மகாபாரதம் – அர்ஜுனனின் கற்பூர புத்தி..!

  • by
mahabharatam - sharp mind of arjunan

மகாபாரதக் கதையில் துரோணர் மிகவும் முக்கிய பங்கு வகிப்பவர். இவர்தான் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பல வித்தைகளை கற்றுக்கொடுத்த குருநாதர். அது பாண்டவர்களுக்கும் மற்றும் கௌரவர்களுக்கும் வித்தைகள் பல கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த காலம் ஆகும். ஒருநாள் திருதராஷ்டிரன் என்னும் மன்னன் துரோணரை தன் அரண்மனைக்கு அழைத்தார்.

 மன்னர் துரோணரிடம் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் எந்தவித பாகுபாடுமின்றி தானே நீங்கள் பயிற்சி கொடுக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த துரோனர் ஆம் மன்னரே நான் எந்தவித பாகுபாடுமின்றி தான் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் பயிற்சி அளிக்கிறேன் என்று விடையளித்தார். மேலும் அவர் ஒரு நல்ல ஆசானின் பணி அனைவருக்கும் ஒரே மாதிரிப் பயிற்சி அளிப்பதுதான் என்று  கூறினார்.அதற்கு மன்னர் நீங்கள் ஒரு நல்ல ஆசானாக இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன் என்று பதிலளித்தார். 

மேலும் படிக்க – கிரகணங்கள் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கின்றது!

ஆனால் துரோணருக்கு மன்னரின் பேச்சில் ஏதோ மறைந்து உள்ளது என்பது புத்திக்கு உரைத்தது. கௌரவர்கள் அவரைப் பற்றி அவரது தந்தையிடம் ஏதேனும் கூறி இருப்பார்கள் என்று யூகித்தார். அதன் பிறகு அவர் மன்னனிடம் நான் அனைவரையும் சமமாகவே நடத்துகிறேன் ஆனால் ஒவ்வொருவரின் முயற்சியும் அவர்களின் ஆர்வமும் தான் அவர்களை தனித்து காட்டுகிறது என்று கூறி விடைபெற்றார்.

அஸ்திரம் 

அடுத்த நாள் எப்போதும் போல பயிற்சியைத் தொடங்கிய துரோணர் இன்று கௌரவர்களுக்கு ஒரு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டார். அதன்படியே அனைவரையும் காட்டுக்கு கூட்டிச்சென்ற துரோணர் வழியில் வந்த ஒரு ஆற்றங்கரை அருகில் அனைவரையும் அமரச் சொல்லிவிட்டு, அஸ்திரம் ஒன்றை சொல்லி கொடுப்பதாக கூறினார். அந்த அஸ்திரத்தின் மூலம் உங்களால் காட்டை எரிக்க முடியும் என்றும் கூறினார். இந்த வித்தையை நான் இப்பொழுது உங்களுக்குக் கற்றுத் தரப் போகிறேன் எல்லோரும் கவனமாகக் கேட்க வேண்டும் என்றும் உரைத்தார். 

கமண்டலம்

அதன்படியே துரோணர் ஆற்று மணலில் ஒரு மந்திரத்தை எழுதினார். அப்போது அர்ஜுனனை அழைத்து அவருடைய கமண்டலத்தை குடியிலேயே விட்டு விட்டு வந்ததாகவும் அதை சென்று எடுத்து வருமாறும் அர்ஜுனனுக்கு கட்டளையிட்டார்.

 உடனே அர்ஜுனன் இன்றைய பாடம் மிகவும் முக்கியமானது ஆயிற்றே ஆனால் குருநாதர் நம்மை குடிலுக்கு செல்ல சொல்கிறாரே என்று மனதிற்குள் வருந்தினாலும் குருவின் பேச்சை மீற முடியாமல் குடிலை நோக்கி விரைந்து சென்றான். குருநாதரின் கமண்டலத்தை எடுத்து கொண்டு அர்ஜுனன் திரும்புவதற்குள் குருநாதர் அனைவருக்கும் படத்தை முடித்திருந்தார். அப்பொழுது அர்ஜுனன் குருநாதரிடம் பாட முடிந்து விட்டதா என்று வினவினான். அதற்கு குருநாதர் அர்ஜுனா பாடம் முடிந்துவிட்டது என்று உரைத்தார். குருநாதரிடம் தாமதமானதற்கு மன்னிப்பு கேட்டார் அர்ஜுனன். அதன்பிறகு குருநாதர் கௌரவர்களையும் பாண்டவர்களையும் அழைத்து தான் என்று கற்றுக் கொடுத்த வித்தையை வைத்து காட்டை இருக்கும்படி கூறினார். குருநாதர் கூறியபடியே மீதமிருந்த பாண்டவர்களும் கௌரவர்களும் ஒருவர் பின் ஒருவராக வந்து அம்பு எய்தினார். ஆனால் வித்தையை கற்றுக் கொண்ட ஒருவராலும் காட்டை அழிக்க முடியவில்லை. உடனே அங்கு இருந்த அர்ஜுனன், தான் இதை முயற்சி செய்து பார்க்கட்டுமா என்று துரோணரிடம் வினவினான். அதற்கு அங்கு இருந்த மற்றவர்கள் சிரித்தபடியே, கற்றுக்கொண்ட எங்களாலே முடியவில்லையே உன்னால் எப்படி முடியும் என்று கேள்வி நகையாடினர். ஆனால் துரோணர் அர்ஜுனனை முயற்சி செய்து பார்க்க சொன்னார்.

மேலும் படிக்க – தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டியது அருள்மொழிவர்மன் என்ற உண்மை தெரியுமா!!!

அர்ஜுனனின் புத்திக் கூர்மை 

உடனே அர்ஜுனன் ஏதோ மந்திரத்தை  மனதிற்குள் சொல்லிவிட்டு அம்பை காட்டை நோக்கி எய்தான். உடனே காடு தீ பிடித்து எரிந்தது. அங்கிருந்த துரோணர், அர்ஜூனனிடம் எவ்வாறு இதை செய்தாய் என்று கேட்டார். அதற்கு அர்ஜுனன் வரும் வழியில் நீங்கள் எழுதியிருந்த மந்திரத்தை படித்தேன். அதை மனதுக்குள் உரைத்துக் கொண்டு அதன் பிறகு அம்பை எய்தேன்,  அதனாலேயே காடு எரிந்தது என்று கூறினார். இதைக்கேட்டு மகிழ்ந்த துரோணர், கௌரவரவர்களைப் பார்த்தார். கௌரவர்கள் அவர்கள் தவறை உணர்ந்து வெட்கி தலைகுனிந்து நின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன