங்கி போனது. உடனே தன்னுடைய கொம்பை ஒடித்து அதை எழுத்தாணியாக  பயன்படுத்தி மகாபாரதத்தை எழுதி முடித்தார் விநாயகப்பெருமான். 

மேலும் படிக்க – கொரானா பரவலை தடுக்கும் வேம்பு, மஞ்சள் கற்றாலை

இப்படித்தான் இந்த மகாபாரதக் காவியம் உருவானது. அதனால்தான் நாம் அனைவரும் இந்த கதையை இப்போது படித்துக் கொண்டிருக்கிறோம். இந்த மிகப்பெரும் காப்பியமான மகாபாரதத்தை வியாசர் தனது மகனான சுகருக்கு கற்றுக் கொடுத்தார். தேவலோகத்தில் நாரதர் இந்த மகாபாரதத்தை கற்று தேவர்களுக்கு அறியப்ப படுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன